குடும்பனின் அக்கறையில்
நிலமெல்லாம் வெள்ள நீர்....!
இந்த புகைப்படத்தில் நீங்கள் பார்ப்பது பல தலைமுறைகளாய் முப்போகம் விளைச்சலை கொடுத்த வயல்வெளி, தற்போது இதன் நிலை என்ன தெரியுமா, இதன் அடிப்பகுதியை தொட்டுவிட முடியாத அளவுக்கு ஆ....ழம் நிறைந்த பள்ளங்கள். ஆம், இதுபோன்று எங்கள் கிராமத்தை சுற்றிலும் ஏழு எட்டு பகுதிகளில் பிரமாண்ட பள்ளங்களை ஏற்படுத்திவிட்டு போயிருக்கிறது சமீபத்திய வெள்ளப் பெருக்கு....!?
வயல்வெளிகளில் எல்லைகள் இல்லை, வாய்க்கால்களை காணவில்லை, வரப்புகளை தேட வேண்டும், பாய்மான கால்வாய்கள், வடிகால்கள் மணலால் மூடப்பட்டிருக்கிறது, வயல் வெளி பல பெரும் மேடு பள்ளங்களாக புரட்டப்பட்டிருக்கிறது....!
இன்று நீர் வற்றிவிட்டது, கரடு முரடாகவேணும் சாலைகள் தயாராகி வருகிறது, அரசை விடுங்கள் எம் மக்களின் ஆதரவில் நிவாரண பொருட்கள் ஓரளவு கிடைத்து மக்கள் பசியை மறக்கத் துவங்கிவிட்டார்கள்,
(எம் மக்களின் ஆதரவையும் அவர்களின் அக்கறையையும் விவரித்து சொல்ல இயலாது, அதிகாரம்மிக்க ஆளும் அரசு கைவிட்ட பொறுப்பை தங்கள் தலையில் ஏற்று எம்மை மீட்டு கொண்டு வந்திருக்கிறார்கள் எம் மக்கள் என்று சொன்னால்தான் அது சரியாக இருக்கும், வெள்ளம் வாடியும் முன் நிவாரணத்தால் எம்மை மூழ்கடித்தவிட்டார்கள் எம் மக்கள், ஸ்டிக்கர் ஒட்டும் கும்பலும் அரசும் வெள்ளம் வடிந்த பிறகு பிஸ்கெட் பாக்கெட், மீடியா சகிதம் எட்டிப் பார்த்தார்கள் என்பதை நாங்கள் வன்மமாக சொல்ல விரும்பவில்லை)
ஆனால் இந்த பேரிடர் காலத்தில் மக்கள் மனதில் ஏற்படுத்தப்பட்ட அவ நம்பிக்கைகளையும், எம் மக்களின் வாழ்வாதாரமான விளைநிலங்களில் ஏற்பட்டிருக்கும் இதுபோன்ற பிரமாண்ட பள்ளங்களையும் யாரால் சரிசெய்ய முடியும், வடுக்களாக தங்கிவிட போகும் இதன் வலியை இன்று அதிகாரத்தில் இருக்கும் ஆரிய திராவிட கும்பலால் அனு அளவேனும் உணர முடியும் என்று நினைக்கிறீர்களா, நிச்சயமாய் முடியாது, அதற்கு குறைந்தபட்ச செஞ்சோற்று உணர்வு இருக்க வேண்டுமே, இருந்தால் உலகிற்கே உணவு படைக்கும் வேளாண் பெருங்குடி மக்களை அப்படி பரிதவிக்க விட்டிருப்பார்களா....?????
எல்லோரும் மழை, அதித மழை, கன மழை, அதி கன மழை என்று காரணம் சொல்கிறார்கள், ஆனால் நீங்கள் சொல்லும் மழை பதிவான இடங்களில் போய் பாருங்கள், எந்த பாதிப்பும் இல்லை, பிறகு எப்படி ஆற்றங்கரை ஓரமும் வயல் வெளிகளும் வேளாண் கிராமங்களும் இவ்வளவு சேதத்தை எதிர்கொண்டன....???
