குடும்பனின் பார்வையில்

 "இராஜேந்திர சோழனின் கனவை நனவாக்கும் தாய்லாந்து"


"இராஜேந்திர சோழன் இட்ட விதை"

இராஜேந்திர சோழனின் கடாரப்போருக்கு ஒரு காரணம் சீனாவுடன் வணிகம் செய்த தமிழக கப்பல்கள் மலாக்கா ஜலசந்தியில் சந்தித்த கடற்கொள்ளையர் பிரச்சனை.

 ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் இன்னும் அது தீராத பிரச்சனையாக உள்ளது. 

கடாரத்தை பிடித்தபின்னரும், இது நீன்டகால தீர்வு அல்ல என்பதை உணர்ந்தார் ராஜேந்திரன். சோழர் படைகள் அகன்றபின்னர் மீண்டும் கடற்கொள்ளையர் அட்டகாசம் துவங்கும். சோழர் படைகள் அதனால் அந்த பகுதியில் அந்தமானையும் பிடித்தன. அந்தமானுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே 100 கிமி தொலைவுதான்

அந்தமான் சோழரால் மாநக்கவரம் என அழைக்கப்பட்டது. மலாக்கா ஜலசந்தியின் அனைத்து துறைமுகங்களையும் கைப்பற்றியபின் ராஜேந்திரசோழனின் பார்வை தாய்லாந்தின் மேல் திரும்பியது

இஸ்துமஸ் (Isthumus) என்றால் இரு கடல்களை பிரிக்கும் சிறிய நிலப்பரப்பு என பெயர். தாய்லாந்தின் தென்பகுதியையும், வடபகுதியையும் இணைக்கும் இப்படி ஒரு சிறிய நிலபரப்பு உள்ளது. இதன் பெயர் கரா இஸ்துமஸ் (Kra Isthumus) . சுமார் 90 கிமி நீளமுள்ள இந்த பகுதிதான் வங்காள விரிகுடாவையும், தென்சீன கடலையும் பிரிக்கிறது

தாய்லாந்தின் மேல் படை எடுத்து கரா இஸ்தும்ஸ் பகுதியை பிடித்த ராஜேந்திர சோழன் அங்கே தலை தக்கோலம் எனும் துறைமுக நிறுவி தமிழரை குடியேற்றினார். இன்று அந்த நகரம் அதன் திரிபாக தகோபா (Takua- pa) என அழைக்கபடுகிறது.

சோழ கப்பல்கள் மாநக்கவரத்தை அடைந்து, அங்கிருந்து தலைத்தக்கோல துறைமுகத்தை அடைந்தன. தலைத்தக்கோலத்தில் இருந்து மாட்டுவண்டிகளில் சரக்குகள் ஏற்றபட்டு 90 கிமி பயணித்து தென்சீன கடலை அடைந்தன. அங்கே சோழரின் நட்புநாடான காம்போஜம் (கம்போடியா) கப்பல்கள் தயாராக இருந்து அந்த சரக்கை ஏற்றிக்கொண்டு சீனாவின் குவாங்டோங் (Guangdong) துறைமுகத்தை அடைந்தன. அதேவழியில் சீன சரக்குகள் தமிழகம் வந்தடைந்தன

இராஜேந்திர சோழன் நட்ட இந்த விதை தாய்லாந்து அரசின் மனதில் பசுமையாக உள்ளது. இன்று மலாக்கா ஜலசந்தி உலக வர்த்தகத்தில் பனமா, சூயஸ் கால்வாய்க்கு அடுத்த முக்கியத்துவம் பெறுகிறது. கரா இஸ்துமஸ் வழியே கால்வாய் வெட்டலாம் என தாய்லாந்து அரசு முயன்று, அது கைகூடவில்லை

இப்போது ராஜேந்திர சோழனை போல இரு கடற்கரைகளையும் சாலை வழியில் இணைக்கலாம் என சொல்லி கர இஸ்துமஸ் சாலைவழி மேம்பாலம் எனும் திட்டத்தை அறிவித்துள்ளது தாய்லாந்து. அந்தமான் கடலின் ரனோங்  மாநிலத்தில் ஒரு ஆழ்கடல் துறைமுகம் கட்டபடும். அது தென்சீன கடலின் கரையோரம் உள்ள சும்போன் மாநிலத்தின் ஆழ்கடல் துறைமுகத்துடன் 90 கிமி சாலைவழியால் இணைக்கபடும். ரயில், சாலை, பைப்லைன் என மூன்று வழிகளில் இணைக்கப்படும். மலாக்கா ஜலசந்தியில் உலகின் 10% பெட்ரோல் டேன்கர்கள் செல்கின்றன. அவற்றை குறிவைத்து தான் பைப்லைன்

இதனால் ஆறுநாள் பயண தொலைவும், மலாக்கா ஜலசந்தியின் மிகப்பெரும் நெரிசலும் தவிர்க்கபடும் என்கிறது தாய்லாந்து

இது கட்டபட்டால் அந்தமானும் மிகப்பெரும் கேந்திரிய, பொருளாதார முக்கியத்துவம் பெறும்.

இராஜேந்திரன் கனவு இப்படி ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் நிறைவேறுவதால் தான்.

நன்றி:  நியாண்டர் செல்வன்

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்