குடும்பனின் பார்வையில்

 ✒️நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள் எந்த மிரட்டலுக்கும் அஞ்சுவதில்லை.!!!!



அடக்குமுறையை எதிர்ப்பவர்களை ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாது.


அழித்தொழிப்புகளால் சுதந்திர தாகங்களை அணைத்து விட இயலாது.


சாவைக் கண்டு அஞ்சுபவர்கள் சொந்த முகவரிகளில் வாழத் துணி வதில்லை.


கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாதவர்கள் தான் எதிரிகளை அழித்து விடத் துரத்துகிறார்கள்.


சில குற்றவாளிகளுக்கு சிறைச்சாலைகளே பாதுகாப்பாக அமைகின்றன..


சக மனிதர்களை ஒடுக்க நினைப்பவர்கள் ஒரு போதும் மேஞ்சாதிக்காரர்களாய் இருக்க வாய்ப்பில்லை.


ஒடுக்கப்படுகிற ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வெடித்தெழும் குணங்கள் அதிகம் இருக்கும்.


நேரம் வாய்க்கும் போது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அது பீறிட்டெழும்..


©️✒️ யாழி

14.06.2024.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்