குடும்பனின் பார்வையில்
வாழ்த்துப்பா பாடிய பாராளுமன்ற உறுப்பினர்கள்.
------------------------------
25.06.24, செவ்வாய்க்கிழமையன்று தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்று கொண்டார்கள்.
பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி குடும்பத்திற்கு வாழ்த்துப்பா பாடுவதையே கடமையாக செய்து முடித்தனர்.
பாராளுமன்றத்தில் தனிப்பட்ட ஒரு குடும்பத்திற்கு வாழ்த்துப்பா வாசிப்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றா என்பது பொது மக்களுக்கு சந்தேகமாக உள்ளது?.
வாழ்த்துப்பா வாசித்து பாராளுமன்ற நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தார்கள். பாராளுமன்றத்தில் அல்லது சட்டமன்றத்தில் வாழ்த்துப்பா பாடுவதை சட்டத்தின் மூலம் தடை செய்ய வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காகவும் அவர்கள் மூலம் பொதுமக்களின் நன்மைக்காக பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடத்தி நாட்டை சரியான முறையில் ஆள்வதற்காகவும் பல ஆயிரம் கோடிகள் செலவு செய்யப்படுகிறது. அவ்வாறு செலவு செய்யப்படும் பல ஆயிரம் கோடிகள் பொதுமக்களிடமிருந்து ஈட்டிய வரிகளின் மூலம் கிடைக்கிறது. அன்றாடங்காச்சி முதல் பெரிய பணக்காரர்கள் வரை அனைவரும் கொடுக்கும் வரிகளால் இவ்வளவு பெரிய தொகை கிடைக்கிறது. அதை மக்களுக்காக செலவு செய்வதை மறந்துவிட்டு அதை வீணடிக்கும் வேளையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்யக்கூடாது.
வாழ்த்துப்பா பாட வேண்டும் என்றால் அவரவர்கள் கட்சி கூட்டங்களிலும், வீடுகளிலும் தனிப்பட்ட குடும்பத்திற்கான கேளிக்கை இடங்களிலும் அல்லது கட்சி சம்பந்தப்பட்ட கட்டிடங்களிலும் செய்து கொள்ள வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தில் வாழ்த்துப்பா பாடுவது பொதுமக்களின் மத்தியில் மிகவும் எரிச்சலையூட்டியது. இத்தகைய செயல் அநாகரிகமானது என்பதை வாழ்த்துப்பா பாடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உணர வேண்டும், அறிய வேண்டும்.
பாராளுமன்றத்தில் வாழ்த்துப்பா பாடுவதிலும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு அவரவர்களுடைய திறமையை காட்டினார்கள் மிகவும் அநாகரிகமாக இருந்தது. பலர் வித்தியாசமாக வாழ்த்துப்பா பாடினார்கள். அதில் சிலர் உதயநிதியை
வருங்கால தமிழகம் உதயநிதி,
எதிர்காலம் உதயநிதி,
இளம் தலைவர் உதயநிதி,
அடுத்த தலைவர் உதயநிதி மற்றும்
சின்னவர் உதயநிதி என்று முழங்கி பதவி ஏற்றார்கள். ஒரு சிலர் கருணாநிதி, பெரியார் மற்றும் அண்ணா வாழ்க என்று முழக்கமிட்டனர். இறந்த இவர்கள் எப்போது வந்து வாழப் போகிறார்களோ தெரியவில்லை.
புதிதா தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் பாராளுமன்றத்தில் சொன்னா தான் தமிழ்நாடு வாழுமா? இல்லைனா தமிழ்நாடு அழிஞ்சு போயிருமா?. நாம் என்ன செய்கிறோம்? எதற்காக செய்கிறோம்? ஏன் பதவியேற்கிறோம்? என்பதை இவர்களெல்லாம் உணர வேண்டும்.
ஸ்ரீபெரும்புதூர் டி ஆர் பாலு, ராமநாதபுரம் நவாஸ் கனி, விருதுநகர் மாணிக்கம் தாகூர் , நாகை செல்வராஜ், கடலூர் விஷ்ணு பிரசாத் மற்றும் கனிமொழி போன்றோர் நாகரிகமாக பதவி ஏற்றுக் கொண்டார்கள்.
