குடும்பர்களுக்கான திட்டமிடலில்

 தேவேந்திரகுல வேளாளர் சமுதாய முன்னேற்றத்திற்கான தீர்வுகள்


1.நமது சமுதாயத்திற்கு எந்த தனி மனிதரையும் தலைவராக முன்னிறுத்தாமல் அமைப்பு / சங்கத்தை மட்டும் முன்னிறுத்துதல்


2.ஊர்க்குடும்பு முறைறையை கடைபிடித்தல் 


3.கூடியமட்டும் காவல் நிலையம் செல்லுவதை தவிர்த்தல்


4. ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது


5.பட்டியல் வெளியேற்றம் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்


6.அனைத்து சங்கங்கள்/ அமைப்புகளை ஒன்றிணைத்து சமுதாய பட்டியல் வெளியேற்றம் மற்றும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுதல்  


7.பட்டியல் வெளியேற்றம் கோரிக்கையை மாநில அரசு நிறைவேற்ற தொடர்ந்து முயற்சி செய்தல் 


8.நம்முடைய சமுதாய மக்கள் தொகை அடிப்படையில் நமக்கு சேரவேண்டிய அனைத்து உரிமைகளையும் பெற நடவவடிக்கை எடுத்தல் 


9.அதிகாரத்தை கைப்பற்றுதல்


10.பொருளாதார முன்னேற்றம்


11.பொது நீரோட்டத்தில் கலப்பது 


12.சமுதாய உணர்வை உண்டாக்குதல் 


13.எதிரிக்கு எதிரியை ஆதரித்தல்


14.தேர்தல்களில் வாக்குகளை சரியான முறையில் பயன்படுத்துதல்


15.2026 தேர்தல் திட்டம்


16.படித்தவர்கள் அரசியலுக்கு வருவதை ஊக்குவித்தல் 


17.இளைஞர்களுக்கு அரசியல் பயிற்சி


18.சமுதாய வளர்ச்சிக்கு ஆளும் கட்சிகளை பயன்படுத்துதல்


19.மரபுவழி பண்புகளை மீட்பது


20.இளைஞர்கள் நல் ஒழுக்கமுடன் வளர இறை வழிபாட்டை சிறுவயதிலிருந்து கடை பிடித்தல்


21.மது போதை பழக்கங்களிலிருந்து விடுதலை பெறுதல்


22.நமது கிராமங்களில் எந்த ஒரு அரசியல் கட்சி கொடிக்கம்பங்களையும் நிருவாமல் பார்த்துக்கொள்தல்


23.தாலுகாவிற்கு குறைந்தது இரண்டு சங்கங்கள் கூட்டமைப்பு சங்கத்தில் உறுப்பினர் ஆக்க வேண்டும்


24.சமுதாயத்திற்கு என ஒரு பிரத்யேக விளையாட்டு. கபடி ஒரு நல்ல தேர்வு. மாநில அளவில் நமது சமுதாயத்திற்கு மட்டும் வருடம் ஒரு முறை கபடி போட்டிகள் நடத்துவது. வட்டம், மாவட்டம் பிறகு இறுதிபோட்டிகள் மாநில அளவில். தேவேந்திரர்களுக்காக மட்டும்


25.வருடம் ஒருநாள் பிரத்யேகமாக தேவேந்திரர்கள் ஒரே நேரத்தில் ஒரே நாளில் உலகம் முழுவதும் ஏதாவது ஒரு பண்பாட்டு விழாவை கடைபிடிப்பது (இந்திரவிழா, பொன்னேர் பூட்டுதல்)


26.இது போன்ற சமுதாய முன்னேற்றத்திற்கான சங்கங்களில் பெண்களை ஆண்களுக்கு இணையாக அதிக அளவில் பங்கேற்க செய்தல்.


