குடும்பனின் துயரத்தில்

 ✒️தொடரும்  துயரங்கள்......!!!

தொடராதிருக்கட்டும்.....!!!

18.10.2023



தென்மாவட்டங்களில் பொதுவாக நம் மக்கள் விவசாயத்தையே முழுதாக நம்பி வாழ்கின்றனர்.


தொழில் ரீதியாக இன்னும் நம் மக்கள் முன்னேறவில்லை.


விவசாயத்தைத் தவிர பிற தொழில்களுக்கு நம் மக்கள் இன்னும் பக்குவப்படவில்லை.


சமீப காலங்களில் வெள்ளாமைக்கு ஏதுவான மழைப்பொழிவும், அதை சேமித்து வைக்கும் அமைப்புகளும் முறைபடுத்தலும் இல்லாததால் வேறு வழியின்றி அருகிலுள்ள பட்டாசுத் தொழிற்கூடங்களுக்கு வேலைக்குப் போகிறார்கள்.


அது மிக ஆபத்தான தொழில் என்று தெரிந்தும் தவிர்த்துவிட்டு வேறு மாற்றுத் தொழிலை நாடவில்லை..


பட்டாசுத் தொழிற்கூடங்களும் சரியான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்..


அண்மைக்காலங்களில் வெடிவிபத்துகள், பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருவது வருந்தத்தக்கது..


பட்டாசுத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்புகளை வழங்க வேண்டும்.


அரசு அதிகாரிகளும் அடிக்கடி பட்டாசு ஆலைகளில் ஆய்வுகளை நடத்த வேண்டும்.


தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்பீடுகள் செய்யப்பட வேண்டும்.


எல்லாவற்றிற்கும் மேலாக கூடுமானவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தான் விபத்துகளைத் தடுக்கும்..


பெரும்பாதிப்படைந்துள்ள தேவேந்திரகுல வேளாளர்கள் மாற்றுத் தொழில்களை முன்னெடுப்பதும் நல்லதுதான்..


ஏனெனில் மற்ற விபத்துகளில் எல்லாம் ஏதாவது மிச்சமிருக்கும் பட்டாசு விபத்துகள் அணு ஆயுதங்களின் வீரியத்தை ஒத்ததாக இருப்பதால் மாற்றி யோசிக்க வேண்டிய தருணமாக உள்ளது.


பல குடும்பங்கள் முற்றாக அழிந்துவிட்டன..


சரியான இழப்பீடும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும்.


பிற தொழில் செய்ய முனைவோருக்கு வட்டியில்லா வங்கிக்கடன்கள் வழங்கி தொழிலை ஆதரிக்கலாம்.


இனியும் இதுபோன்ற கொடுந்துயரங்கள் நிகழாவண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வயல் நண்பர்கள் தளம், யாழி வாசகர் தளம், தைவா அமைப்புகள் வாயிலாக கனிவோடு வேண்டுகிறோம்.


©️✒️யாழி'

18.10.2023.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்