குடும்பனின் அடையாளத்தில்
குடும்பனின் அடையாளத்தில்
9.10.23
✒️தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வாருங்கள்.
தமிழகத்திலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.
அப்படி நடந்தால் நம் கிராமப்புற மக்கள் தேவேந்திரகுல வேளாளர் என்று தம் சாதியைப் பதிவிட வேண்டும்..
ஒரு சில மாவட்டங்களில் எஸ்ஸி என்றும், ஆதிதிராவிடர் என்றும் சொல்கிற போக்குக் காணப்படுகிறது.
சிலர் ஆதி திராவிடர் என்றே இன்னமும் சாதிச்சான்று வைத்துள்ளதாகவும் அறியமுடிகிறது..
இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு கிராமப்புற மக்களிடம் தேவேந்திரகுல வேளாளர் என்று நம் சாதிப் பெயர் மாற்றப்பட்ட விபரத்தை கூறவேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
படித்தவர்களிடமே கூட இன்னமும் தேவேந்திர குல வேளாளர் என சாதியைக் குறிப்பிடுவதில் குழப்பம் இருப்பதை அறிகிறோம்..
நீங்கள் கிறித்தவராகவோ, இந்துவாகவோ இருக்கலாம். ஆனால் சாதி என்ற அடையாளத்தில் "தேவேந்திரகுல வேளாளர்" என்றுதான் குறிப்பிடவேண்டும் என்ற செய்தியைப் பொதுமக்களிடம் கூறிப் புரியவைக்க வேண்டியது நமது கடமையாகும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருசில பகுதிகளில் இந்துக்கேயில்களில் திருவிழா நடந்தால் அருகிலுள்ள பள்ளிக்கு தாழ்த்தப்பட்ட சமூகப் பிள்ளைகள் பள்ளிக்கு வருவது தடைசெய்யப்படுவதான நிகழ்வு நடைபெற்று வருகிறது..
ஊர்க் கட்டுப்பாடு என்பதைவிட சாமி குற்றம் என்ற பயத்தைக் காட்டி பத்து நாட்கள் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவைக்கிற பழக்கம் காணப்படுகிறது.
இதையெல்லாம் முறியடிக்க/ முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
சாமி குற்றம் என்ற போலியான பயத்தைக் காட்டி இன்னமும் பள்ளிக் குழந்தைகளுக்கும் பிற்போக்குத்தனத்தைக் காட்டுகின்றனர்..
இதற்கெல்லாம் தீர்வுகாண ஆசிரியர்கள் முயற்சிக்கவேண்டும்..
இப்படியான இடங்களில் நீ யார் என்ற கேள்விக்கு எஸ்ஸி என்ற பதில்தான் வருகிறது..
இதற்கெல்லாம் மாற்றம் வேண்டுமெனில் 'தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயர் மாற்ற வரலாற்றை அறியத் தருதல்' அவசியம்..
தேவேந்திரகுல வேளாளர்கள் மதம் மாறுவதாலோ, அரசு ஊழியர்கள் ஆவதாலோ மட்டுமே மாற்றம் வந்துவிடவில்லை/ வந்து விடாது.
"சுயவரலாற்றை அறியாத சமூகமாக இருக்கிற வரை சொந்த அடையாளங்களை இழந்து வாழ்கிறவரை சமூக விடுதலை பெற வாய்ப்பே இல்லை."
ஆகவேதான் இனிவருங்காலங்களில் சாதியின் பெயரைச் சரியாகச் சொல்லத் தெரிகிற சமூகமாக மாற்ற வேண்டும் என்கிறோம்.
அதன் முன்னோட்டமாக தமிழ்நாடு தேவேந்திரகுல மத்திய மாநில அரசு ஊழியர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக்கிளை வரும் ஞாயிறன்று அக்.15.பட்டியல் வெளியேற்றத்திற்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தைத் தொடங்குகிறது.
அரசு ஊழியர்கள் முன்னெடுக்கிற இந்த கையெழுத்து இயக்கத்திற்குப் பொதுச் சமூகமும் ஆதரவு தரவேண்டும் என விரும்புகிறோம்.
இந்த இயக்கம் மாவட்டங்கள் தோறும் முன்னெடுக்கப்படும்.
பிறகு கிராமங்கள் தோறும் பரவும்.
இப்படியாக தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களை விழிப்புணர்வடையச் செய்து பட்டியல் வெளியேற்றத்திற்கு அரசியல் ஆதரவைப் பெறத் திட்டமிடப்படுகிறது.
ஆகவே சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கும்
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைப் பட்டியலிலிருந்து வெளியேற்றுவதற்கும் பொதுமக்களைத் தயார்ப்படுத்துவோம்..
வாழ்க தேவேந்திரனியம்..
©️✒️யாழி
09.10.2023.
Comments
Post a Comment