குடும்பனின் இலக்கில் - பட்டியல் வெளியேற்றம்
"குடும்பனின் இலக்கில் - பட்டியல் வெளியேற்றம்"
13.20.2023
"✒️
கையெழுத்து இயக்கம் கைகொடுக்கும் என நம்புவோம்.."
ஆயிரத்துத்தொள்ளாயிரத்து எண்பதுகளிலேயே (1980) தஞ்சைத்தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வ.ஐ.சுப்பிரமணியம் தஞ்சைச் சுற்றுவட்டாரக் கிராமப்புறங்களில் எழுதப்படிக்கத் தெரியாத கிராமவாசிகளுக்கு எழுத்தறிவு இயக்கம் தொடங்கினார்.
முன்னிரவுகளில் பள்ளித் தாழ்வாரங்களில் அவர்களுக்குக் கையெழுத்துப்போடக் கற்றுக்கொடுத்து
கைநாட்டு வைக்கும் வழக்கத்தை ஒழித்தார்.
அவர்கள் கற்பதற்கான சிறிய பாடநூல்களை, துணைப் பதிவாளர் சுப்பராயலு உருவாக்கினார்
என்கிறார் எழுத்தாளர் தஞ்சைக் கவிராயர்.
(அக்.12. /இந்து தமிழ் நாளிதழ்)
இதை ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் தேவேந்திரர்கள் வாழ்கிற பல சிற்றூர்களில் இன்னும் தம்முடைய சாதிப் பெயர் "தேவேந்திரகுல வேளாளர் "
என மாற்றம் பெற்றது குறித்த செய்தி சென்றடையவில்லை.
பல இடங்களில் தம்மைத் "தேவேந்திரகுல வேளாளர்" என்று குறிப்பிடாமல் "எஸ்சி" என்றே அடையாளப்படுத்துகின்றனர்.
இன்னும் பல இடங்களில் தேவேந்திரகுல வேளாளர் என்ற புதிய சாதிச்சான்றைப் பெறவில்லை..
இன்னும் சில இடங்களில் ஆதிதிராவிடர் என்றே சாதிச் சான்று வைத்துள்ளதாகவும் அறிகிறோம்..
இதற்கெல்லாம் காரணங்கள் பல..
கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிறு வழிபாட்டின்போது "கிறிஸ்தவ பள்ளர்கள்"- "கிறித்தவ தேவேந்திரர்கள்" என்று சாதிச் சான்றுபெற வேண்டும் என்கிற தகவல் சொல்லப்பட வேயில்லை..
ஆனால் தலித் கிறிஸ்தவர்களுக்கான உதவியைப் பெற அழைக்கப்படுகின்றனர்.
ஒரு சமூகத்தின் சாதிப் பெயர் அடையாளத்தை மாற்றிய அரசு அறிவிப்பைக் கூட இன்னமும் அறியாத மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை.
சரி அது போகட்டும்- படித்தவர்களாகவது தம் கிராமங்களில் ஊர்க்கூட்டை/ ஊரைக் கூட்டி பெயராணை பெற்ற விபரத்தைப் பேசினோமா என்றால் அதுவும் இல்லை.
இப்படியான சூழலில் சாதிவாரிக் கணக்கெடுப்பு வந்தால் கிராமவாசிகள் தம்மை எப்படி "தேவேந்திரகுல வேளாளர்" என்று பதிவு செய்வார்கள்..
அதற்காகத்தான் 1980களில் தஞ்சைக் கிராமப்புறங்களில் நடத்தப்பட்ட எழுத்தறிவு இயக்கம்போல தேவேந்திரர் குடியிருப்புகளில்/கிராமங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்..
இதுவும் ஒருவகையான முன்னெடுப்பு அவ்வளவுதான்.
ஆனால் இதன் வீரியம் அதிகம்..
சரி இதனால் என்ன மாற்றம் நிகழும்..?
இதுவரை அடையாளப்படுத்தப்பட்ட குடும்பன், பள்ளர், தேவேந்திரகுலத்தான், காலாடி, கடையன், பண்ணாடி,வாதிரியார், போன்ற ஏழு உட்பிரிவுகளும் தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் மாற்றம் செய்யப்பட்டது என்ற விபரம் மீண்டும் பேசப்படும்..
உன் சாதி என்ன? - என்ற கேள்விக்கு "தேவேந்திரகுல வேளாளர்" என்று மட்டுமே சொல்லவேண்டும்/பதிவிட வேண்டும் என்ற கருத்து விதைக்கப்பட்டு உள்வாங்கப்படும்..
இடையீடாக நம் சமூகம் அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு பேசப்பட்டு அதிலிருந்து வெளியேறத்தான் பட்டியல் வெளியேற்றக்கோரிக்கையை முன்னெடுக்கிறோம் என்ற கருத்து புரிய வைக்கப்படும்..
அதனோடு கூடவே பெயராணை விவகாரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக போன்ற கட்சிகள் எடுத்த அரசியல் நிலைபாட்டையும் பேசலாம்..
"இவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி பாஜக தேவேந்திர குல வேளாளர் என்ற பெயராணையைப் பெற்றுத்தந்தது என்ற வீரிய வரலாற்றையும் கிராமப்புற மக்களிடம் கொண்டு சேர்க்கலாம்.."
இன்னமும் கிராமப்புற மக்களிடம் "பட்டியல் வெளியேற்றம்" பற்றிய கருத்தியல் சரியாகப் போய்ச்சேரவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்..
ஆகவேதான் பட்டியல் வெளியேற்றத்திற்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறோம்..
இதன் மூலம் மாற்றுக் கருத்துக்கொண்டவர்களையும் ஒருங்கிணைத்துச் செல்லமுடியும்...
அரசு ஊழியர்களும், அரசியல் அமைப்புகளில் இயக்கங்களில் பயணிப்பவர்களும் ஒன்றாகச் சேர்ந்து பயணிக்க முடியும்..
அரசியல் ரீதியாக யாரை ஆதரிப்பது என்ற பெரும்பான்மை நிலைபாட்டை எட்ட முடியும்..
எல்லா நிலையிலும் பெயராணைக்கு எதிராகச் செயல்பட்ட குழுக்கள் இப்போதைய பட்டியல் வெளியேற்றம்/ மாற்றக் கோரிக்கையையும் தீவிரமாக எதிர்க்கத்தான் செய்கிறார்கள்.
ஆனாலும்
விடாத முயற்சிதான் வெற்றியைத் தரும் என நம்புவோம்..
தமிழகம் முழுவதும்
பட்டியல் வெளியேற்றத்திற்கு ஆதரவாக கிராமப்புற மக்களிடம் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுப்போம்..
"வாழ்க தேவேந்திரனியம்."
©️✒️யாழி.
13.10.2023.
Comments
Post a Comment