குடும்பனின் பார்வையில்

 இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு அரசு சார்பில் பிறந்தநாள் விழா 

இதுதான் நுண் அரசியல்.


ஒருவருக்கு மட்டும் சலுகை காட்டினால் அது விமர்சனமாகும்.


பத்தோடு பதினொன்றாகக் காட்டினால் எதிர்ப்பு விமர்சனங்களைத் தாண்டி, வாக்கு வங்கி அதிகரிக்கும்.


தேவேந்திர குல வேளாளர்கள் அதுக்கெல்லாம் இலாயக்குப் படமாட்டார்கள் என்று பொது வெளியில் பேசுகிறார்கள்..


சொந்தங்களை அந்நியமாக்கும் காரியங்களைச் செய்ய எவ்வளவு பிரியத்தனமும் செய்வார்கள்.


கருணாநிதி எத்தனை காலம் தோல்வியில் இருந்தாலும் நிதானத்தையும் அரசியல் சூட்சுமங்களையும், கட்சிக் கட்டமைப்புகளையும் இழந்து விடவில்லை.


ஜெயலலிதா எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மிகத் தைரியமான முடிவுகளை துணிச்சலோடு எடுத்தார்.


நம் சமூகத்தை மாதிரியான பிற்போக்குவாதிகளைப் பிறசமூகங்களில் பார்த்ததில்லை.


அறவுச்சுடர்கள் அதிகம் இருக்கும் சமூகங்கள் தான் அரசியலிலும் அதிகாரத்திலும் பிரகாசிக்கும்.


எழுத்தாளர்கள்

பேச்சாளர்கள்

பத்திரிக்கையாளர்கள்

அறிவுசார் துறைகளில் உயர்ந்து நிற்பவர்களைக் கொண்ட சமூகங்கள் தான் பின்னப்படும் வலைகளை அறுத்துக் கொண்டு மேலெழும்.


சிதறியவற்றைச் சேர்க்காமல் சிறுகச் சிறுகச் சேமித்தவற்றை அவிழ்த்துப் பரப்பி விடும் போக்குகள் எப்போது மாறுமோ...????


அன்று தான் எம் சமூகம் நிமிர்ந்து நிற்கும்..


நன்றி.

©️✒️ MJ

25.06.2024.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்