கூச்சமே இல்லாமல் வானிலை ஆய்வு மையங்கள் மீது பழியை போட்டு தப்பிக்க நினைக்கும் கும்பலுக்கு இது உரைக்காது, ஆனால் இது எப்படி நடந்தது என்கிற பேரிடரின் பின்னணியை பேசித்தானே ஆக வேண்டும்.....!?!?
நீர்பிடிப்பு பகுதிகளில் தான் அதிகமான மழை பொழியும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறித்தியிருந்த நிலையிலும் கனமழை பெய்யும் வரை நீர் அளவை குறைக்காமல் பொறுப்பற்று இருந்துவிட்டு இரவோடு இரவாக மொத்த நீரையும் திறந்துவிட்டு எம் மக்களையும் அவர்களின் உடைமைகளையும் நிர்மூலம் ஆக்கியது யார் இட்ட கட்டளை....???
ஐம்பதாயிரம் கனஅடி தாங்காத தாமிரபரணியில் இரண்டரை லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதாக பேரிடருக்கு பிறகான செய்திகள் சொல்கிறது, ஆனால் அரசு சொல்லும் அளவோ வேறாக இருக்கிறது என்றால் ஏன் இந்த நம்பகத் தன்மை இல்லாத நிலை.....???
இதில் மக்கள் மழையை கொண்டாடுகிறார்கள், தாமிரபரணி தனது எல்லையை மீட்டுக்கொண்டது மாதிரியான கேப்சன்களில் செய்திகளை வெளியிட்டு வெள்ளத்திற்கு வெளியே அதாவது பிற மாவட்ட மக்களை திசை திருப்பிய அசிங்கத்தை எல்லாம் நாங்கள் கணக்கில் சேர்க்கவில்லை என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்....!
1992 வெள்ளத்தின் போது எம் தந்தை வயதையொத்த எம் உறவுகள் இரவு பகலாக எவ்வாறு தாமிரபரணியின் கரையை பாதுகாத்தார்கள் என்பது எமக்கு நன்றாகவே நினைவில் இருக்கிறது, இத்தனைக்கும் அப்போது இன்றைக்கு இருக்கும் நவீன எந்திரங்கள் கிடையாது, மண்வெட்டியும் சாக்கு பையும் தான் அன்று எங்கள் பகுதியை காத்தது. ஆனால் இன்று இவ்வளவு நவீனங்கள் இருந்தும் இத்தனை பேரழிவு என்றால் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர் யார்....???
ஏரிகளும் குளங்களும் வேளாண் சமூகமாகிய எமது கட்டுப்பாட்டில் இருக்கும் வரை அவை செவ்வனே பாதுகாக்கப்பட்டது, கரையை காக்க உயிரை கொடுத்த எம் முன்னோர்கள் இன்றும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் ஏரிக்கரை காவல் தெய்வங்களாக......!
ஐப்பசி கார்த்திகை மாதம் என்றால் இரவும் பகலும் ஏரி, குள கரைகளை கண்கானிப்பதிலேயே ஊரார் பொழுதுபோகும், அப்போது இந்த சீரழிவு இல்லை. இத்தனை உயிர் இழப்பு, பொருள் இழப்பு இல்லை, ஆனால் இன்று அரசே களத்தில் இறங்கி அதற்கென தனியான அமைச்சகமே பொதுப்பணித்துறையின் கீழ் செயல்பட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு குளத்தை கூட காப்பாற்ற முடியவில்லை என்கிறார்கள், என்ன பொறுப்பற்ற தனம் இது.....???
தமிழர்களின் நீர்மேலான்மையின் சிறப்பே கடை மடை வரை உள்ள விளை நிலங்களுக்கு பாய்ந்த பிறகும் மீதமுள்ள நீர் மறுகால் பாய்ந்து அடுத்த குளத்திற்கு செல்லும்படி அமைத்திருப்பார்கள் எம் பாட்டன்மார்கள், இந்த அமைப்பே எவ்வளவு மழை பொழிந்தாலும் அதை தாங்கும் திறன் உடையதாய் இருக்கும், ஆனால் அதன் மடைகளையும், வடிகால்களையும், கரைகளையும் பேணாததோடு திட்டமிட்டு செய்தது போல் அடைமழை பொழியும்வரை தேக்கிவைத்து திறந்துவிட்டால் நீர்நிலைகள் எப்படித் தாங்கும்....???
