குடும்பனின் பார்வையில்
✒️ அவமதிப்போரைக் கையெடுத்துக் கும்பிடுவதும் ..
பெருமைப்படுத்துவோரை அவமதிப்பதும்
நியாயந்தானா சொல்...⁉️
பட்டியல் வெளியேற்றத்தைத் தடுப்பவர்கள் அல்லது விரும்பாதவர்கள் தான் பாஜகவை எதிர்க்கிறார்கள்..
எதிரான பதிவுகளைப் பரப்பி தேவேந்திரர்கள் மீதான பாஜகவின் நல்லுறவைத் தடுக்கிறார்கள்..
நாம் யாருக்கும் அடிமைகள் அல்ல...
அரசியல் ரீதியாக பாஜகவை பல கட்சிகள் எதிர்க்கிறார்கள் அது அவர்களின் அரசியல் நிலைபாடு.
நாற்றமெடுப்பதும் திரும்ப புனிதமாவதும் அரசியல் கூட்டணிகளில் சர்வ சாதாரணம்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிட்ட பாஜகவும் அதிமுகவும் இப்போது கூட்டணி சேர்ந்துள்ளன.
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத கூட்டணியாக உருவெடுத்துள்ளது..
ஏனென்றால் அவர்களது நோக்கம் நிறைவேற இருவரும் கூட்டுச் சேர்வதன் அவசியத்தை இன்று இருவருமே புரிந்து கொண்டனர்.
கடந்த தேர்தலில் இருவரும் பிரிந்து நின்றதால் குறைந்த வாக்கு எண்ணிக்கையில் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்ததைத் தேர்தல் முடிவு ஆய்வுகள் சொல்லுகின்றன..
பிரிந்த அரசியல் கட்சிகளே கூட்டணி சேரும்போது மத்திய அரசின் துணையால் தான் பட்டியல் வெளியேற்றம் நடைபெறும் என்ற உண்மையப் புரிந்தும் கூட பாஜகவை எதிர்ப்பது எவ்வகையான சூழ்ச்சி என்பதைத் தேவேந்திரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..
இதெல்லாம் சில சூழ்ச்சிக்காரர்கள் செய்யும் சதி என்பதை நாம் அறிவோம்.
"எங்க சுத்தியும் கப்பி உரலடிக்குத்தான் வர வேண்டும்" என்றொரு பழமொழி உண்டு..
நீட் தேர்வு ரத்து ரகசியம் போல நாமும் மக்களை ஏமாற்ற வேண்டாம்..
பாஜக தான் இன்னும் நான்கு ஆண்டுகள் ஆட்சி செலுத்தப் போகிறது.
தேவேந்திரர்களை உலகறியச் செய்தவர் கள் மோடிஜியும், அமித் ஷாவும் தான்.
இந்த உண்மை பலருக்கு கசக்கலாம்..
பாஜகவைப் பகைத்து நம்மால் ஒரு போதும் பட்டியல் வெளியேற்றம் பெற இயலாது..
ஒரு வேளை பட்டியல் வெளியேற்றம் நடந்தால் என்ன நடக்காமல் போனால் என்ன நான் கண்ணை மூடிக் கொண்டு எப்போதும் பாஜகவை எதிர்த்துக் கொண்டேதான் இருப்பேன் என்பவர்களை நமக்கு எதிரானவர்களாகத் தான் தீர்மானிக்க வேண்டும்.
ஒரு கட்சியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட அதே கட்சி திரும்ப அதே கட்சியுடன் கூட்டணி சேர்வதெல்லாம் தமிழக அரசியலில் சகசம்..
இன்று திமுக செய்கிற பல விடயங்களில் விசிக போன்ற பல கட்சிகளுக்கு முரண்பாடுகள் இருந்தாலும் கூட்டணி தர்மம், எதிர்கால அரசியல் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அமைதியாகக் கடந்து போவதைப் பார்க்கிறோம்..
அரசியல் ஞானம் உள்ளவர்கள் எதிரிகளின் மகுடிகளுக்கெல்லாம் ஆட மாட்டார்கள்..
தனிப்பட்ட முறையில் உங்களுக்குப் சிலரைப் பிடிக்காமல் போகலாம் அது நியாயமாகவும் கூட இருக்கலாம் ஆனால் அவரின் உதவி தேவைப்படும் என்றால் அரசியலில் விமர்சிக்காமல் இருப்பது தான் புத்திசாலித்தனம்..
பாஜக வை விட்டு விடுங்கள் இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் தலைமை தேவேந்திரர்களின் கோரிக்கை குறித்து எப்போதாவது பேசியதுண்டா..
அந்த மக்களின் பண்பாடு கலச்சாரம் குறித்தாவது பேசியதுண்டா..
நான் எத்தனை கட்சிகளில் இருந்தேன் என எனக் கே தெரியாது என்று எதார்த்த மாகப் பேசும்
தமிழகத்தின் வாழும் மூத்த அரசியல் ஆளுமை திரு. பழ.கருப்பையா அவர்கள் கூட எமது போராட்டம் நியாயமானது என்கிறார்..
அவரை விடச் சமூக, அரசியல் எதார்த்தங்களைப்பொது வெளியில் துணிச்சலோடு பேசுபவர் எவருமில்லை..
"அருந்ததியருக்கு வழங்கிய மூன்று சதவீத உள்ஒதுக்கீடும், 200 பாயிண்ட் ரோஸ்டர் முன்னுரிமையும் பட்டியல் சமூக மக்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும்"
என்ற உண்மையை புதிய தமிழகம் Dr.K.K ,சீமான் போன்றவர்கள் துணிச்சலோடு பேசுகிறார்கள்..
உண்மை எனத் தெரிந்தும் பலர் வாய்மூடி மெளனிக்கிறார்கள் என்றால் இது இப்போதைக்கு நமக்குத் தேவையில்லாத சமாச்சாரம் என்று தீர்மானிக்கிறார்கள்.
தேவேந்திரர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எதிரிகள் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களை பாஜகவுக்கு எதிரான மனநிலைக்கே தள்ளுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள்..
இன்னும் நான்காண்டுகளுக்குள்ளாகவாவது பட்டியல் வெளியேற்றத்தைப் பெற்று விடுங்கள்..
இல்லையேல் எதிரிகளின் சூழ்ச்சி வலைகளில் சிக்குண்டு நீர்த்துப் போக வேண்டியதுதான்..
உங்களைத் 'தலித்' என்று அடையாளப்படுத்துவோரை கையெடுத்துக் கும்பிடுகிறீர்.
ஆனால் 'உங்களைப் பெருமைக்குள்ளாக்குவோரை வெறுக்கிறீர்' என்றால் வெறுப்பரசியலால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று தான் பொருள்..
ஆகவே நமக்கு எதிரிகளாக இருப்பினும் பொதுக் காரியத்தைக் கைக்கொள்ளக் கைகோர்ப்பது தான் சாணக்கியத்தனம்..
நன்றி.
©️✒️ யாழி
22.04.2025.
Comments
Post a Comment