குடும்பனின் பார்வையில்
✒️ஜனவரி-06.
அரசியல்வாதிகள் பாடம் படிக்க வேண்டிய நாள்..
சித்தமல்லி S.G.முருகையன் அவர்களின் நினைவு நாள் இன்று.
நானறிந்தவகையில் எம் சமூகத்தில் சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி வீரமரணம் அடைந்தவர்கள் பலர்.
அதில்
முதலாமவர் கீழத்தஞ்சை களப்பாள் குப்புசாமி தேவேந்திரர்.
பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரனார்
புதுக்கோட்டை மாவட்டம்.ஆவுடையார் கோயில் அருகிலுள்ள கானூர் தியாகி சிலுவை முத்து..
தஞ்சை சித்தமல்லி S.G.முருகையன்
பொதுவுடைமை போராளி பசுபதி பாண்டியனார்,
புல்லூர் சார்லஸ்,
சிக்கல் கணேசபாண்டியன்,
பாம் கர்ணன்,
மறைந்த திருப்புனவாசல் திரு.பிலவேந்திரன்,
வேங்கா குடி பெரியநாயகம்,
ரெட்டையாளம் சந்தியாகு குடும்பர்,
சில்வேஸ்டர் |விச்சூர் பாலையன்,
கானூர் சிலுவை முத்துப்படுகொலைக்கு எதிர்வினையாற்றி இன்னும் வாழ்கிற பெருங்குடியார்
இப்படிப் பலரது தியாக வரலாறுகளைப் பதிவு செய்யப்படாமல் இருக்கிறது
தியாகி கானூர் சிலுவை முத்துவின் கொலைக்கு எதிர்வினையாற்றிவிட்டு பெருங்குடியாரும் அவரது சகாக்களும் முதலில் சென்றது நாட்டாணி புரசக் குடி...அங்கிருந்து வேங்காகுடி அங்கிருந்து திருப்புனவாசலில் இரவு உணவாக தண்ணீர் ஊற்றிய கஞ்சி ..வழியில் பாதிரக்குடித்திருவிழா....
திருப்புனவாசலிலிருந்து ஓரியூர் சென்று இரவோடு இரவாக பாண்டுக்குடிக்கு அருகிலுள்ள ஊரில் போய்த் தங்கிப் பாதுகாத்துக்கொண்டதெல்லாம் வரலாறு ...
ஆகவே இனியாவது அரசியல் பேசுவது ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் சமூகப் போராளிகளின் வரலாற்றைத் தொகுக்க முனைகிறேன்...
விவரங்களும், தரவுகளும் தேவைப்படுகிறது...
மேற்கண்ட அனைவரும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த்தவர்கள் என்பதை நினைவுகூறுவோம்..
களப்பாள் குப்புசாமி சிறையில் அடைக்கப்பட்டு அரசு அடக்குமுறையில் கொல்லப்பட்டார்.
மற்ற சமூக பாதுகாப்பாளர்கள் எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டனர்..
S.G.முருகையன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது நடந்ததுதான் இந்த துயரத்தின் உச்சம்.
SG முருகையன் அவர்கள் தொடக்கக்கல்விக் காலத்திலேயே அறச்சீற்றம் கொண்டவராக வாழ்ந்திருக்கிறார்...
முத்துப்பேட்டை அருகிலுள்ள ஜம்புவானோடை சிவராமன் என்ற புரட்சிவாதியோடு தொடர்பு கொண்டிருந்தார்..
இருவருக்கும் வயது வேறுபாடு பதினைந்து.
சிவராமனோடு தொடர்பில் இருக்கிறார் என்று காரணம் காட்டி முருகையனைப் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டது...
பத்தாம் வகுப்பிலிருந்து நீக்கப்பட்ட முருகையன் அன்றைய தஞ்சை மாவட்டத்தில் நடந்த மனித உரிமைகளுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டு போராடி மக்கள் செய்வாக்கைப் பெற்று ஊராட்சி மன்றத் தலைவரானார். அப்போது அவரை எதிர்த்தது காங்கிரஸும், கம்யூனிஸ்ட்டுகளும்.
பின்
ஒன்றியக்குழுத் தலைவரானார்..
பின்பு கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக நின்று 1977-இல் நாகை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரானார்..
இந்திய வரலாற்றில் 543 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் பதவியில் உள்ளபோது குடிசை வீட்டில் வாழ்ந்தது முருகையன் மட்டும்தான்..
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, அதிமுக கட்சிகளுக்கிடையேயான நுட்ப அரசியலால் நடந்ததுதான் முருகையன் அவர்களின் படுகொலை எனச் சொல்லப்படுகிறது.
எம்ஜிஆர் நேரடியாக அஞ்சலி செலுத்த வந்ததாக அறியமுடிகிறது.
"தஞ்சை மாவட்டத்தில் ரத்தம் சிந்திய கம்யூனிஸ்டுகள்" என்ற நூலைத் தொகுத்திருந்தார்..
முப்பதுக்கும் மேற்பட்ட தியாகிகளின் சுருக்கமான வரலாற்றை அந்நூலில் தொகுத்துள்ளார்.... திரு சித்தமல்லி முருகையன்
ஆனால் 1979 இல் அவரே அந்தப் பட்டியலில் இணைவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்...
இன்றைய இளைய தலைமுறை நூற்றைம்பது ஆண்டுகால தஞ்சை மண்ணின் கொடூர வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும்.
நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடிய ....
என்ற
சினிமா வசனங்களையெல்லாம் வரலாறு தெரிந்தவர்கள் ஏற்கமாட்டார்கள்...
வற்றாத ஆறுகளும்,
பெரும் விளைச்சலும்,
அழியாத கோயில்களும்..
விதவிதமானக லைகளும்
வாழ்ந்த தஞ்சைப் பூமியில்
நடந்த படுகொலைகளின் வரலாறு துயரங்கள் நிறைந்தவை..
19 - 20 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலேயே உச்சபட்ச மனித உரிமை மீறல்கள் நடந்த இடம் தஞ்சைதான்...
தமிழகத்தில் நீதிக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளில் தேவேந்திரர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டது..
காலம் எத்தனை பாதிப்பைத் தந்தாலும் தேவேந்திரர்கள் அறச்சீற்றம் அடைந்த படியேதான் வாழ்வார்கள்..
இன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக படுகொலையான தியாகி S.G.முருகையன் தேவேந்திரனாருக்கு சாதி, மதங்களைக் கடந்து
வீரவணக்கம் செலுத்துவோம்.
வாழ்க தேவேந்திரனியம்.
©️✒️யாழி
06.01.2024.

Comments
Post a Comment