ஆறு குளங்கள் உடைப்பு என்றால் ஏதோ ஒரு பகுதியில் என்று நினைத்துவிடாதீர்கள், குறுகிய இடைவெளியில் பல துண்டுகளாக கரைகள் உடைப்பெடுத்திருக்கிறது, கரைகளில் இருந்த சாலைகள் முற்றிலுமாக தூக்கிசெல்லப்பட்டு வயல்வெளிகளில் சரளை கற்களும், ஜல்லியும் தாருமாக காட்சியளிக்கிறது. ஏற்கனவே டாஸ் மாக் கலாச்சாரத்தால் சாலையோர வயல்வெளிகளில் பீங்கான் பிரச்சினை, இப்போது ஜல்லி தார் முள் வேலி, பார்க்கவே போர்களம் போல காட்சி அளிக்கிறது, இதை எப்படி திருத்தி பயிரிட்டு....???
நீர்நிலை வயல் வெளி என்றதும் ஏதோ சமூக ஆர்வலர் பேச்சு என்று நினைத்து விடாதீர்கள், இது ஒரு பெரும் சமூகத்தின் வாழ்வாதார பிரச்சினை, தமிழக மக்களின் வயிற்று ஆதார பிரச்சினை. இன்னும் மூன்று நான்கு மாதத்திற்கு பயிரிட வாய்ப்பு இல்லை எனும்போது உணவு பொருட்களின் விளையேற்றம் என்னவாக இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்......????
இதோ இன்று ஜல்லிகட்டு திடலுக்கு அவர்களின் மடத் தலைவரின் பெயரை சூட்ட தயாராகிவிட்டார்கள் ஆட்சியாளர்கள், ஆனால் தென்தமிழகம் வரும் கோடைக்கு குடி நீருக்கே தவிக்கும் நிலை வரும் போலிருக்கிறதே, இந்த நிலையில் எப்படி விளைநிலங்களை திருத்தி, பயிரிட்டு அறுவடை பார்ப்பது....???
இதில் லோன் பிரச்சினை வேறு, அடகு வைத்த நகைகளும், ஏலச் சீட்டுகளும், மகளிர் கடன் நிறுவனங்களும் கொடுக்கும் நெறுக்கடியை வேறு சமாளிக்க வேண்டும். வயிற்று பிழைப்புக்கே திண்டாடும் நிலை என்னும்போது, விவசாய வேலை முழுவதும் முடங்கிவிட்ட நிலையில் இருக்கும் கொஞ்ச உடைமைகளையும் வெள்ளம் கொண்டுவிட்ட பிறகு நிலங்களை திருத்த முதலீட்டிற்கு எங்கே போவது.....???
அரசு பொறுப்பை உணர்ந்து தாமே தலையிட்டு போர்கால அடிப்படையில் விளைநிலங்களை திருத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை மீட்டு கரைகளை செப்பனிட வேண்டும், மதகுகளையும் கால்வாய்களையும் பராமரிப்பு பணி செய்து அதைதொடர் பராமரிப்பு செய்யும் உரிமையை முன்னர் இருந்ததுபோல் மக்களிடமே வழங்க வேண்டும், பழையபடி இந்த மண்ணில் ஊர்குடும்பனும், நீர் பாய்ச்சியும், மடைக் குடும்பனும் மதிப்பு மிக்க மனிதர்களாக வளம் வர வேண்டும், இந்த மண்ணில் வேளாண்குடிகளின் மான்பு மீட்கப்பட வேண்டும்.......!?!
இதெல்லாம் செய்யலேன்னா என்ன செய்விங்கன்னு கேட்கிறிங்களா....???
