குடும்பனின் அடையாளங்கள்
குடும்பனின் அடையாளங்கள்
10. 10. 2023
✒️எழுத்து எதையாவது உணர்த்தவேண்டும்....!!
அல்லது உறுத்த வேண்டும்....!!!
காலச்சூழல் நம் பண்பாட்டுச் சமூகத்தை சவலைகளோடு சமரசம் செய்துகொண்டு காலங்கடத்தக் கற்றுத் தந்துவிட்டது ஒரு துரதிஷ்டம்தான்.
ஆனாலும் ஒரு சிலரது அயராத உழைப்பால் இந்தச் சமூகம் சாம்பலை விலக்கிக்கொண்டு நெருப்பாக உருவெடுக்கிறது.
எத்தனை தலித்தியவாதிகள் சாயம் பூசினாலும் "தேவேந்திரனியம்" உருமாறிப்போகவில்லை.
"காசுக்கு மாரடிக்கிற கூட்டங்களுக்கு நெஞ்சுவலிக்கப்போவதில்லை.."
வெறும் சுவாசமும், உப்புக் கஞ்சியும் மட்டுமே உயிர்வாழப் போதுமென்ற கொள்கையை ஒரு போதும் தேவேந்திரர்கள் ஒத்துக்கொள்ளப் போவதில்லை.
அடையாளத்தோடு வாழாத வாழ்க்கை ஈசலுக்கு ஒப்பாகும்.
காவிரி நீர் குறித்து அண்மையில் மயிலாடுதுறை மாவட்ட திமுக கூட்டத்தின் காணொளியைக் கண்டவர்களுக்கு அரசியல் வேஷங்கள் புரிந்திருக்கும்.
தேவேந்திரர்களில் ஒருசில வேடக்காரர்கள் இயக்கங்களை நடத்துகிறார்கள்..
ஒன்றைக் காட்டி இன்னொன்றைப் பெறுவதுதான் அவர்களது நோக்கம்.
மள்ளத்தியர்களாவது விளங்கிக்கொள்ளுங்கள் மள்ளர்குடிகளில்தான் பெண்களுக்கும் சாதிய அடையாளம் இருக்கிறது.
முற்காலத்தில் "குடுமிச்சி" என்று அழைக்கப்பட்டனர்.
இப்போது "மள்ளத்தியர்" என்று அடையாளம் பெறுகிறோம்.
அதேபோல நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தில் பெண்கள் ஆச்சிமார் என்று அழைக்கப்பெறுகின்றனர்.
"குடும்ப அமைப்புமுறையைப் போற்றுகிற சமூகங்களில் தான் பெண்களும் போற்றப்படுகின்றனர்."
வாழ்க தேவேந்திரனியம்.
©️✒️மடைக் குடும்பர்
10.10.2023.
Comments
Post a Comment