குடும்பனின் பாரம்பரிய பாதுகாப்பில்
குடும்பனின் (பாரம்பரிய மரபு பாதுகாப்பு) பார்வையில்
1.11.2023
✒️கள்ளர் சமூகத்திற்கான திருமணப் பதிவு முகாம்கள் ....
போன்றவை
காலத்தின் தேவை...
தாவரங்கள், விலங்குகள், பறவைகளின் மரபணு மாற்றப்படாமல் பாதுகாப்பதற்கு வழங்கப்படும் முன்னுரிமைத் திட்டங்களைப் போலவே சமூகங்களின் மரபணுவும் பாதுகாக்கப்பட திட்டங்கள் வேண்டும்..
உம்பளச்சேரி மாடுகள்..
காங்கேயம் காளைகள்...
மணப்பாறைக் காளங்கன்றுகள்...
நாட்டுக்கறவை / காளை மாடுகள்...
போன்றவற்றில் கலப்பினம் ஆகாமல் பாதுகாப்பதற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் தமிழ்ச் சமூகங்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்..
நாட்டு மாடுகள் அழிந்துபோனால் மஞ்சுவிரட்டு எனும் தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டு அழிந்துபோகும்..
கிளிமூக்குச் சேவல் எனப்படும்
தாராபுரம், பழனி, மணப்பாறைப்பகுதிகளில் வளர்க்கப்படும் சேவல் இனங்கள் அழிந்துபோனால் சேவற்கட்டு எனும் தமிழர் வீரவிளையாட்டுக் கலை அழிந்துபோகும்..
முத்துப்பேட்டை உம்பளச்சேரி மாட்டினம் அழிந்துபோனால் விவசாயம் சார்ந்த பணிகள், கிடை மாடுகளுக்கும் தட்டுப்பாடு வந்துவிடும்..
நெல்லில் அதிக மகசூல் பெறுவதற்காக ஒட்டு ரகங்கள் கண்டறியப்பட்டதால் பசி நீங்கியுள்ளதே தவிர சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை கூடியிருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு சமூகமும் தனித்துவமான மரபணுக்களைப் பெற்றுள்ளன.
ஆகவே அவரவர் மரபணுக்களோடு இணைந்து திருமணம் செய்வதும் போற்றப்படத்தான் வேண்டும்.
கலப்பினச் சேர்க்கை வந்தபிறகுதான் தமிழர்களின் பாரம்பரிய வாழ்வியல் முறைகள் மாறிப்போய்விட்டன.
கலப்பினப் பசுக்களை இறக்குமதி செவ்வதால் பால் உற்பத்தி பெருகுமே தவிர தரமான, வீரியம் நிறைந்த மாட்டினங்கள் அழிந்து வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசியலுக்காக கலப்புத்திருமணங்களை ஆதரிப்பதை விட்டொழிப்போம்..
கலப்புத் திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகள் அறிவாளிகளாகப் பிறப்பார்கள் என்பதெல்லாம் பெரும் பித்தலாட்டங்கள்.
அப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டில் பெரும் அறிவாளிகள் எல்லாம் யார்?
ஆகவே கள்ளர் சமூகத்திற்கான திருமணப் பதிவு முகாமை வரவேற்போம்..
மாற்றங்களை விரும்பிப்போய்ச் சிக்குகிறவர்கள் போகட்டும்..
தாவரங்கள், விலங்குகள், பறவையினங்களைப் பாதுகாப்பதுபோலவே தமிழர் கலாச்சாரமும் மரபுவழியான திருமண முறைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ளவர்கள் வீரத்தில் சிறந்து விளங்கக் காரணம் அந்நியப் படையெடுப்புகள் யாவும் அப்பகுதி வழியாகவே நிகழ்ந்தன.
அவற்றைத் தொடர்ந்து எதிர்கொண்டதால்தான் ஒரு வீரம்செரிந்த பரம்பரை உருவாகி நிலைபெற்றுள்ளது.
பிராய்லர் கோழிகளும், சிந்துப் பசுக்களும் உணவுக்குத் தோதுப்படலாம் ஆனால் உணர்வுக்குத் தோதுப்படாது என்பதை உணர்வோம்.
தமிழர்களின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் திருமண உறவுமுறைகளும் முக்கியப் பங்கு வசிக்கின்றன.
இவற்றையெல்லாம் விட்டுக் கொடுப்பதால்தான் இன்று மலட்டுத்தன்மையும், விவாகரத்துகளும், வாழாவெட்டிகளும், ஓரினச்சேர்க்கையாளர்களும் அதிகரித்து வருகின்றனர்..
திருமணம் என்பது வெறும் சில்லு விளையாட்டல்ல..
வெற்றிபெறுவதற்காகவே விட்டுக் கொடுத்துத் தோற்றுப்போகிற மகா உன்னதமான விளையாட்டு..
பிரியப்படுகிறவர்கள் எப்படியோ தொலையட்டும்...
சம்சாரித்தனத்திற்குத் தோதான வாழ்க்கைக்கு இம்மாதிரியான திருமணப் பதிவு முகாம்களை ஆதரிப்போம்..
தமிழினத்தை மரபு மாறாமல் பாதுகாப்போம்..
©️✒️மடைக் குடும்பர்.
01.11.2023
Comments
Post a Comment