குடும்பனின் வரலாற்றில்
6,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய "உழவர் பெருங்குடியினரான" 'தமிழரின் வாழ்வியல் முறை', "ஊர் குடும்பர் ஆட்சி முறை" நெல் நாகரிகம் மற்றும் "ஏறு தழுவுதல்" எனும் "சல்லிக்கட்டு" பற்றி சிறிது சிந்தித்து பார்ப்போமா உறவுகளே!
தமிழர்களின் வாழ்வியல் என்பது ஐந்து திணைகளை (நிலம்) உள்ளடக்கியது...
1. குறிஞ்சி திணை (குறவர், குறத்தியர்) - [வேட்டை சமூகம்].
2. முல்லை திணை (ஆயர், ஆய்ச்சியர்)- [மேய்ச்சல் சமூகம்].
3. மருதம் திணை [ம(ப)ள்ளர், பள்ளத்தியர்]- [பயிர்த்தொழில் சமூகம்]
4. நெய்தல் திணை (நுளையர், நுளைச்சியர்)- [மீனவர்கள் சமூகம்].
5. பாலைத் தினை [கள்ளர், மறவர், வேட்டுவர் (எயினர்)]- [களவு செய்தல்]
இதில் முதல் நான்கு (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்) இயற்கையாக உருவான திணைகள். ஐந்தாவது-ஆன "பாலைத் திணை" செயற்கையாக உருவானது என்பதை "சிலப்பதிகாரம்" ஆசிரியர் "இளங்கோவடிகள்" கீழ்க்கண்டவாறு எடுத்துரைக்கிறார் "முல்லையும், குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்"(சிலப்பதிகாரம், காடுகாண் காதை, 64-66).
"நீரின்மையால்" விவசாயமின்றி பாலை நில மக்கள், 'வழிப்பறி செய்தல்', 'சூறையாடல்', 'ஆறலைத்துண்ணும்' "கள்வர்களாக" இருந்துள்ளனர்.
"ஏறு தழுவுதல்" என்பது மருத நிலத்து மூதாதையர்கள்-ளான "முல்லை" நிலத்திலிருந்து தோன்றினாலும், 'மருதம்' நிலத்தின் மக்களிடத்தில் தான் ஏறு தழுவுதல் நிலையுற்று "தமிழர்களின் பண்பாட்டு" கலாச்சாரமாக மாறுகிறது. தங்களது உழவுத் தொழிலுக்கு பயன்படும் வகையில் "இடையர்கள்"-ளிடம் இருந்த மாடுகளை பயிர்த் தொழிலுக்கு பழக்கப்படுத்தி "மாடுகளுடன் உயிரோடு" உயிராக ஒன்றினைந்து வாழ்ந்து தன் "மருத நிலத்தில்" அமோகமாக விளைந்த "நெல் மணிகளை" அறுவடை செய்து களத்து மேட்டுக்கு கொண்டுவந்து, ஆண்டுக்கு மூன்று போகம் நெல் விளைச்சலுக்கு காரணமாக இருந்து
பஞ்சம்', 'பசி', 'பட்டினியை' போக்கிய-தாக நமது "மருதம்" நிலத்து உழவர் பெருங் குடியின் வழி தோன்றல்கள்-ளான முற்காலப்பாண்டியர்கள் முதலில் நீருக்கு விழா எடுத்து அதை "இந்திர விழாவாக" கொண்டாடியிருக்கின்றனர். இவ்விழா "புகார் நகரோடு" (சோழர் மண்டலம்) அதிகம் தொடர்புற்றிருந்தாலும், மதுரையிலும் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களது உணவு உற்பத்திக்காக ஒரே இடத்தில் நிலை பெற்று வாழத் துவங்கிய இந்த மருதநிலத்து 'வேளாளர்' (அ) 'வேளாண்குடி' பெருமக்களிடமிருந்து தான் "வேந்தர்கள்" உருவாகிறார்கள் குறிப்பாக மூவேந்தர்களில் மூத்தவரான பாண்டியர்ககளின் குடி (பண்டு=பண்டி=பாண்டி=பாண்டியர் என்றாயிற்று- 'தமிழறிஞரும்', 'சொல்லாராய்ச்சி' வல்லுநருமான ஐயா "தேவநேயப் பாவாணர்" கூற்று).
