குடும்பனின் பாரம்பரியத்தில்

 



திருச்செந்தூர்

 கந்தசஷ்டி - 2023


     தெய்வ திருமண விழா 



அருள்மிகு முருகபெருமானுக்கும் , அருள்மிகு தெய்வேந்திரன் மகளாகிய தேவேந்திரகுல திருவளர்செல்வி தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடந்த பிறகு திறக்கபடும் பாண்டியர்களின் மேற்கு ராஜகோபுர வாசல் !



திருச்செந்துாரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் 7 ஆம் நாள் விழாவில் இரவு 11 மணிக்கு மேல் நடைபெறும் அருள்மிகு முருகன்- தெய்வானை திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும்.


அதன் பிறகு 8 ஆம் நாள் விழாவில் அருள்மிகு முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்திலும் - அருள்மிகு தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் நான்கு விதிகளிலும் பட்டினப் பிரவேசம் செய்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.


"பட்டினப்பிரவேசம்" என்பது தேவேந்திரகுல வேளாளர் வாழ்வியலில் கடைபிடிக்கப்பட்ட முக்கிய பழக்கவழக்கமாகும்.


"தேவேந்திரகுல வேளாளர்கள்" திருமண விழா நடைபெற்ற பின்னர் மணமக்களை பல்லக்கில் வைத்து பட்டினப்பிரவேசம் என்று ஊரை சுற்றி கொண்டு வரும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. நாகரிக வளர்ச்சியின் காரணமாக இந்த பாரம்பரிய வழக்கம் நம் மக்களிடையே படிப்படியாக குறைந்து போய்விட்டது.


தேவேந்திரகுல வேளாளர் பண்பாடுகளையும் பாரம்பரியங்களையும் பாதுகாப்போம்.. அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்போம்.


நன்றி


திருச்செந்தூர் தேவேந்திரகுல வேளாளர் அற மடங்கள்.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்