நாபுறமும் வெள்ளம் வந்து எம்மை சூழ்ந்தபோதும் ஐந்த நாட்களாக எம்மை காக்க எவரும் இல்லை என்ற போது எமக்குள் உருவாகியிருக்கும் பாருங்கள் ஒரு விழிப்பு நிலை, அது ஒரு அரசியலாக எம் மக்கள் மத்தியில் வடிவம் எடுக்கும், அந்த அரசியல் எமக்கு தேவையானதை எம் மக்கள் ஆதரவோடு செய்துகொள்ளும்.....! -ஆதி விளைச்சலை கொடுத்த வயல்வெளி, தற்போது இதன் நிலை என்ன தெரியுமா, இதன் அடிப்பகுதியை தொட்டுவிட முடியாத அளவுக்கு ஆ....ழம் நிறைந்த பள்ளங்கள். ஆம், இதுபோன்று எங்கள் கிராமத்தை சுற்றிலும் ஏழு எட்டு பகுதிகளில் பிரமாண்ட பள்ளங்களை ஏற்படுத்திவிட்டு போயிருக்கிறது சமீபத்திய வெள்ளப் பெருக்கு....!?
வயல்வெளிகளில் எல்லைகள் இல்லை, வாய்க்கால்களை காணவில்லை, வரப்புகளை தேட வேண்டும், மாயமான கால்வாய்கள், வடிகால்கள் மணலால் மூடப்பட்டிருக்கிறது, வயல் வெளி பல பெரும் மேடு பள்ளங்களாக புரட்டப்பட்டிருக்கிறது....!
இன்று நீர் வற்றிவிட்டது, கரடு முரடாகவேணும் சாலைகள் தயாராகி வருகிறது, அரசை விடுங்கள் எம் மக்களின் ஆதரவில் நிவாரண பொருட்கள் ஓரளவு கிடைத்து மக்கள் பசியை மறக்கத் துவங்கிவிட்டார்கள்,
(எம் மக்களின் ஆதரவையும் அவர்களின் அக்கறையையும் விவரித்து சொல்ல இயலாது, அதிகாரம்மிக்க ஆளும் அரசு கைவிட்ட பொறுப்பை தங்கள் தலையில் ஏற்று எம்மை மீட்டு கொண்டு வந்திருக்கிறார்கள் எம் மக்கள் என்று சொன்னால்தான் அது சரியாக இருக்கும், வெள்ளம் வடியும் முன் நிவாரணத்தால் எம்மை மூழ்கடித்துவிட்டார்கள் எம் மக்கள், ஸ்டிக்கர் ஒட்டும் கும்பலும் அரசும் வெள்ளம் வடிந்த பிறகு பிஸ்கெட் பாக்கெட், மீடியா சகிதம் எட்டிப் பார்த்தார்கள் என்பதை நாங்கள் வன்மமாக சொல்ல விரும்பவில்லை)
ஆனால் இந்த பேரிடர் காலத்தில் மக்கள் மனதில் ஏற்படுத்தப்பட்ட அவ நம்பிக்கைகளையும், எம் மக்களின் வாழ்வாதாரமான விளைநிலங்களில் ஏற்பட்டிருக்கும் இதுபோன்ற பிரமாண்ட பள்ளங்களையும் யாரால் சரிசெய்ய முடியும், வடுக்களாக தங்கிவிட போகும் இதன் வலியை இன்று அதிகாரத்தில் இருக்கும் திராவிட கும்பலால் அணு அளவேனும் உணர முடியும் என்று நினைக்கிறீர்களா, நிச்சயமாய் முடியாது, அதற்கு குறைந்தபட்ச செஞ்சோற்று உணர்வு இருக்க வேண்டுமே, இருந்தால் உலகிற்கே உணவு படைக்கும் வேளாண் பெருங்குடி மக்களை அப்படி பரிதவிக்க விட்டிருப்பார்களா....?????
எல்லோரும் மழை, அதித மழை, கன மழை, அதிகன மழை என்று காரணம் சொல்கிறார்கள், ஆனால் நீங்கள் சொல்லும் மழை பதிவான இடங்களில் போய் பாருங்கள், எந்த பாதிப்பும் இல்லை, பிறகு எப்படி ஆற்றங்கரை ஓரமும் வயல் வெளிகளும் வேளாண் கிராமங்களும் இவ்வளவு சேதத்தை எதிர்கொண்டன....???
கூச்சமே இல்லாமல் வானிலை ஆய்வு மையங்கள் மீது பழியை போட்டு தப்பிக்க நினைக்கும் கும்பலுக்கு இது உரைக்காது, ஆனால் இது எப்படி நடந்தது என்கிற பேரிடரின் பின்னணியை பேசித்தானே ஆக வேண்டும்.....!?!?