முற்கால பாண்டியகளின் நாடு கபாடபுரம், குமரிக்கண்டம் ஆகும். இது நகரம் அல்ல, உலகில் மனித உயிரினம் முதலில் தோன்றிய மாபெரும் கண்டம். நாகரீகத்தை வளர்த்த மண்(மனித நாகரிக தொட்டில்). உலகின் முதல் மொழியாக நமது உயர் தனி செம்மொழி "தமிழ்" பிறந்த மண். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எண்ணிப் பார்க்க முடியாத ஒரு மாபெரும் தொடர் இயற்கை சீற்றத்தினால் (கடல்கோளினால்) முற்றாக அழிந்து போனது. குமரிக்கண்டம் கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. இவர்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் பலம் மிக்க அரச வம்சங்களில் ஒன்றாகப் பாண்டியர்கள் விளங்கினர்.
பாண்டியர்களின் முதல் தலைநகரமாக "கபாடபுரம்" (குமரிமுனைக்குத் தெற்கே விரிந்து, குமரிமலை, பஃறுளி ஆறு உள்ளடக்கியது). இங்குதான் "முதற்சங்கம்" (இந்தத் தலைச்சங்கம் 4440 ஆண்டுகள் நடைபெற்றன . பாண்டிய மன்னன் "காய்ச்சின வழுதி" தொடங்கி "கடுங்கோன் பாண்டியன்" வரையில் 89 மன்னர்கள் இந்த முதலாவது சங்கத்தைக் காத்து வழிநடத்தினர்) அமைத்து தமிழை வளர்கிறார்கள். பிறகு கடல்கோளில் அழிந்து விடுகிறது.
பிறகு இவர்கள் வடதிசை மதுரை நோக்கி நகர்ந்து "கொற்கை"(முத்து குளித்தல் பிரதான தொழில், கடல் கடந்து உலக நாடுகளுக்கு பாண்டிய நாட்டு முத்துக்களை ஏற்றுமதி செய்து வணிகத்தின் வாயிலாக நட்புறவு கொள்ளுதல் ஆதாரம்-சிலப்பதிகாரம்), மதுரை(உண்மையான பெயர் "மல்லன் மூதூர்" ஆதாரம்- நற்றினை 73-3) தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்கின்றனர். இங்குதான் "இடைச்சங்கம்" (பாண்டியன் வெண்தேர்ச்செழியன் என்ற மன்னரால் இச்சங்கம் நிறுவப்பட்டு. இம்மன்னன் தொடங்கி முடத்திருமாறன் வரையில் 59 மன்னர்கள் இந்தச் சங்கத்தைப் புரந்து வளர்த்தனர்), "கடைச்சங்கம்"(மதுரையில் நடந்தது, கடைச்சங்க கால மன்னர்கள் 49 பேர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்; 449 புலவர்கள் இங்கு பங்களித்தனர்; 1850 ஆண்டுகள் கடைச்சங்க காலத்து அரசர்கள் 49 பேரும் ஆட்சி புரிந்தனர்) அமைத்து தமிழை வளர்கிறார்கள் இந்த பாண்டிய மன்னர்கள்.
உலகில் எந்த மன்னர் குலத்திற்கும் இல்லாத நீண்ட நெடிய வரலாறு பாண்டியர்-களுக்கே உடையது என்பர் நமது தமிழ் புலவர்கள்.
பிறகு இந்த "பாண்டியர்-குடியிலிருந்து ஒரு குழுக்கள் 'சேரர்களாகவும்'(மேற்கு நோக்கி), பின்பு கிழக்கு நோக்கி' சோழர்களாகவும்'["பள்ளி" (பள்ளரின் பெண்பால் தாயின் மக்கள்) வன்னியர்-வேளாண்பெருங்குடி].
ஏரில் பூட்டி உழவு செய்ய உதவிய 'காளை மாடுகள்' "எருதுகள்" என்று இந்த "மருதநிலத்து" மக்களால் அழைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தங்கள் விவசாயத்திற்-கான உழைப்பிற்கும், உணவிற்கும், பாதுகாப்பிற்கும் பயன்பெறும் விலங்குகளை வளர்ப்பு விலங்குகளாக ஆக்கியவரும் இவர்களே .இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது.
