குடும்பனின் தேவையில்
✒️"மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலியறுக்க வேண்டும்"...
என்ற சிந்தனையிலிருந்து விடுபடுங்கள்..
திராவிடத்தை ஏற்றுக்கொண்ட இஸ்லாமிய இயக்கங்கள் தம் குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டுவதே இல்லை..
அதற்கு கிறிஸ்தவர்களாகவது பரவாயில்லை..
ஆரோக்கியசாமி
அடைக்கலசாமி
உபகாரச் சாமி
ஞானப்பிரகாசம்
இருதயசாமி
அருளானந்துசாமி
தீர்க்கதரிசி
உலகநாதன்
ஆசீர்வாதம்
மரிய ரஞ்சிதம்
இப்படி எண்ணற்ற தமிழ்ப்பெயர்களைச் சூட்டி தமிழ்மொழியின் பற்றை விசுவசித்தனர்.
இந்து மதவெறி, இந்துத்துவா, சனாதன எதிர்ப்பு எனப் பேசுவோர் யோசிக்கட்டும்.
எல்லாருக்கும் மதப்பற்று இருக்கிறது, சாதிய உணர்வு இருக்கிறது.
மொழி உணர்வு இருக்கிறது.
இதையெல்லாம் மறுத்தால் அது பித்தலாட்டம் எனப்பொருள்..
அரசியல் ஆதாயத்துக்காக கொள்கைகளில் சமரசம் செய்து முற்போக்குவாதம் பேசுகிறார்கள்..
மணிப்பூர்/மிசோரத்தில் நடக்கும் கொடுமைகளைப் பேசுகிறவர்கள்,
பாலஸ்தீனக் கொடுமைகளைப் பற்றிப் பேசுகிறவர்கள்
தென்தமிழ்நாட்டில் தேவேந்திரகுல வேளாளர்கள் மீதும் நடத்தப்படும் படுகொலைகள் பற்றி வாய்திறக்க மாட்டார்கள்..
ஹமாஸ்க்கு ஆதரவாகப் பேசும் தமிழர்கள் தேவேந்திரர்களுக்கு ஆதரவாகப் பேசப்போவதில்லை..
இங்கே புதிய தமிழகத்தை விமர்சிப்போம்..
தமமுகவை விமர்சிப்போம்..
பாஜக.வை விமர்சிப்போம்...
காரணம் நாம் உள்வாங்கிய அரசியல் சித்தாந்தங்கள் அப்படியானது..
விடுதலைப்புலிகள் விசயத்தில் முரண்பட்ட காங்கிரஸ், திமுக, மதிமுக, விசிக ஒரே அணியில் நிற்கின்றன..
திமுகவை ஒழித்தே தீருவேன் என்று தொடங்கப்பட மதிமுக தம் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ஜால்ரா போடுகிறது.
ஆறேழு பேர் தற்கொலை செய்ததுதான் மிச்சம்.
மக்கள் நலக் கூட்டணி மக்கள் விரோதக் கூட்டணியாகிப்போனது..
ஒரு கட்சியின் தலைவர் இன்னொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டசபையில் மார்தட்டிப் பேசுகிறார்கள்..
அதற்கும் மேசை தட்டி வரவேற்பு வேறு...
இப்போது எனக்கு பெருமாள்முருகனின் மாதொருபாகன் கதைக்கு நேர்ந்த கதிதான் நினைவுக்கு வருகிறது..
நடந்ததைச் சுட்டிக்காட்டினால் கண்டனங்கள் எழும்.
காலம் ஒரு நாள் புகழ்ந்து, பாராட்டுவிழாவும் எடுக்கும்..
தேவேந்திரர்கள் பட்டியல் வெளியேற்றம் என்ற கருத்தியலை முன்வைத்து மட்டுமாவது ஓர் இணக்கமான அரசியலை ஆதரித்தால் நல்லது..
நீங்கள் காங்கிரஸ்காரராகவோ..கம்யூனிஸ்ட்டாகவோ, திமுக, அதிமுக, நாம் தமிழர்,
அல்லது அந்தப் பரம்பரையினராகவோ இருக்கலாம்...
அல்லது பாஜக வுக்கும் இந்துத்துவாவிற்கும் எதிரானவராகவும் இருந்துவிட்டுப்போங்கள்...
தேவேந்திரர்களுக்கான கோரிக்கையை எப்படி எந்த அரசியலை ஆதரித்து வெற்றிபெறப்போகிறோம்.?
மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலியறுக்கத்தான் வேண்டும் என்ற மனநிலையை ஒருபோதும் ஆதரிக்காதீர்..
நம் முன்னோர்களின் காலம் வேறு..
நாம் வாழும் காலம் வேறு ...
வரும் தலைமுறைகள் அரசு சலுகைகளை மட்டுமே நம்பி வாழப்போவதில்லை.
அரசியல் வாதிகள் ஒரு போதும் வறுமை வாய்ப்படப்போவதில்லை.
உயர் பண்பாட்டுச் சமூகம் என்ற பெருமித உணர்வு இருந்தால் வறுமையிலிருந்தெல்லாம் வெற்றிபெற முடியும்.
எந்த மதமும், கடவுளும் மனிதர்களை மூப்பிலிருந்தும், நோய் நொடிகளிலிருந்தும்,
மரணத்திலிருந்தும்
பாதுகாக்கப்போவதில்லை.
எல்லாமும் சுயநலவாதிகளின் கட்டுமானங்கள் ..
இயற்கையான வாழ்க்கைக்கு அறம் முக்கியம்..
சமூக ஒழுங்கு முக்கியம்.
பேராசையும், அடிமைத்தன ஆதரவும், அதிகாரத்தோடு வாழத் துணிகிற ஆசையும் நிரந்தரமானதல்ல..
சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று வாய்கிழியப் பேசுவதெல்லாம் பெரும் பொய்.
அடிமைத்தனத்திலிருந்து விடுதலை...
தாழ்த்தப்பட்டவர்கள் என்ற அவமானத்திலிருந்து விடுதலை...
இந்தச் சராசரி வாழ்க்கைக்குத்தான் போராடுகிறோம்.
76 பட்டியல் சாதிகளில் தேவேந்திரகுல வேளாளர்கள் மட்டும்தான் இந்த கருத்தை முன்னெடுக்கிறோம்.
இலாகா இல்லாத ஓர் அமைச்சர் சிறைவாசம் இருப்பதை நினைத்துப் பாருங்கள் .
இதையெல்லாம் மறைக்க எத்தனையோ நாடகங்கள்..
என்று தனியும் எம் சோகம் நிறைந்த துயர வரலாறு...
யாரும் எந்த அரசியலையும் கட்டி அழுதுவிட்டுப் போங்க...
பட்டியல் வெளியேற்றத்திற்காகவாவது ஓரணியில் நில்லுங்கள்.
வாழ்க தேவேந்திரனியம்.
Comments
Post a Comment