குடும்பனின் பார்வையில்

 புத்தாண்டு



இன்று

ஆங்கிலப் புத்தாண்டு.

இந்த பூமிபந்தில்

கணிசமான நாடுகள்

வானவேடிக்கையுடன் இந்நாளை வரவேற்கிறது.


எங்கள் சாம்ராச்சியத்தில் சூரியன் மறைவதே இல்லை என ஆங்கிலேயர் தம்பட்டமடிக்கும் அளவிற்கு பூமியில் அவர்கள் பேரரசு விரிந்திருந்த காலம் ஒன்று இருந்தது.


இன்று அவர்களது காலனிகள் தங்களை விடுவித்துக் கொண்டு,

தனித்தனி தேசங்களாகி விட்டது.


ஆனால் அவர்களின் ஆண்டு (கிரிகேரியன் ஆண்டு), பெரும்பாலும் உலகப் பொது ஆண்டாக நிலைபெற்று விட்டது.


ஆங்கிலப் பேரரசுக்கு 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு

உலகில் ஏழு பேரரசுகள் இருந்தன.

அதில் ஒன்று தமிழ்ப் பேரரசு.


இன்று

ஐ நா -வில் இருநூறு கொடிகள் பறக்கிறது.

உலகில் பறந்த ஏழு கொடிகளில் ஒரு கொடியான தமிழ்க்கொடி அதிலில்லை.


இன்று

தமிழ்ப் பேரரசு இல்லை.

பின்பு வந்த ஆங்கிலப் பேரரசும் இல்லை.

ஆனால் ஆங்கில இனத்திற்கு

தேசமும் கொடியும் இறைமையும் மாண்பும் இருக்கிறது.


தமிழ் இனத்திற்கு

கொடியும் இல்லை

தேசமும் இல்லை

இறைமையும் இல்லை

மாண்பும் இல்லை.


வாழ்ந்து கெட்ட இனத்தின்

வாரிசாக நாம் இருக்கிறோம்.


ஆனால் 

நாம் தடமின்றி அழிந்து போகாமல்

மொழியும் வரலாறும் உசுப்பிக் கொண்டேயிருக்கிறது.


தமிழ்

இலக்கண இலக்கியங்களோடு

வரலாற்றில் கோலோச்சி கொண்டிருந்த போது

ஆங்கிலம் என்ற மொழியே பிறக்கவில்லை.


இன்றைக்கும்

தமிழ்தான் செம்மொழி.

ஆங்கிலம் செம்மொழியல்ல.


எல்லாம் இருந்தும்

தமிழர்கள் ஏதுமற்றவர்களாக இருக்கிறோம்.

எதுவும் இல்லாதவர்கள்  எமை அடக்கி ஆள்பவர்களாக இருக்கிறார்கள்.


வாழ்வும் மாண்பும்

அடையாளத்தில்தான் இருக்கிறது.

அடையாளம்

இறைமையில் இருக்கிறது.

இறைமை

அரசுரிமையில் இருக்கிறது.


அரசுரிமை இல்லாத இனம்,

தேய்ந்து கலந்து சிதைந்து

இல்லாத இனமாகி விடும்.


நாம்

வாழ்ந்து கெட்டவர்கள்தான்.

ஆனால்

அழிந்து விட்டவர்களல்ல.


மொழியும் வரலாறும்

நாளைய காலத்திற்கு

இன்றைக்கு

நம்மை எழுப்பிக் கொண்டேயிருக்கிறது.

எழுவோம்!


பட்டொளி வீசிப் பறக்கும்

அனைத்து நாட்டுக் கொடிகளில்

தமிழ்க்கொடியும்

இறைமையோடு பறக்க பாடாற்றுவோம்!


உண்மையான வீரனால்தான்

அகிம்சையை கடைபிடிக்க முடியும் என்றார் காந்தியார்


சொந்த தேசத்தின் புத்தாண்டு உடையவன்தான்

எந்த தேசத்தின் புத்தாண்டையும் வரவேற்பது மரியாதையாக இருக்கும்.


மரியாதையோடு வரவேற்கும் காலத்தை உருவாக்குவோம்.


செம்பரிதி 

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்