இந்த மருதநிலத்து உழவர் குடி மக்கள், மார்கழி 29-ம், மாதத்தின் கடைசி நாளன்று முதலில் மழை(மாரி) கடவுளான "இந்திரன்-க்கு" நன்றி செலுத்தும் விதமாக "போகிப் பண்டிகையாக" (பழையன கழிதலும், புதியன புகுதலும்-வாழ்வில் ஒளி வீச). வழிபட்டிருக்கிறார்கள்.
தை-1 முதல் நாள், பூமியில் இயற்கை வளங்களை நிலைக்கச்செய்து உயிரினங்களை வாழவைக்கும் "சூரியபகவான்-க்கு" நன்றி செலுத்தும் விதமாக "தைபொங்கலாகவும்", அந்த திருநாளை தமிழ் 'வேந்தர்கள்' "தமிழர் திருநாளாகவும்" "தமிழ் புத்தாண்டாகவும்" (தை பிறந்தால் வழி பிறக்கும்) கொண்டாடியிருக்கிறார்கள். 'உண்ணுவதிலும் புதுமை', 'உடுப்பதில் புதுமை', 'வீட்டில் புதுமை', 'மனதிலும் புதுமை', 'புதிய பச்சரிசியை பொங்குவார்கள்'. புதிய ஆடைகளை வாங்கி உடுப்பார்கள். வீட்டுக்கு வெள்ளை அடித்து அழகு செய்வார்கள். தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய்வார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துவார்கள். இப்படி நகரங்களில் புத்தாண்டு பிறப்பாக பொங்கல் கொண்டாடுகிறார்கள்.”
தை 2-ம் நாள் "உழவுத் தொழிலுக்கு" பயன்பட்ட மாட்டுக்கு நன்றி சொலுத்தும் விதமாக மாடுகளுக்கு பொங்கல் வைத்து அதை மாட்டுக்கு ஊட்டிவிட்டு "மாட்டுப் பொங்கலாகவும்", வழிபடுகிறார்கள் நமது வேளாண் குடி தமிழ் வேந்தர்கள்.
தை-3 நாள் இந்த 'மருதநிலத்து' "வேளாளர்" பெருங்குடிகள் அனைவருக்கும் நன்றி செலுத்தும் விதமாக "உழவர் திருநாளாகவும்". பிறகு தை 4-ம் நாள் இந்த மருதநிலத்து வேளாளர் குடி மக்கள் தங்கள் வயல்வெளிகளில் விளைந்த புத்தம்புது நெல் மணிகளை தித்திப்புடன் பொங்கலிட்டு உற்றார் உறவினர்களுடன் பகிர்ந்து உண்டு "காணும் பொங்கல்"-ளாக வழிபடுகிறார்கள்.
மருத நிலத்து "வேளாளர் குடி" மக்கள் மாடுகளைக் குளிப்பாட்டிப் பல வண்ணங்களில் பொட்டிட்டு, 'மூக்கணாங் கயிறு', 'கழுத்துக் கயிறு', 'பிடி கயிறு' அனைத்தையும் புதிதாக அணிவிப்பர். கொம்புகளைப் பிசிறு சீவி, 'எண்ணெய் தடவி', 'கழுத்து மணியாரம் கட்டி', 'வெள்ளை வேட்டியோ', 'துண்டோ கழுத்தில்' கட்டுவர். பின்னர், பூமாலை அணிவித்துப் பொங்கலிட்டுத் தம்மோடு உழைப்பில் ஈடுபட்ட மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் தளிகைப் பொங்கலை ஊட்டிவிடுவர் இந்த வேளாண் மற்றும் போர் குடி மரபினரான மள்ளர்கள்.
மருத நிலத்து வேளாண் மக்களின் பயிர்த்தொழில் உற்பத்தியோடும், பாலை நிலத்து (கள்ளர், மறவர்) மக்களின் தேவைக்கான "போக்குவரத்துத்" தொழிலோடும் பிணைந்தது "இடையர்கள்"-ளிடம் (முல்லை நிலம்) இருந்த மாடுகள்.
"காளைகள்" மருத நிலத்துப் போர் வீரர்களை நிகர்த்தனவாக இருந்தன என்பதனை நமக்கு "கலித்தொகை" உணர்த்துகிறது.
"நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை,
மாறுஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்
துளங்கு இமில் நல்ஏற்றினம் பல களம்புகும்
"மள்ளர்" வனப்பு ஒத்தன
(கலி – 106: அடி 7-10)
"ஏறு தழுவுதல்" எனும் "சல்லிக்கட்டு" அடிப்படைக் காரணியாக, "தமிழரின் பண்பாட்டுக் கலாச்சாரமாக" அமைந்த திணை இந்த "மருதம்" திணை-யாகும்.
