குடும்பனின் பார்வையில்
தீ வைத்தால் வனம் எரிந்து போகும் என நினைப்பது தவறு..
ஆனால் மீண்டும் அதே வனம் உருவாகும்..
சமூகப் போராளிகளை இழப்பது சமூகத்திற்குப் பேராபத்து....
தம்பி நடேஷ் அவர்களின் பதிவிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை அதிகம்.
ராமர் பாண்டியனின் இழப்பை விட அவரைப் பாதுகாக்கத் தவறியதற்கு நாமும் குற்றவாளிதான் என்கிற மன அழுத்தம் என்னை வதைக்கிறது..
தென் தமிழகத்தில் நடக்கிற கொடூரக்கொலைகளுக்கு என்னதான் தீர்வு..
நாம் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை நம் எதிரி தான் முடிவு செய்கிறான் என்ற கருத்தை மறுப்பதற்கில்லை.
முகத்தை, தலையைச் சிதைத்து தன் வன்மத்தைத் தீர்த்துக் கொண்டனர் எதிரிகள்..
வழக்கறிஞர்கள் புடை சூழ
குற்றவாளிகள்
உடனே நீதிமன்றத்தில் ஆஜராகிறார்கள்/ஆஜர்படுத்த படுகிறார்கள்.
கொடுக்கல் வாங்கலில் சிக்கலில்லை.
வாய்க்கால் வரப்புச் சண்டை இல்லை..
அடையாளமும், அதிகாரமும், அடங்க மறுப்பதும், எதிர்வினையாற்றுவதும் தான் காரணங்கள்..
தீ வைத்தால் வனம் எரிந்து போகும் என நினைப்பது தவறு..
ஆனால் மீண்டும் அதே வனம் உருவாகும்..
தேவேந்திரனுக்கு எனச் சில மரபான குணங்கள் உள்ளன.
அதைக் கழுத்தறுப்புகளால் ஒருபோதும் தடுக்க இயலாது..
சமூகப் போராளிகளைக் காக்கத் தவறுகிற நாம் அனைவரும் குற்றவாளிகள் தான்.
29.02.2024.
Comments
Post a Comment