குடும்பத்தின் பழக்கத்தில்

 பழந்தமிழர்_அளவைகளில் சில..!!



◆ முகத்தல் அளவைகள் :


ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்.

ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர்.

ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர்.

ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர்.

ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.

ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர்.

ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர்.

ஒரு குப்பி = எழுநூற்றுமில்லி லிட்டர்.

ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.


முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.

ஐந்து சோடு = ஒரு ஆழாக்கு.

இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.

இரண்டு உழக்கு = ஒரு உரி.

இரண்டு உரி = ஒரு நாழி.

எட்டு நாழி = ஒரு குறுணி.

இரண்டு குறுணி = ஒரு பதக்கு.

இரண்டு பதக்கு = ஒரு தூணி.

மூன்று தூணி = ஒரு கலம்.


◆ நிறுத்தல் அளவைகள்


மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பனவெடை.

முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.

பத்து விராகன் எடை = ஒரு பலம்.

இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.

ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.

மூன்று தோலா = ஒரு பலம்.

எட்டு பலம் = ஒரு சேர்.

நாற்பது பலம் = ஒரு வீசை.

ஐம்பது பலம் = ஒரு தூக்கு.

இரண்டு தூக்கு = ஒரு துலாம்.


ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.

ஒரு பனவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.

ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)

ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.

ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.

ஒரு விராகன் = நான்கு கிராம்.


◆ கால அளவுகள்


இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாழிகை.

இரண்டரை நாழிகை = ஒரு மணி.

மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.

அறுபது நாழிகை = ஒரு நாள்.

ஏழரை நாழிகை = ஒரு சாமம்.

ஒரு சாமம் = மூன்று மணி.

எட்டு சாமம் = ஒரு நாள்.


நான்கு சாமம் = ஒரு பொழுது.

இரண்டு பொழுது = ஒரு நாள்.

பதினைந்து நாள் = ஒரு பக்கம்.

இரண்டு பக்கம் = ஒரு மாதம்.

ஆறு மாதம் = ஒரு அயனம்.

இரண்டு அயனம் = ஒரு ஆண்டு.

அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.


வயலும் வரப்போடு பயணியுங்கள் பழந்தமிழர்களின் விடயங்களை அறிந்துகொள்ள..!!!!!


ஆதியிலிருந்து

பெருமைக்காக வாழவில்லை தமிழன் 


உலக நன்மைக்காக 

வாழ்ந்தவன் ஆதிதமிழன்


சங்கம் வைத்து வளர்த்து தமிழை காத்தவர்கள் 


ஆலயம் தோறும் மரங்களை வளர்த்து 

மரங்களை காத்தவர்கள் 


மலைகள் தோறும் ஆலயம் கட்டிவைத்து மலையை காத்தவர்கள்


ஆறுகளின் கரைகளில் ஆலயங்கள் கட்டி வைத்து நீர்நிலைகளை காத்த ஆதித்தமிழர்கள் 


எதிர்காலத்தில் இப்படியெல்லாம் இயற்கையை அழித்தொழித்து விடுவார்கள் என்று அன்றே தெரிந்ததினாலோ என்னவோ இயற்கையை பாதுகாக்க ஆலயங்கள் கட்டிவைத்தான்


""பழமையை மறந்தோம்,

படாதபாடு படுகிறோம்""


பழமையில் புதுமை படைப்போம்

பழமையை புதுமையாக காண்போம் 


பழமையான ஆலயங்களில் ஆண்டுக்கொரு

முறை திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலே 

எந்த ஆலயமும் அழியாது

எம் மரபணு தமிழ் வழி இல்லையேல்

மரணித்து மீண்டும் பிறப்பேன் தமிழனாக


தமிழும் 

சைவ சமயமும் சைவ நெறியும்

சைவ சித்தாந்தமும் தழைத்தோங்க சிவவழிபாடு

 பின்பற்றுவோம். 


மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம். 


திருச்சிற்றம்பலம்.

அடியார்களே வாருங்கள்

போற்றுவோம் ஆதியில் தோன்றிய பழமையான சிவனார் ஆலயங்களை பாதுகாத்து வழிபடுவோம்...

🙏சொக்கவைக்கும்

சொக்கநாதர் திருவடிகள் போற்றி போற்றி🙏

🙏சொக்கநாதா

சொக்கநாதா🙏

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்