குடும்பனின் அரசியல் பார்வையில்

 குடும்பனின் பார்வையில் அரசியல் களம்


2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அஇஅதிமுக- பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.


அதே நாளில் தமிழக பாஜக தலைவராக திரு. நயினார் நாகேந்திரன் நியமிக்கப் பட உள்ளார் என்ற செய்தியும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்த இரண்டு செய்திகளையும் தேவேந்திரர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதே நமக்கான கேள்வி..????


திமுக கூட்டணிக்கு எதிராக பலமான கூட்டணி உருவாகியிருப்பது வரவேற்கத்தக்கது தான்.


இருவரும் தனித்தனியாக நின்றால் இவருக்கும் பலவீனம் என்பதைக் கடந்த தேர்தல் நிரூபித்துள்ளது..


தமிழகத்தில் பாஜக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி இல்லை.

ஏற்கனவே திமுக அக்கட்சியோடு கூட்டணி வைத்த வரலாறெல்லாம் உண்டு.


சிறுபான்மையினரை எப்போதும் பாஜகவிற்கு எதிரான மனநிலையிலே வைத்துத்தான் தமிழக அரசியல் கட்டமைக்கப்படுகிறது..


அதே அரசியல் தான் தேவேந்திரர்களைப் பட்டியலிலிருந்து வெளியேற விடாமல் தொடர்ந்து கட்டுப்படுத்தியும் வைத்திருக்கிறது..


எத்தனை ஊழல் செய்தாலும் உயர்குடியினராக அறியப்படுபவர்கள் முன் பட்டியல் சமூக அரசியல்வாதிகள் கூட பவ்வியத்தோடு தான் நிற்க வேண்டியிருக்கிறது.


தேவேந்திரர்களின் நீண்ட காலக் கோரிக்கை பட்டியல் வெளியேற்றம் தான்..


அதிமுக பாஜக ஒன்றிணைந்து தான் நமக்கான பெயரா ணையை வழங்கியது என்பதை நெஞ்சில் நிறுத்த வேண்டிய தருணம் இதுதான்..


ஒரு வேளை தேர்தலுக்கு முன்பாக திமுக பட்டியல் வெளியேற்றத்திற்கு ஆதரவு தெரிவித்து மைய அரசிற்குக் கோப்புகளை அனுப்பினால் நமது ஆதரவை திமுகவிற்கு அளிப்பதைப் பரிசீலனை செய்யலாம்..


ஆனால் பாஜக அரசிற்கு தேவேந்திரர்கள் நன்றி உள்ளவர்களாக இல்லாத போது பட்டியல் வெளியேற்றம் எப்போதும் இலவுகாத்த கிளி போல தான்..


நாம் பல விடயங்களில் பாஜகவின் செயல்பாடுகளில் வேறுபடலாம் அதற்காக எதிர்வினையாற்றாமல் தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போல நாமும் அமைதியாகக் கடந்துபோவதே புத்திசாலித்தனம்..


ஒரு சிலர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. நயினார் அவர்க ளுக்கு எதிப்புத் தெரிவிக்கிறார்கள் ஆனால் அரசியலில் அவ்வளவு நல்லதல்ல..


காரியங்களைக் கைக்கொள்வதற்கு அருகிலுள்ளவர்களை அரவணைத்துப் போவதுதான் சிறந்தது என்பதே இயற்கை தரும் பாடம்..


தேவேந்திரர்கள் மத அடிப்படையில் அரசியலை அணுகுவது தான் இப்போது இருக்கிற பெரும் பின்னடைவு..


தனி மனித முன்னேற்றத்திற்கான அரசியலை வேறு யாரும் கைக்கொள்ளலாம்.


ஆனால் தேவேந்திரர்களுக்கு தனிமனித முன்னேற்றத்தை விட சமூக விடுதலையையே ஆகப் பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.


ஆகவே தேவேந்திரர்கள் வர இருக்கிற தேர்தலை மிக நுட்பமாகக் கையாள வேண்டும்.


ஒரு சிலர் தேவேந்திரர்களின் அரசியலைச் சிதைக்கிற வேலைகளைச் செய்கிறார்கள்..


அவர்களில் பலர் தேவேந்திரர்களே இல்லை என்பதே நிதர்சனம்..



நிறைவாக நமக்கு முன் நிற்கும் ஒரே கேள்வி

 " நீங்கள் பட்டியல் வெளியேற்றத்தை விரும்புகிறீரா?? இல்லையா?? என்பது தான். "


அதற்கான ஒரே தீர்வு அதிமுக-பாஜக கூட்டணியை ஆதரிப்பது மட்டும்தான் ..


இந்தக் கருத்தில் நீங்கள் உடன்படலாம் அல்லது மாறுபடலாம் அல்லது வெறுப்படையலாம்


ஆனால் அரசியல் ரீதியாக இதை விடுத்து வேறு பாதை நமக்கு இல்லை..


12.04.2025.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்