குடும்பனின் படிப்பில்

 ஒரு குடம் நஞ்சில்

ஒரு துளி

அமுது விழுந்தது


அமுதை

தமக்குள் கரைத்திட

நஞ்சுகள் சேர்ந்தன


அமுது

நஞ்சாக

மறுத்து எதிர்த்தது


ஒரு குடம் அமுதில்

ஒரு துளி வீழ்ந்து

குடம் முழுதையும்

நஞ்சாக்கிவிடுவோம்


ஒரு துளியாய்

நீ இருந்து

ஒரு குடம்

எங்களை எதிர்ப்பதாவென

நஞ்சர்கள் ஆவேசமடைந்தனர்


அடித்தாலும்

உதைத்தாலும்

பிய்த்தாலும்

அமுதாய் சிதறி மடிவேனேயன்றி

நஞ்சாய்மாறேனென

அமுது திடமாய் நின்றது


அமுதன்பின் பிசுபிசுப்பில்

நஞ்சர்கள் ஒட்டி ஒட்டி

அமுதாய்

திரிய தொடங்கினர்


திரிதலின் முழுமையில்

பொங்கிய அமுதம்

துளி துளியாய் பிரிந்து

நஞ்சர்களின் கூட்டங்களில்

தனித்தனியாய் வீழ்ந்தது


செம்பரிதி 

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்