குடும்பனின் பார்வையில்
✒️காற்றிலே கம்பு சுத்துதலும் வீண்...
சேற்றிலே கல்லெறிதலும் வீண்..
குளத்தைக் கலக்கி பருந்து கையிலே கொடுப்பதும் வீண்...
பட்டியல் வெளியேற்றம் பாஜக அரசால் மட்டுமே சாத்தியம் எனத் தெரிந்தும் பாஜகவை கடுமையாக எதிர்க்கிறவர்கள் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்..
இதை எப்படிப் புரிந்துகொள்வது.?
வட இந்தியாவில் நிகழும் வன்முறைகளுக்கெல்லாம் பாஜகதான் காரணம் என்று பேசுகிறார்கள்.!!!!!
ஆனால் தென் தமிழகத்தில் நடக்கும் தாக்குதல்களுக்கும், கொலைகளுக்கும் யார் காரணம்.?
தடுக்கத் தவறுகிறவர்கள் யார்?
பொதுத்தேர்தல் பரப்புரையில் செந்தில்பாலாஜி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அப்பட்டமாக மறைத்து அவருக்கு மந்திரி பதவி தந்த கொடுமையை எப்படி அணுகுவது?
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம்,
மதுவை ஒழிப்போம்
எனப் பேசியதெல்லாம் மறந்தா விட்டது..!!!!!
ஐடி விங்குகள் மடைமாற்றம் செய்கின்றன..
பட்டியல் வெளியேற்றம் பற்றிப் பேச தேவேந்திரகுல வேளாளர் சமூக எம்பி, எம்எல்ஏ.க்கள் தயாராக இல்லையே..
அந்த கண்றாவிப் பொழப்பு எதற்கு?
பட்டியல் வெளியேற்றத்திற்காகத் தன்னால் இயன்ற மட்டும் போராடும் அல்லது முயற்சிக்கும் திரு.கண்ணுசாமி போன்றவர்களையெல்லாம் விமர்சிக்கிறோம்..
இதெல்லாம் எந்த வகை அரசியல்.?????
ஒரு வாட்சப் குரூப் உருவாக்கி நடத்துகிறவர்களுக்கு ஒரு செயல்திட்டம், நோக்கம் இருக்க வேண்டும்..
இருநூறு, முந்நூறு பேர்களைச் சேர்த்து வைத்திருப்பதால் எந்தப்பயனும் ஏற்படப்போவதில்லை..
பட்டியல் வெளியேற்றத்தை எதிர்ப்பவர்களையும்,
ஆதரிப்பவர்களை விமர்சிப்பவர்களையும் வெளிப்படையாகக் கண்டியுங்கள்.
அல்லது குழுவிலிருந்து வெளியேற்றுங்கள்.
ஒன்றும் குடிமுழுகிப் போகாது..
ஒத்த போக்கைத் தடுக்கிறவர்களால், முயற்சிக்கிறவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும்..
இதுவும் கூட ஒரு திட்டம்தான்..
அரசு ஊழியர்கள் மட்டுமல்ல சமூகத்திலுள்ள அனைவருக்கும் பொறுப்பும் கடமையும் இருக்கிறது..
களைகள் ஊடாவது இயற்கைதான்.
பெயர் மாற்றம் வரவே வராது என வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்தவர்கள் இப்போது இருந்த இடம் தெரியாமலே போய்விட்டார்கள்..
முடிந்தவரை உறவுகளாகப் பயணிக்கப் பழகுவோம்.
முரண்பட்டு கருத்துக்களைப் பதிவிட்டு பகையை வளர்த்து என்னவாகப் போகிறது.
இன்னும் சொல்லப்போனால் நானும் நீங்களும் முகம் பார்த்ததுகூட கிடையாது..
சமூகம் என்ற அடிப்படையில் ஒன்றிணைகிறோம்..
தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியில் வாழும் தேவேந்திரர்களுக்கும் பழக்கவழக்கம். செயற்பாடுகள், அரசியல் பின்பற்றல்கள், போர்க்குணம், எதிர்வினையாற்றும் பண்பு, அடங்கிப் போகும் குணம், கூலிக்குமாரடிக்கும் போக்கு எனப் பல நிலைகளில் வாழ்கிறோம்..
ஆனால் அனைத்திலும் விஞ்சிநிற்பது போர்க்குணமே...
அடையாளத்தோடு வாழவேண்டும் என்கிற வைராக்கியம்..
முதலான குணங்களில் ஒத்துப்போகிறவர்கள் இணைந்து போராடுகிறோம்..
காலம் நீளுமே தவிர பட்டியல் வெளியேற்றம் நடந்தே தீரும் என்பதில் நம்பிக்கை கொள்வோம்..
அதற்கான செயற்பாட்டாளர்களை ஊக்கப்படுத்துவோம்.
அதுவே
நாம் செய்யும் பணி...
தேரைச் செய்தவர்கள் இப்போது இல்லை...
ஆனால்
எல்லோரும் கூடினால்தான் தேரை இழுக்க முடியும்..
வாழ்க தேவேந்திரனியம்..
©️✒️மடைக் குடும்பர்.
30.11.2023.
Comments
Post a Comment