குடும்பனின் நினைவூட்டலில்
15.11.2023 புதன்கிழமை
1980 களில் அரிச்சந்திர மயானகாண்டம் நாடகத்தில் தப்படிக்கிற காட்சியை தடுக்க பறையர் சமூகம் போராடியது..
அரிச்சந்திரா நாடகங்களைத் தடுத்து நிறுத்தினர்.
வம்பு வழக்காகி நீதிமன்றம் சென்ற வரலாறு எல்லாம் உண்டு.
ஆனால் அதையே தற்போது தப்பாட்டக்கலையாக்கி ரசிக்கின்றனர்.
அதற்கு மாற்றாகத்தான் கொங்கு கும்மியாட்டம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது எனக் கருதுகிறேன்.
1950களில் கிராமங்களில் நடக்கும் கோயில் விழாக்களில் ஆண்களும் பெண்களும் கலந்து ஆடும் "முளைக்கொட்டு" என்ற கும்மி ஆட்டம் நடைபெற்றன.
ஆவுடையார்கோயில் தாலுகா ஏம்பல் கிராமத்தில் இவ்வகையான முளைக்கொட்டு வெகுசிறப்பாக நடந்ததாகப் பேசப்படுகிறது.
பல கிராமங்களிலிருந்து முளைக்கொட்டுப்பார்க்கவும் ஆட்டத்தில் பங்குபெறவும் ரசிகர்களும், முளைக்கொட்டுக்காரர்களும் வந்துள்ளனர்..
அந்த இரவு காதலர்களால் பெருமைப்படுத்தப்பட்டதான செய்திகளும் உண்டு..
கோயில் விழாக்களில் முளைப்பாரி எடுப்பதும், முளைக் கொட்டும் பெருவாரியான மக்களால் விரும்பப்பட்டன போலும்..
தமிழர்களின் பல பாரம்பரியமான கூத்துகளும், நடனங்களும், கலைகளும் நாளடைவில் மங்கிப் போய்விட்டன.
நவீனம் என்ற பெயரில் தமிழர்களின் கிராமபுற கலைகள் ஓரங்கட்டப்பட்டன.
தஞ்சை மராத்தியமன்னர்களின் ஆட்சிக்காலங்களில் மராத்தியக் கிராமக் கூத்துகள் தஞ்சைப் பகுதியில் பரவின.
கூத்தாடிகள் அல்லது நடன, நாட்டிய, நாடகக் கலைஞர்களுக்கென தனி வீதிகளும் குடியிருப்புகளும் இருந்தன..
திரைப்படத்தின் வருகையால் பல கிராமியக் கலைகள் அழிந்துபோயின.
கிராமியக் கூத்துக் கலைஞர்களை ஆதரிக்க நாதியில்லாமல் போனது..
தேவரடியார்கள் கோயில்களில் இருந்து பிழைப்புக்காக வெளியேறினர்..
பிழையான கருத்தியல் பரப்பப்படன..
தேவரடியார்களை தேவுடியாள் என்று அழைத்துச் சிறுமைப்படுத்தினர்.
ஆனால் யார் கலைஞர்களை விமர்சித்தார்களோ அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை அதை விட மோசமாக இருந்ததை அப்போது இருந்தவர்கள் கவனிக்கத் தவறினர்.
ஆக மொத்தத்தில் கலைகள் அழிந்துபோயின..
கலைஞர்கள் வறுமைக்கு ஆட்பட்டு தொழில்மாற்றங் கொண்டனர்..
ஒரு கட்டத்தில் இப்படியான மாற்றம் பெற்ற தொழில்முறைக் கலைஞர்கள் கிராமப்புறங்களுக்கு தங்கள் கலையை நகர்த்தினர்.
அப்படி வந்த கலைஞர்களை வேளாண்குடிகளான தேவேந்திரகுல வேளாளர் சமூகம் ஆதரித்துக் கலைஞர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கியது..
இதையெல்லாம் பல தலைமுறைகள் அறியாமல் கடந்துவிட்டன..
நினைவூட்ட வேண்டியது நமது கடமை..
15.11.2023.
Comments
Post a Comment