நீர்பிடிப்பு பகுதிகளில் தான் அதிகமான மழை பொழியும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறித்தியிருந்த நிலையிலும் கனமழை பெய்யும் வரை நீர் அளவை குறைக்காமல் பொறுப்பற்று இருந்துவிட்டு இரவோடு இரவாக மொத்த நீரையும் திறந்துவிட்டு எம் மக்களையும் அவர்களின் உடைமைகளையும் நிர்மூலம் ஆக்கியது யார் இட்ட கட்டளை....???
ஐம்பதாயிரம் கனஅடி தாங்காத தாமிரபரணியில் இரண்டரை லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதாக பேரிடருக்கு பிறகான செய்திகள் சொல்கிறது, ஆனால் அரசு சொல்லும் அளவோ வேறாக இருக்கிறது என்றால் ஏன் இந்த நம்பகத் தன்மை இல்லாத நிலை.....???
இதில் மக்கள் மழையை கொண்டாடுகிறார்கள், தாமிரபரணி தனது எல்லையை மீட்டுக்கொண்டது மாதிரியான கேப்சன்களில் செய்திகளை வெளியிட்டு வெள்ளத்திற்கு வெளியே அதாவது பிற மாவட்ட மக்களை திசை திருப்பிய அசிங்கத்தை எல்லாம் நாங்கள் கணக்கில் சேர்க்கவில்லை என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்....!
1992 வெள்ளத்தின் போது எம் தந்தை வயதையொத்த எம் உறவுகள் இரவு பகலாக எவ்வாறு தாமிரபரணியின் கரையை பாதுகாத்தார்கள் என்பது எமக்கு நன்றாகவே நினைவில் இருக்கிறது, இத்தனைக்கும் அப்போது இன்றைக்கு இருக்கும் நவீன எந்திரங்கள் கிடையாது, மண்வெட்டியும் சாக்கு பையும் தான் அன்று எங்கள் பகுதியை காத்தது. ஆனால் இன்று இவ்வளவு நவீனங்கள் இருந்தும் இத்தனை பேரழிவு என்றால் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர் யார்....???
ஏரிகளும் குளங்களும் வேளாண் சமூகமாகிய எமது கட்டுப்பாட்டில் இருக்கும் வரை அவை செவ்வனே பாதுகாக்கப்பட்டது, கரையை காக்க உயிரை கொடுத்த எம் முன்னோர்கள் இன்றும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் ஏரிக்கரை காவல் தெய்வங்களாக......!
ஐப்பசி கார்த்திகை மாதம் என்றால் இரவும் பகலும் ஏரி, குள கரைகளை கண்கானிப்பதிலேயே ஊரார் பொழுதுபோகும், அப்போது இந்த சீரழிவு இல்லை. இத்தனை உயிர் இழப்பு, பொருள் இழப்பு இல்லை, ஆனால் இன்று அரசே களத்தில் இறங்கி அதற்கென தனியான அமைச்சகமே பொதுப்பணித்துறையின் கீழ் செயல்பட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு குளத்தை கூட காப்பாற்ற முடியவில்லை என்கிறார்கள், என்ன பொறுப்பற்ற தனம் இது.....???
தமிழர்களின் நீர்மேலான்மையின் சிறப்பே கடை மடை வரை உள்ள விளை நிலங்களுக்கு பாய்ந்த பிறகும் மீதமுள்ள நீர் மறுகால் பாய்ந்து அடுத்த குளத்திற்கு செல்லும்படி அமைத்திருப்பார்கள் எம் பாட்டன்மார்கள், இந்த அமைப்பே எவ்வளவு மழை பொழிந்தாலும் அதை தாங்கும் திறன் உடையதாய் இருக்கும், ஆனால் அதன் மடைகளையும், வடிகால்களையும், கரைகளையும் பேணாததோடு திட்டமிட்டு செய்தது போல் அடைமழை பொழியும்வரை தேக்கிவைத்து திறந்துவிட்டால் நீர்நிலைகள் எப்படித் தாங்கும்....???