கோவை தொகுதி எம்பி நன்றி சொல்கிறார், அதை போய் ஊர்ல சொல்ல வேண்டியது தானே? அம்மா அப்பாவுக்கு பாராளுமன்றத்தில் வந்து சொன்னாதான் அவங்க ஏத்துக்குவாங்களா?.
கிருஷ்ணகிரி எம்பி கோபிநாத் தெலுங்கில் பதவி ஏற்பு பிரமாணம் செய்கிறார்.
ஆரணி தொகுதி எம்பி தரணிவேந்தன் வாழ்க அமைச்சர் எ. வ. வேலு என்றார்.
நாமக்கல் எம்பி தீரன் சின்னமலை ஆசியால் பதவி ஏற்கிறேன் என்றார்.
பொள்ளாச்சி எம்பி "பற்று கொண்டு இருப்பேன்" என்பதற்கு பதிலாக "பற்று கொன்று இருப்பேன்" என்றார்.
பார்த்து வாசிக்கிறதை கூட ஒழுங்கா வாசிக்க தெரியாதவர்கள் எல்லாம் நமக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள்.
சச்சிதானந்தம் 'ஒருமைப்பாடு' என்பதை 'ஒற்றுமைபாடு' என்று வாசிக்கிறார்.
1.5 கோடி மோசடி புகழ் ஆ ராசா கட்சி கொடிய துண்டா போட்டுட்டு வந்து இருந்தார்.
துரை வைகோ கையில கட்சி கொடிய கட்டிட்டு வந்து இருந்தார்.
(அல்பங்கள் என்று தான் சொல்ல வேண்டும்)
வெவ்வேறு அலுவலகம் செல்லும் ஊழியர்களுக்கு ஆடை அணிவதில் நெறிமுறைகள் உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏன் இந்த நெறிமுறை இருக்கக் கூடாது?.
கொஞ்சம் கூட நாகரிகம் கிடையாது. இவர்கள் நாகரீகம் கற்றுக் கொள்ள வேண்டும்.
அருண் நேரு, அவர் அப்பா பெயரை பிரதிநிதித்துவம் படுத்துவதில் சந்தோஷப்பட்டு கொண்டார்.
விஷ்ணு பிரசாத் கடலூர் MP எந்த வாழ்த்துப்பாவும் பாடவில்லை, அவர் ஊர் திரும்பி வரட்டும் வந்ததுக்கு அப்புறம் உனக்கு இருக்கு என்று திமுகவினர் சொல்வது நமக்கு கேட்கிறது.
மயிலாடுதுறை எம்பி சுதா கடவுள் முருகன் பெயரிலும் அப்புறம் "பாரத் ச்சோடோ" என்றும் முழங்கினார். பல பேருக்கு என்னவென்று விளங்கவில்லை.
கார்த்திக் சிதம்பரம் அவர் பெயரையே ஒழுங்கா உச்சரிக்கவில்லை "கார்த்திக் ப சிதம்பரம்" என்பதற்கு பதில் "கார்த்திக் பா சிதம்பரம்" என்றார்.
சு .வெங்கடேசன் மதுரை, "ஒருமைப்பாட்டை" "ஒற்றுமைபாட்டை என்று வாசித்தார், தவறாக பார்த்து வாசித்தார்.
தங்க தமிழ்ச்செல்வன் ஸ்டாலின் படத்தை காட்டி பெருமை பெற்றுக் கொண்டார். வெகு காலம் அதிமுகவில் இருந்தவர் இப்போது திமுக எம்பி.
கன்னியாகுமரி விஜய் வசந்த் சாதி பெயரை மறக்காமல் சொல்லிட்டாரு.
நாகை எம்பி செல்வராஜ் மிக நாகரிகமாக பதவி ஏற்றார்.
பெரும்பாலான எம்பிக்கள் கனிமொழியை வணங்கி விட்டு பதவி ஏற்க வந்தார்கள்
தயாநிதி மாறன் மிகவும் அநாகரிகமாக வாழ்த்துப்பாக்களை பாடினார் அவர் பாடிய வாழ்த்துப்பா பின்வந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னுதாரணமாக இருந்தது என்பதால் ஒட்டுமொத்த பதவி ஏற்பும் அநாகரிகமாகத்தான் இருந்தது.
Comments
Post a Comment