குடும்பனின் வாழ்வில்
✒️ஜுன்.. 06.
அன்புத் தம்பி கனகராஜ் குடும்பருக்கு எம் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
எந்தக் கைமாறும் கருதாமல் இதே சமூகப் பற்றோடு நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
நானறிந்தவரையில் இப்படியாப்பட்ட ஒரு சமூக விடுதலை விரும்பியை நான் கண்டதில்லை.
சமூகம் அவமதிப்புகளைச்
சாதரணமாகக் கடந்து போகிற மனிதர்களுக்கு மத்தியில் வீறு கொண்டு எழுந்து படைக்குப் புறப்படுகிற குணம் உம்முடையது.
தொத்த மாடாக இருந்தாலும் காக்கா கொத்தப் பொறுக்காது என்பார்கள்..
தலையை ஆட்டும் வாலை வீசும்..
சகல வல்லமை உள்ளவர்களே கூட மௌனமாக வாய்பொத்திப் போகிற காலத்தில் களத்தில் நின்று போராடுகிற குணம் உம்முடையது.
பருத்திக்கோட்டை நாட்டார் சங்கத்தின் பொறுப்பில் உள்ள உம்மை
இன்றைய இளைய சமூகம் உம்மைப் பின்பற்ற வேண்டும்..
துணிச்சலோடும்
வீரத்தோடும்
வீரியத்தோடும்
தொடர்ந்து களமாடுவோம்.
நன்றி
வாழ்த்துகள்.
©️✒️ மிக்கேல் ஜெயராஜ்
@ யாழி
06.06.2024.

Comments
Post a Comment