குடும்பனின் பார்வையில்

 ✒️ ஒன்றாய்த் திரள்வதுதான் சமூகப் பாதுகாப்பு..

நான்குநேரிப் பகுதி சமூக முன்னோடிகளுக்கு வாழ்த்துகள்.

மற்ற சமூகங்கள் பல காலங்களுக்கு முன்பே இது போன்ற முன்னேற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் எடுத்து விட்டன.

என்றாலும் நான்குநேரிப் பகுதியில் சமூகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் குடும்பமார்களுக்கு எம் வாழ்த்துகள்.

 

ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளும் காவல் துறையின் செயல்பாடுகளை அரசுக்கும் சமூகத்திற்கும் எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.

பாதிக்கப்பட்ட தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களுக்கு ஆதரவாக நம் சமூக முன்னோடிகள் மாவட்ட அதிகாரிகளிடம் முறையிடுவது பாராட்டுக்குரியதே..

உறவுகள் ஒன்று திரண்டு சட்டப்படியான நடவடிக்கைக்கு முயற்சிப்பது தான்  பக்குவப்பட்ட சமூகத்தை உருவாக்க இயலும்..

அரசியல் தலைவர்களை மட்டுமே நம்பாமல் தாமே களத்தில் இறங்குவதே சரியான முடிவாகும்.

இம்மாதிரியான முன்னெடுப்புகள் பாதிப்புக்குள்ளாகும் எல்லாப் பகுதிகளுக்கும் பரவ வேண்டும்..

பல இடங்களில் நம் மக்கள் பாதிக்கப்படும் போது அதனை எவ்வாறு கையாள்வது என்று கூடத் தெரியாமல் தடுமாறுகிறார்கள்.

மற்ற சமூகங்களில் நாடு என்ற அமைப்பை உருவாக்கி கூட்டமாகக் கூடுகிறார்கள்.

சிக்கல்கள் வரும் போது

மக்களாகத் திரளாத சமூகங்கள் அரசியலில் தோற்றுப் போவார்கள்.

நான்குநேரிப் பகுதியில் வாழும் தேவேந்திர குல வேளாளர்கள் மீது பொய் வழக்குப் பதியும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த செய்தி மகிழ்ச்சி தருகிறது.

உறவுகளுக்கு வாழ்த்துகள்.

©️✒️ மிக்கேல் ஜெயராஜ்

@ யாழி

19.06.2024

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்