குடும்பனின் துயரப்பார்வையில்
✒️தமிழ்மண்ணில் தமிழர்களால்
தமிழர்களுக்கு நேரும் துயரங்கள்
மாற வாய்ப்புகள் உண்டா⁉️
கீழத்தஞ்சையில் நிகழ்ந்த ' ''சாணிப்பாலும் சவுக்கடியும் " அது ஒரு கொடிய துயரமான வரலாறு..
எழுபது எண்பதாண்டுகளுக்கு(70-80) முன்னோக்கிச் செல்லவேண்டும்...
கீழத்தஞ்சையில்
பண்ணையார்களால்விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட
தண்டனை முறைகளில் மிகக்கொடியது சாணிப்பாலும், சவுக்கடியும் தான்...
அடிபணியாத அல்லது தவறிழைத்த அல்லது ஒத்துழைக்க மறுத்த கூலிகளின் உடலின் மீது வைக்கோல் பிரி சுற்றி வெயிலில் கட்டிப்போடுவார்கள்..
உடலில் சுற்றப்பட்ட பிரிமீது தண்ணீர் ஊற்றப்பட்டதும் அது இறுகி உடலை நெருக்கும்..
சாணிப்பாலை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்து வெயில் படும்படியாக மரத்தில் கட்டிப்போடுவார்கள்.
வெயிலில் உடல் சூடேறி வயிற்றுக்குள் வேதிவினை நிகழ்ந்து தரும் துயரம் துடிக்கச் செய்யும்..
வெற்றுடம்போடு மரத்தில் கட்டிவைத்து சவுக்கால் அடிப்பார்கள்..
இதெல்லாம் கீழ்த்தஞ்சையில் வாழ்ந்த விவசாயக்கூலிகள் மீது பண்ணையார்கள் நிகழ்த்திய கொடுந்தண்டனை முறைகள் அவை.
பெண்கள் மீது ஏவப்பட்ட அத்துமீறல்கள், வன்முறைகள் கொடுத்துயரங்கள் எல்லாம் வெளியே சொல்லமுடியாதவை.
இவற்றை எதிர்த்துத்தான் செங்கொடி இயக்கம் கட்டமைக்கப்பட்டது....
பல நூறு போராளிகள் அழிக்கப்பட்டனர்.
ஒரு ஊரில் விவசாயக்கூலிகள் எதிர்த்துப் போராடினால் பக்கத்து கிராமங்களிலிருந்து அடியாட்கள் இறக்கப்படுவார்கள்..
அவர்கள் சூரையாடுவார்கள்..
மோதல்கள் நடக்கும்.
குடிசைகள் வாழிடங்கள் வழிபடும்..
தங்க இடத்துக்கும்
வயிற்றுப்பாட்டுக்கும்
போராட வேண்டிவரும்..
இதையெல்லாம் எதிர்த்துத்தான்
களப்பால் குப்புசாமி தேவேந்திரர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையிலேயே கொல்லப்பட்டார்.
கீழவெண்மணியில் 44 உயிர்கள் குடிசையில் வைத்துக் கொழுத்தப்பட்டன..
கோபாலகிருஷ்ண நாயுடுவை காங்கிரசும், திராவிடக் கட்சிகளும் கண்டிக்கவில்லை..
சித்தமல்லி முருகையன் தேவேந்திரர் எம்.பி படுகொலை செய்யப்பட்டார்.
அப்போது ஒடுக்கப்பட்ட/ தாழ்த்தப்பட்ட மக்கள் தலித் என்று அடையாளப்படுத்தப்படவில்லை.
விவசாயக்கூலிகள் என்ற அடையாளத்தில் ஒடுக்கப்பட்டனர்..
ஆனால் அதிகம் எதிர்வினையாற்றியதும், பாதிக்கப்பட்டதும் தேவேந்திரகுல வேளாளர்கள்தான்..
இப்போது மாதிரியான 'மள்ளரியம்,' 'தேவேந்திரனியம்' போன்ற புதிய கருத்தியல்கள்
அப்போது எழவில்லை..
பண்ணையார்களிடமிருந்து விடுதலை பெறுவது மட்டும்தான் நோக்கமாக இருந்தது.
சமரசமில்லாத போராட்டங்கள் வலுப்பெற்றன.
எதிர்வினைகள் முற்றுப்பெறாமல் தொடர்ந்தன..
காங்கிரஸ் கட்சி முழுதாக பண்ணையார்களுக்கு ஆதரவாகவும் ஏழைக் கூலிகளுக்கு எதிராகவும் செயல்பட்டது..
ஆகவேதான் இன்றுவரை நாகைத் தொகுதியில் காங்கிரஸ் களமாட முடியாமல் போனது.
நீடாமங்கலத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி நிருவாகிகள் கூட்டத்தில் 'சமபந்தி விருந்து' என்று நடத்திவிட்டு பந்தியில் அமர்ந்த தேவேந்திரர் ஆசீர்வாதம் போன்றவர்களை விறகுக்கட்டையால் அடித்து மண்டை கிழிய விரட்டினார்கள்.
இந்தத் துயரங்களை எதிர்த்துத்தான் கம்யூனிசம் வந்தது..
அதனை விரட்டிவிட்டுத்தான் பிறகு திராவிடம் நுழைந்தது ...
இப்போது எல்லாரும் ஒரே அணியில் பயணிப்பதுதான் துரதிர்ஷ்டம்..
கூலிகளின் துயரமோ, அவமானப்பட்ட பிழைப்போ மாறவே இல்லை..
நவீன அரசியல் களம்
தியாகிகளின்
கல்லறைகளுக்கு வண்ணம் பூசி விழா எடுத்துச் சிறப்பிக்கிறது..
வழக்கம்போல
வலுத்தது வாழ்கிறது..
கடவுளின் வழிபாடுகளை கேலி செய்தவர்களின் சிலைகள் வணங்கப்படுகின்றன..
அதே ஆறு
அதே வயல்வெளி
அதே பண்ணையார்கள்
அதே வறுமை
அதே கொடுமை
அதே அரசியல்
அதே துயரம்...
ஆனால்
ஒப்பாரிகள் மட்டும் ஓயவில்லை...
"நடுக்கடலுக்குப் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கணும்"
என்ற பழமொழியும் மாறவேயில்லை...
தஞ்சையில் நிலவிய
சாணிப்பாலும்
சவுக்கடியும் மாறியிருக்கிறது...
நெல்லையில்
கழுத்தறுப்புகள் தொடர்கின்றன ...
மாற்றத்திற்கு என்னதான் தீர்வோ ...
©️✒️மடைக் குடும்பர்.
25.11.2023.
Comments
Post a Comment