குடும்பனின் பார்வையில்

 ✒️ உஞ்சனைத் தியாகிகளுக்கு வீரவணக்கம்.


1979 ஆம் ஆண்டு ஜுன் 28 ஆம் நாள் உஞ்சனையில் சாதியப் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தேவேந்திரர்களுக்கு எம் வீரவணக்கம்.🙏

தேவேந்திரர்கள் தமக்கான  கோயில் உரிமையை மீட்டெடுக்க நடந்த போராட்டமாகப் பேசப்பட்டாலும் தொடர்ந்து அப்பகுதியில் 

தேவேந்திரர்களின் வாழ்வியல் மீது ஒரு குறிப்பிட்ட சாதியினர் வன்முறையை ஏவிய படியே தான் இருந்தனர்.

தமக்குச் சமமான வாழ்க்கை முறையை தேவேந்திரர்கள் வாழக்கூடாது என்ற பிற்போக்குத் தனத்தின் வெளிப்பாடுதான் அந்த சாதிய வெறியாட்டம்.

புகழ் பெற்ற நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் தமது "அடித்தள மக்கள் வரலாறு "

என்ற நூலில் 1931 இல் இப்பகுதியில் வாழ்ந்த மேலாதிக்கசாதியினர் தேவேந்திரர்கள் மீது பதினோரு கட்டுப்பாடுகளை விதித்ததாக குறிப்பிடுகிறார்.

இவையாவும் பொருளாதார ஆதிக்கம் தொடர்புடையதாகவும் பண்பாட்டு ஆதிக்கம் தொடர்புடையதாகவும் இருந்தன என்கிறார்.

இவற்றை எதிர்த்து மீறியதால் வீடுகள் தீயிடப்பட்டன, தானியங்களும் பொருட்களும், கால்நடைகளும் கொள்ளையிடப்பட்டன.

1931 லிருந்து வெறுப்புகளும் அடக்குமுறைகளும்

வெறித்தனமும் நீடித்த படியே தான் இருந்தன.

இதன் தொடர்ச்சியாக தேவேந்திரர்களின் பொருளாதார வளர்ச்சியையும் மேம்பாட்டு வாழ்வியல் முறைகளையும் ஏற்க முடியாதவர்கள் உடைமைகளையும்

உரிமைகளையும் பறிக்க முயற்சித்தபடியே வாழ்ந்தனர்.

இறுதியாக பல ஆண்டுகள் தடைபட்டிருந்த ஐயனார் கோயில் திருவிழாவில் தேவேந்திரர்கள் குதிரை எடுப்பதைத் தடுத்ததில் திட்டமிட்டகலவரம் நிகழ்ந்தது.

நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஓலை வீடுகள் தீயிடப்பட்டன.

பெண்கள் உட்பட 27 பேருக்குப் படுகாயங்கள் ஏற்பட்டன.


கலவரத்தில் மாவீரர்கள்

தேரடியான்,

முத்தையன், 

வீராச்சாமி, 

சாத்தையா,

பெரியையா 

ஆகிய ஐந்து தேவேந்திரர்கள் படுகொல்லப்பட்டனர்.


உஞ்சனைக் கலவரத்தில் 83 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனால்

இவர்கள் யாவரும் 1983 ஆம் ஆண்டு விடுதலையடைந்தனர்.


தேவேந்திரர்களை அழித்த

கானூர், கீழவெண்மணி

உஞ்சனை 

போன்ற

பல வழக்குகளில்

குற்றவாளிகள் விடுதலை தான் செய்யப்பட்டனர்.

காலங்கள் ஓடி விட்டன.

இப்போது இரு சமூகமும் பழைய பகையை மறந்து வாழத் தலைப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி கிடைக்கிறது..

அதன் வெளிப்பாடுதான் அண்மையில் 

கண்டதேவி கோயில் தேரோட்டம் வெற்றி கரமாக நடந்தேறியது.

எனினும் வீரத் தியாகிகளுக்கு நம் வீரவணக்கம்🙏

வாழ்க தேவேந்திரனியம்.

வளர்க சமூக ஒற்றுமை.


©️✒️ யாழி

28.06.2024.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்