27.கோவில் திருவிழாக்களில் ஆடம்பரமாக செலவு செய்வதை குறைத்து அந்தப் பணத்தை கல்வி அறிவு பெறுவதற்காகவும் சமுதாய வளர்ச்சிக்கு குறைந்த வட்டிக்கு அல்லது இலவசமாக வழங்கச் செய்ய வலியுறுத்தல்


28.வெளியூர் கந்து வட்டிக்காரர்களை உடனடியாக அதன் தீமைகள் பற்றி எடுத்துக் கூறி தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்தல்


29.ஊர் வருமானத்தை பெருக்கிடவும் அதில் ஒரு பகுதியை கல்வி பெரும் மாணவர்களுக்கு கடனாக வழங்கவும் வழிவகை செய்தல்


30.படித்து முடித்த மாணவ மாணவியர்கள் வேலை கிடைக்கும் வரை படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து கல்வியின் தரத்தை மேம்படுத்துதல்


31.படித்து முடித்து மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு தயார் செய்ய கிராமங்கள்தோறும் பயிற்சி மையம் அமைத்தல்


32.இ சேவை மையம் கிராமம் தோறும் நம்மவர்களே நடத்த ஏற்பாடு செய்தல்


33.அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து பயன்பெறச் செய்ய ஏற்பாடு செய்தல்


34.வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற மாவட்ட அளவில் அல்லது மாநில அளவில் ஒரு அமைப்பை உருவாக்கி தகுதியானவர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து கடன் உதவி செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து பொருளாதாரத்தை மேம்படச் செய்தல்


35.ஆன்மீகம் என்ற போர்வையில் மூடப் பழக்க வழக்கங்களுக்கு உட்பட்டு அறிவையும் பணத்தையும் இழப்பதை தடுத்து நிறுத்தல்


36.விவசாயிகள் உற்பத்தி பொருளை இடைத்தரகர்கள் கொண்டு செல்லாமல் இருக்க நம் மக்களே இடைத்தரகராக இருந்து உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கப்பெறச் செய்தல் 


37.நம் மக்களுக்கு அன்றாடம் வேண்டிய உணவுப் பொருள்களை நம் மக்களே மொத்த விலையில் வாங்கி, சில்லறை விலையில் விற்று லாபமடைய ஏற்பாடு செய்தல்.


38.சிலம்பம் கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை மாணவர் முதல் பெரியோர் வரை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தல் 


39.ஆண்கள் பெண்கள் இருபாலரும் அரசியலில் பங்கு எடுக்க மேடைப்பேச்சு போட்டியை நடத்தி அரசியலில் பங்கு பெறச் செய்தல்


40.பேரிடர் (வறட்சி வெள்ளம் நிலநடுக்கம் சுனாமி, நோய் தொற்று) மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தல். 


41.நவீன வேளாண்மை தொழில்நுட்பங்களையும் , நாம் வாழும் இடங்களில் வாய்ப்புள்ள தொழிலுக்கான பயிற்சியும் கிடைக்கப்பெற செய்தல்.


42.ஒவ்வொரு கிராமத்தின் வளர்ச்சிக்கான நுண் திட்டம் தயாரித்து செயல்படுத்துதல்


43.பெருகி வரும் சமூக சீரழிவிலிருந்து நம் மக்களை காக்கும் வழிகளை கண்டறிதல் 


44.ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மனித வளங்களை கண்டறிந்து தொகுத்து அவற்றை வளர்ச்சிக்கு எடுத்து செல்வது குறித்து ஆராய்தல்


45.சாதி மோதல்களை தடுத்து நிறுத்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தல்


46.தமிழ் மொழி குறித்து மொழி ஆராய்ச்சி செய்து தமிழின் பெருமையை நிலை நிறுத்திய ஐயா தேவநேய பாவாணர் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட செயல்படுத்துதல்


47.அதேபோன்று வரலாற்றில் இடம் பிடித்த நம் முன்னோர்களை பற்றிய வரலாற்றை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தல் அவர்களுக்கும் விழா எடுத்து சிறப்பு செய்தல்.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்