குடும்பனின் யோசிப்பில்
✒️தேவேந்திரர் வாக்கு தேவேந்திரர்களுக்கே என்ற கொள்கை ஒரு நுண் அரசியல் அவ்வளவுதான்..
அதனை எல்லா இடத்திலும், காலத்திலும் பின்பற்ற இயலாது.
வாக்கு அரசியலில் பெரும் புரிதல் தேவைப்படுகிறது..
கூட்டணி இல்லாமல் இனி யாராலும் ஆட்சியதிகாரத்தைப் பெற இயலாது..
ஆக நம்மை ஏற்றுக் கொள்பவர்களுக்கு நாமும் நம்பிக்கையோடு கைமாறு செய்வோம் என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டும்..
நமக்கான பிரதான கோரிக்கையை வென்றெடுக்க நம்மிடம் உள்ள திட்டங்கள் என்ன?
நம்முடைய திட்டங்களை நாமே வென்றெடுக்க முடியுமா அல்லது யாரையாவது சார்ந்து செயல்படுத்த முடியுமா என்பதை யோசிக்க வேண்டும்.
தேவேந்திரர்கள் மட்டும்தான் அரசியலால், மதத்தால் பிளவு பட்டுக் கிடக்கிறோம் என்பதை விட முரண்பட்டுச் சச்சரவுகளை வளர்த்துக் கொள்கிறோம்..
அரசியலில் நேர்மையை விட தந்து மந்துகள் தான் வெற்றி பெறுகின்றன..
தேர்தல் அரசியலே வேண்டாம் என்றவர்கள் இன்று கூட்டணி அமைத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
கொள்கைகளை விட்டு வெகுதூரம் விலகி சமரசம் ஆகி இருக்கிறார்கள்..
இன்னும் சொல்லப்போனால் அநியாயத்துக்குத் துணை போகிறார்கள் அல்லது ஆதாயங்களுக்குக் கையேந்துகிறார்கள்..
அவர்களுக்குத் தெரிகிறது மக்களுக்காகப் பேசி எதுவும் ஆகப்போவதில்லை நமக்கானதைப் பெறுவதற்கு இதுவே போதும் என முடிவு செய்கிறார்கள்..
சுதந்திரப் போரட்டகாலத்தில் உத்தம்சிங் என்ற மாவீரன் தான் இருபத்தோரு ஆண்டுகள் காத்துக் கிடந்து ஆங்கிலேயத் தளபதியை அவன் மண்ணிலே கொன்றொழித்தான்.
அதற்கு இணையாக இப்போது இருபத்தாறு ஆண்டுகள் கழித்து தூத்துக்குடியில் தம் கணவரைக் கொன்ற எட்டுக் காவலர்களுக்கு சட்டப் போராட்டம் நடத்தி ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
தனி நபர்களின் சபதங்கள் பல நேரங்களில் வெற்றி பெற்றுள்ளன.
நமக்கான போராட்டம் சமூகமாக இணைந்து செய்ய வேண்டியது.
அதற்கு அரசியல் புரிதல் அவசியத் தேவையாக இருக்கிறது...
கருத்தியல் ரீதியாக அமைப்பாக மாறாத சமூகம் தேர்தலில் வெற்றி பெறுவதில்லை..
நம்மிடையே முதலில் கருத்து முரண்பாடுகளை விட்டொழிப்போம்..
இன்னொருவர் மாற்றுக் கருத்தைச் சொன்னால் கவனத்தோடு பரிசீலனை செய்வோம்..
வெற்றி என்பது பங்காளிகளை ஒழிப்பதல்ல மாறாக பகையாளிகளை வெல்வது.
யோசிப்போம்..
©️✒️ யாழி
07.04.2025.
Comments
Post a Comment