குடும்பனின் பார்வையில்

 குடும்பனின் பார்வையில்

25.10.2023


ஆசிரியர்கள் பணிஓய்வுபெறும் வயது (60) அறுபது..!!!!!!


ஆனால் பணியில் சேருவதற்கான வயது உச்சவரம்பை 58 ஆக உயர்த்தி என்னவாகப்போகிறது..?


எனக்குத் தெரிய ஒருவர் ஐம்பத்தைந்து வயதில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்து 58 வயதில் பணியிலிருந்து ஓய்வுபெற்றார்..


அதுவும் அவருக்கு மாவட்டம் விட்டு வேறு மாவட்டத்தில்...

போக்குவரத்து வசதியற்ற தொடக்கப் பள்ளியில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது..


ஒரு நாளும் அவர் முகமலர்ச்சியோடு இருந்து நான் பார்த்ததில்லை.....!


எப்போதும் விரக்தியோடுதான் காணப்பட்டார்.


ஒருவர் ஆசிரியர் பணியில் சேருவதற்கும், அவர் பயிற்சி பெற்ற ஆண்டிற்கும் ஆன இடைவெளியைக் கணக்கில் கொள்ள வேண்டும்.


ஆசிரியர் பயிற்சி முடிந்து நீண்டகாலம் பணிவாய்ப்பு வழங்காமல் இருப்பது கற்பித்தல் திறனை மோசப்படுத்தும்..


கற்பித்தல் திறன் என்பது மனதோடு தொடர்புடையதும் கூட...


ஆகவே ஆசிரியப் பயிற்சி முடித்தவர்களை உடனே ஒப்பந்த அடிப்படையிலாவது பணிநியமம் செய்து அவர்களது கற்பித்தல் திறன் சோரம் போகாமல் இருக்க நடவடிக்கை தேவை..


அது தான் வளரும் தலைமுறைக்கு நல்ல தரமான கல்வி கிடைக்க வழி செய்யும்..


ஆசிரியப்பயிற்சி முடித்து கால் நூற்றாண்டு கழித்து ஆசிரியர் பணியாற்ற வழங்கப்படும் வாய்ப்பு என்பது பெரும் தண்டணையாகவே கருதப்படும்..

தண்டனை என்பது தனிநபருக்கு மட்டுமல்ல பிள்ளைகள், குடும்பம்,சமூகம் என அனைத்திற்குமானது.

கற்பித்தலுக்கான பயிற்சி முடித்து நீண்ட இடைவெளிவிட்டு ஆசிரியர் பணிக்கு நியமிக்கும் போக்கைக் கைவிட வேண்டும் அல்லது உரிய தீர்வை எட்டவேண்டும் என்பதே எம் போன்றவர்களின் அபிப்ராயம்.


©️✒️யாழி

25.10.2023.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்