ஆறு குளங்கள் உடைப்பு என்றால் ஏதோ ஒரு பகுதியில் என்று நினைத்துவிடாதீர்கள், குறுகிய இடைவெளியில் பல துண்டுகளாக கரைகள் உடைப்பெடுத்திருக்கிறது, கரைகளில் இருந்த சாலைகள் முற்றிலுமாக தூக்கிசெல்லப்பட்டு வயல்வெளிகளில் சரளை கற்களும், ஜல்லியும் தாருமாக காட்சியளிக்கிறது. ஏற்கனவே டாஸ்மாக் கலாச்சாரத்தால் சாலையோர வயல்வெளிகளில் பீங்கான் பிரச்சினை, இப்போது ஜல்லி தார் முள் வேலி, பார்க்கவே போர்களம் போல காட்சி அளிக்கிறது, இதை எப்படி திருத்தி பயிரிட்டு....???
நீர்நிலை வயல் வெளி என்றதும் ஏதோ சமூக ஆர்வலர் பேச்சு என்று நினைத்து விடாதீர்கள், இது ஒரு பெரும் சமூகத்தின் வாழ்வாதார பிரச்சினை, தமிழக மக்களின் வயிற்று ஆதார பிரச்சினை. இன்னும் மூன்று நான்கு மாதத்திற்கு பயிரிட வாய்ப்பு இல்லை எனும்போது உணவு பொருட்களின் விலையேற்றம் என்னவாக இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்......????
இதோ இன்று ஜல்லிகட்டு திடலுக்கு அவர்களின் மடத் தலைவரின் பெயரை சூட்ட தயாராகிவிட்டார்கள் ஆட்சியாளர்கள், ஆனால் தென்தமிழகம் வரும் கோடைக்கு குடி நீருக்கே தவிக்கும் நிலை வரும் போலிருக்கிறதே, இந்த நிலையில் எப்படி விளைநிலங்களை திருத்தி, பயிரிட்டு அறுவடை பார்ப்பது....???
இதில் லோன் பிரச்சினை வேறு, அடகு வைத்த நகைகளும், ஏலச் சீட்டுகளும், மகளிர் கடன் நிறுவனங்களும் கொடுக்கும் நெறுக்கடியை வேறு சமாளிக்க வேண்டும். வயிற்று பிழைப்புக்கே திண்டாடும் நிலை என்னும்போது, விவசாய வேலை முழுவதும் முடங்கிவிட்ட நிலையில் இருக்கும் கொஞ்ச உடைமைகளையும் வெள்ளம் கொண்டுவிட்ட பிறகு நிலங்களை திருத்த முதலீட்டிற்கு எங்கே போவது.....???
அரசு பொறுப்பை உணர்ந்து தாமே தலையிட்டு போர்கால அடிப்படையில் விளைநிலங்களை திருத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை மீட்டு கரைகளை செப்பனிட வேண்டும், மதகுகளையும் கால்வாய்களையும் பராமரிப்பு பணி செய்து அதைதொடர் பராமரிப்பு செய்யும் உரிமையை முன்னர் இருந்ததுபோல் மக்களிடமே வழங்க வேண்டும், பழையபடி இந்த மண்ணில் ஊர்குடும்பனும், நீர் பாய்ச்சியும், மடைக் குடும்பனும் மதிப்பு மிக்க மனிதர்களாக வலம் வர வேண்டும், இந்த மண்ணில் வேளாண்குடிகளின் மாண்பு மீட்கப்பட வேண்டும்.......!?!
இதெல்லாம் செய்யலேன்னா என்ன செய்விங்கன்னு கேட்கிறிங்களா....???
நாலாபுறமும் வெள்ளம் வந்து எம்மை சூழ்ந்தபோதும் ஐந்த நாட்களாக எம்மை காக்க எவரும் இல்லை என்ற போது எமக்குள் உருவாகியிருக்கும் பாருங்கள் ஒரு விழிப்பு நிலை, அது ஒரு அரசியலாக எம் மக்கள் மத்தியில் வடிவம் எடுக்கும், அந்த அரசியல் எமக்கு தேவையானதை எம் மக்கள் ஆதரவோடு செய்துகொள்ளும்.....! -ஆதி

Comments
Post a Comment