குடும்பனின் பார்வையில்

 ✒️ சாகித்ய அகாடமியின் 'பால புரஸ்கார் விருது' பெறும்  "யூமா வாசுகிக்கு" எம் வாழ்த்துகள்.



பட்டுக்கோட்டையில் ...

பள்ளி வயதில் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு ...


சைக்கிளில்

வீடுகளுக்குப் புத்தகங்களை வாசிக்கக் கொடுத்து வாங்கி கூலி பெற்றவர்.


தன் மாமாவின் ஆலோசனையின் பேரில் பத்தாம் வகுப்புத் தேர்வெழுதி வெற்றி பெற்று கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து ஓவியம் கற்றவர்.


பேராவூரணி பெயின்ட் கடையில் சிறிது காலம் வேலை செய்து விட்டு அருகிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணி செய்தவர்.


நீங்களும் மலையாளம் கற்கலாம் என்ற நூலை வாசித்து மலையாள மொழியைக் கற்று மலையாளமொழியில் வெளிவந்த விஜயனின் 'கசாக்கிண்ட   இதிகாசம். "

என்ற கதையை தமிழில் "கசாக்கின் இதிகாசம் "என்று மொழியாக்கம் செய்து 2017 இல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.. 



காலஞ் சென்ற  எழுத்தாளர் பத்தினிப் பாறை பிரான்சிஸ் கிருபாவின் நெருங்கிய நண்பர்.


படிப்பை விட வாசிப்புத்தான் ஒரு மனிதனை முழுமை பெறச் செய்கிறது.


யூமா வாசுகியை "யாழி வாசகர் தளம்" உச்சி முகர்ந்து வாழ்த்துகிறது..


©️✒️ மிக்கேல் ஜெயராஜ்.

15.06.2024.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்