குடும்பனின் அறத்தில்

 ✒️ "அறம் செய விரும்பு.."



திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழாவில் தேவேந்திர குல வேளாளர் அற மடங்கள் இணைந்து பொது அன்னதானம் நடத்துகிறது.


தேவேந்திர குல வேளாளர்

 வீர வள நாட்டார் அறமடம்..

சீவந்திய வளநாட்டார் அறமடம்..

பருத்திக்கோட்டை நாட்டார் அறமடம்...

தூத்துக்குடி உறவு முறை நாட்டார் அறமடம்...

பட்டணக்கரையார் சிக்க வளநாட்டார் அறமடம்...

செழுகை நாட்டார் அறமடம்...

கொற்கை குடவள நாட்டார் அறமடம்

 ஆகிய ஏழு மடங்கள் ஒன்றிணைந்து வைகாசி விசாகப் பெருவிழாவன்று (22.05.2024) பொது அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்துள்ள செய்தி மகிழ்ச்சிக்குரியதாகும்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இவ்வரிய அன்னதான நிகழ்வுகள் தொடர்கின்றன.


தேவேந்திர குல வேளாளர் சமூகம் பயிர்த்தொழிலை மட்டுமே செய்கிற சமூகம் மட்டுமல்ல சமயப் பணிகளையும் அதனோடு கூட நீர்மோர் தர்மங்கள், அன்னதானங்களையும் தொடர்ந்து மரபுவழியாய் நடத்துகிறது..


நாம் ஓர் உயரிய தமிழ்ப் பண்பாட்டுச் சமூகம் என்பதற்கு இது மாதிரியான நிகழ்வுகள் சாட்சி பகர்கின்றன.


பல கிராமங்களில் ஒற்றுமையில்லாமல் இருந்தாலும் இது மாதிரியான அறமடங்கள் இயங்குவதைப் பார்த்ததும் நாமும் ஒன்றுபட்டு இயங்கத் தூண்டுகிறது.


மதங்களைக் கடந்து திருச்செந்தூர் தேவேந்திர குல வேளாளர் அறமடங்கள் இணைந்து நடத்தும் அன்னதானம் சிறக்க நம்மாலான உதவிகளையும், ஆதரவுகளையும் தருவோம்.


நாட்டுக்கோட்டை நகரத்தார் நடத்தும் அன்னதானங்களில் சாப்பிட்ட பின்பு இலை எடுப்பதற்குப் போட்டி நிலவும் என்பதை அறிகிறோம்.


பாவ புண்ணியங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் இறை வழிபாடுகளில் அதிக நாட்டம் கொள்கிறார்கள்.


மனிதர்கள் இயந்திரமயமாய் வாழ்ந்து விட்டுப் போவதில்லை.


முன்னோர் விட்டுச் சென்ற பாரம்பரிய வழிபாட்டுத் தளங்களும் அங்கே தொடர்ந்து நடைபெறும் அறச் செயல்களும் தான் சமகாலத்தவர்களுக்கு கிடைக்கும் வாழ்வியல் முறைமைகள்..


நம்மால் அறமடங்களை ஏற்படுத்த இயலாவிட்டாலும், அன்னதானங்களை நடத்த இயலாவிட்டாலும் அவற்றிற்கு நம்மால் ஆன பங்களிப்பை வழங்குவோம்.


இதைத்தான் அறம் செய விரும்பு என்கிறார்கள்..


முதலில் அறம் செய்ய விரும்புவோம்..


பிறகு அறம் செய்யத் துணை நிற்போம்..


பிறகு அறம் செய்வோம்.


முதுமை அடையும் போது நாம் வாழ்ந்த வாழ்வின் நிறைவு என்பது நாம் என்ன அறம் செய்தோம் என்பது தான்..


அறம் செய்ய விரும்புவோர்...


UPI ID - 42707897970@sbi


                 அல்லது 


Thiruchendur Deventhira kula Velalar Madam..

Bank Alc No: 42707897970

IFSC: SBIN0014463.


என்ற வங்கிக் கணக்கிற்கு தங்களால் இயன்ற தொகையை அனுப்புவோம்..


நன்றி.


©️✒️ யாழி

19.05.2024.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்