இந்த மருத நிலத்தில் (வயல்வெளி-களாக செழித்து, ஊர், கிழார், குடும்பர் ஆட்சி முறை, அரசாட்சி உருவான இடம்) வாழ்ந்த 'உழவர் பெருங்குடியான' "பள்ளர்கள்" மற்றும் இவர்களிடமிருந்து கிளைத்த பதிணென்(18) தொழில் மக்கள் கீழ்க்கண்டவாறு இருக்கின்றனர்.
1. வண்ணார் -ஆடைகளை துவைத்து வண்ணமாக்குபவர்
2. மஞ்சிகர் -முடி திருத்தம் செய்யபவர்
3. பறம்பர் --தோல் தொழிலாளர்
4. உவச்சர் -கோயில் பூசாரி
5. கோலிகன் --துணி நெசவாளர்கள்
6. செக்கான் -எண்ணெய் ஆட்டும் செட்டி
7. உமணர் --உப்பு விற்கும் வணிகர்
8. தச்சர் -மரக் கொல்லன்
9. கல் தச்சர் -சிற்பி
10. தட்டான் --பொற்கொல்லன்
11. பணிசெய்வோன் --கோயில் பணி
12. குயவன் --மண்பாண்டம் செய்பவர்
13. மருத்துவர் --நோய் தீர்ப்பவர்
14. கணியன் --காலத்தை கணித்து கூறுபவர் வள்ளுவர்
15. கிணையர் (அ) பறையர், அதாவது மன்னன் ஆணையிடும் செய்தியை முரசறைந்து (பறை) மக்களிடம் கூறுபவர்.
16. துடியன் -"துடி" என்னும் உடுக்கை அடிக்கும் குலத்தார் அதாவது "பேயோட்டுபவர்"
17. பாணர் - பாட்டுப் பாடுவர்
18. கூத்தர் - நடனம், நாடகம் நடிப்பவர் அதற்கேற்ப ஆடுபவர். இதுபோக நெல்லு வகைகளை எண்ணினாலும் "பள்ளு" (பள்ளர்) வகைகளை எண்ண முடியாதென்று பழமொழியே இருக்கிறது.
உலகத்தின் மிக தொன்மையான நாகரிகம் என்றால் அது குமரிக்கண்டம், தாமிரபரணி(பொருநை) நதிக்கரை, மற்றும் ஆதிச்சநல்லூர் (உண்மையான பெயர் ஆதி நித்தன் குடும்பன் நல்லூர்),
சிவகங்கை மாவட்டம், கொந்தகை கிராமத்திற்கு அருகில் உள்ள கீழடி (வைகை நதிக்கரை) மற்றும் சிந்துவெளி அனைத்தும் இந்த மருத நிலத்து குடும்பர்களின்/பள்ளர்களின் தனித்த நாகரிகம் ஆகும் இந்த உழவர் பெருங்குடி மக்களின் வரலாற்றில் "காளை" முக்கியப் பங்கு வகிக்கின்றது. இம்மக்கள் காளையைத் தெய்வமாக வழிபட்டதை அனைத்து அகழாய்வுகளிலும் கிடைக்கப் பெற்ற சான்றுகள் வாயிலாக அறிய முடிகிறது.
"ஏறு தழுவுதல்" என்பது விலங்குகளை முன்னிலைப்படுத்தும் வழிபாட்டையும், இயற்கை வேளாண்மையையும், வலியுறுத்தும் ஒரு பண்பாட்டுக் குறியீடு ஆகும். நம் முன்னோர்களான தமிழ் வேந்தர்களின் இத்தகைய பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் "ஏறு தழுவுதல்" நிகழ்வைக் காணவும், ஏறுகளைப் பேணவும், நாம் உறுதி கொள்ள வேண்டும்.
மாட்டுப் பொங்கல் விழாவினைப் பெரிய நிகழ்வாகக் கொண்டாட வேண்டும். நமது கலை, பண்பாட்டு நிகழ்வுகளை ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாட வேண்டும். நமது அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் நமது பண்பாடுகளையும், வீர விளையாட்டுகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டியது நாம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.
முனைவர் ச. தங்கராசு
பேராசிரியர்

Comments
Post a Comment