குடும்பனின் பார்வையில்
✒️முன்னத்தி ஏரில்
போகிற மாட்டை
முகத்தில் அறையாதீர்..
பட்டியல் வெளியேற்றத்திற்காக தன்னால் இயன்றதைச் செய்கிற திரு.கண்ணுசாமி அவர்களை அசிங்கப்படுத்தும் விதமாக இந்தப் பரப்புரை செய்யப்பட்டுள்ளது..
இதுவும் ஒரு வித உள்குத்து
அரசியல் தான்.
பெயராணை பெற உழைத்த பலரில் அண்ணன் மதுரை திரு.தங்கராஜ் அவர்களது பணி சிறப்பானது..
ஆனால் அவர்மீதும்
கல்லெறிதல் விழுந்தது..
ஆனால் பலரும் தத்தமது வழிகளில் ஆதரவு தெரிவித்தனர்..
அதே போல பட்டியல் வெளியேற்றம் பெற திரு.கண்ணுசாமி அவர்களும் தமது வழியில் போராடுகிறார்..
ஆதரிக்கிறவர்கள் ஆதரிக்கலாம்.
மாற்றுப்பாதையை முன்னெடுப்பவர்கள் தனது செயல்திட்டங்களை முன்மொழிந்து முன்னெடுக்கலாம்.
ஆனால் உழைக்கிறவர்களை அவமானப்படுத்துவது நாகரீகமல்ல...
பெயராணை இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது தமிழக எம்பிகள் வெளிநடப்புச் செய்ததை யாரும் மறந்துவிட முடியாது..
ஆனாலும் பானை ஓட்டையாய் இருந்தால் என்ன கொழுக்கட்டை வெந்தால் சரி என்ற பழமொழிப் படி ....
பட்டியல் வெளியேற்றம் நடக்க அவரவர் வழிகளில் போராட முன்வருவோம்..
முன்னெடுப்பவர்களை ஆதரிப்போம்..
பிழை என்றால் சுட்டிக்காட்டுவோம்..
பட்டியல் வெளியேற்றத்தைத் தடுக்கிற நோக்கக்காரர்கள் போராடுகிறவர்கள் மீது சேற்றை வாரிப் பூசுகிறார்கள்..
நீங்கள் எந்த அரசியல் கட்சியையும் ஆதரித்துவிட்டுப் போங்கள்.
ஆனால் பாஜக அரசால் மட்டும்தான் நம் சமூகக் கோரிக்கை வெற்றிபெறும்..
பட்டியல் வெளியேற்ற அரசாணை பெறுவது அவ்வளவு எளிதல்ல..
தேவேந்திரர்களிடம் இன்னும் கூடுதல் அரசியல் புரிதல் தேவைப்படுகிறது..
இந்தியா முழுக்க
"தேவேந்திரகுல வேளாளர்"
என்ற ஒரு தனித்த பண்பாட்டுச் சமூகம் இருக்கிறது எனப் பிரகடனம் செய்தவர் பாரதப் பிரதமர் மோடிஜி தான்.
ஆனால் அவரைப் பிடிக்காதவர்களோடு நாமும் சேர்ந்து கொண்டு குதிக்கிறோம்...
அரசியல் என்பது அரிச்சந்திர மயான காண்டம் நாடகம் அல்ல..
ஒரு கட்சி தம்மைத் தக்கவைக்க பல நுண் அரசியல் சூட்சுமங்களைக் கையாளும்..
அதுதான் அரசியல் ..
நாம் நமது கோரிக்கையை வென்றெடுக்கச் சரியான அரசியலைத் தேர்வு செய்ய வேண்டும்..
வலைக்கு முந்தி கல் எறிபவரை நிறுத்துவோம்..
விரைவில் பட்டியல் வெளியேற்றம் நடந்தே தீரும்..
அதற்கான நமது செயற்பாடுகள்தான் அதன் காலத்தைத் தீர்மானிக்கும்..
நன்றி.
வாழ்க தேவேந்திரனியம்..
©️✒️யாழி.
03.01.2024.
Comments
Post a Comment