குடும்பனாக முதன் முதலில்
முதன்... முதலில் ....
சித்தமல்லி கோ.முருகையன் நாடாளுமன்ற உறுப்பினர்
முதன் முதலில் பட்டியல்இன மக்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாத காலத்தில் 1955 ஆம் ஆண்டில் முதல் ஊராட்சி மன்ற தலைவர்
முதன் முதலில் அகில இந்திய அளவில் பட்டியலின 1960 ஆம் ஆண்டில் முதல் ஒன்றிய பெருந்தலைவர்
முதன் முதலில் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் முதல் பட்டியலின/தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த 1977 ஆம் ஆண்டில் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்
முதன் முதலில் 1977 ஆம் ஆண்டு வீசிய கடும்புயலில் எம்பியாக இருந்த தோழர் தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை மாண்புமிகு மாநில முதல்வர் எம். ஜி .ராமச்சந்திரன் அவர்களுக்கு அனுப்பி வைத்தார் இதற்கு முன்பெல்லாம் எந்த எம் பி யும் தன் ஒரு மாத சம்பளத்தை கொடுத்ததாக வரலாறு இல்லை. முதல் முதலில் தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்து வழிகாட்டிய எளிமையாக குடிசையில் வாழ்ந்த எம்.பி.
முதன் முதலில் மன்னார்குடி முத்துப்பேட்டைக்கு மன்னார்குடி கோட்டூர் மீனம்பநல்லூர் திருக்களார் இடையூர் சங்கேந்தி வழியாக சுமார் 45 கிலோமீட்டர் தொலைவுக்கு எந்த போக்குவரத்தும் இல்லாத காலத்தில் ஒன்றிய பெருந்தலைவர் ஆனவுடன் முதல் முதலில் பேருந்து ஓட வழிவகை செய்த தோழர்
முதன் முதலில் சாதி சமய கட்சி வேறுபாடுகளை கலைந்து அனைத்து பொது மக்களையும் நாட்டின் வளர்ச்சியில் ஈடுபடுத்த முடியும் என்பதை உழைப்புக்கொடை பணியின் மூலம் முதலில் நிரூபித்துக் காட்டிய தோழர்
முதன் முதலில் இரத்ததானம் கண் தானம் உடல் தானம் எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் மக்களின் உழைப்பை ஊதியம் இல்லாமல் தானமாக பெற முடியும் என்பது என்பதை உலகுக்கு உணர்த்திய தோழர்
முதன் முதலில் 1968 ஆம் ஆண்டு நடந்த வெண்மணி படுகொலையை அறிந்த தோழர் கட்சித் தோழர்களை அழைத்துக் கொண்டு போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவை மீறி உள்ளே நுழைந்த பொழுது தோழர்களை தடுத்து இங்கே யாரும் உள்ளே வரக்கூடாது என்று தடுக்கிறது போலீஸ்.. கோபம் கொப்பளிக்க என் மக்களை கொன்னுட்டு யாருக்குடா பாதுகாப்பு கொடுக்கிறீர்கள் என் மக்களை கொளுத்தி விடும்போது நீங்க எல்லாம் எங்கடா போனீங்க என்று கர்ஜிக்கிறார் இவர்களில் கோவத்தையும் சூழ்நிலையின் கருத்தில் கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களை உள்ளே அனுமதிக்கிறது போலீஸ் 43 பேர் என போலீஸ் கணக்கை முடிக்க பார்க்கிறது இந்திய கம்யூனிஸ்ட் தோழர் ஏ எம் கோபு ஒரு தாயும் தன் மார்பில் குழந்தையோடு பால் கொடுத்தவாறு இறந்திருக்கிறார் என்பதை சாம்பலாய் போன அந்த தியாக உடலை காண்பிக்கிறார் பிறகு 44 பேர் தியாகிகள் என்பதை முடிவு செய்யப்படுகிறது தன் குடும்பத்தை எல்லாம் இழந்து நிர்கதியான மக்களை பார்த்து கண்ணீர் விட்டு கதறுகிறார் தோழர் எஸ் ஜி முருகையன் 1975 ஆம் ஆண்டு அவர் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்விழா மலரான தஞ்சை மண்ணில் ரத்தம் சிந்திய கம்யூனிஸ்டுகள் என்ற நூலில் இந்த தியாக வரலாற்றை முதன் முதலில் பதிவு செய்து இருக்கிறார் தோழர்
முதன் முதலில் 1977 ஆம் ஆண்டு இயங்காமல் கிடந்த நாகை துறைமுகத்தை அன்றைய இந்திய ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்களை சந்தித்து இயங்க வைத்து இலங்கை பர்மா சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளுக்கும் சிங்கப்பூர் மலேசியாவுக்கு கப்பலோட்டிய தமிழர் வ உ சி பெயரில் கப்பல் போக்குவரத்தை முதல் முதலில் தொடங்கி வைத்த தோழர்
புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சித்தமல்லியில் இருந்து நாகப்பட்டினம் வரை தரை கண்ட இடமெல்லாம் சைக்கிளை ஓட்டிக்கொண்டு தண்ணீர் உள்ள இடங்களில் எல்லாம் சைக்கிளை தலையில் தூக்கிக்கொண்டும் நாகை சென்றடைகிறார் தோழர் அக்கரைப்பேட்டை கீச்சான் குப்பம் போன்ற மீனவ பகுதிகளை சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறுகின்ற வேளையில் அங்குள்ள மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக கதறுகிறார்கள் கொல பட்டினியா கிடக்கிறோம் ஐயா யாரும் உதவி செய்ய வரவில்லை என்று சொல்கிறார்கள் உடனே கிட்டப்பா என்ற தோழரை அழைத்து ஒரு இரும்பு பாறை எடுத்து வா என்கிறார் அவரும் பாறை எடுத்து வர சைக்கிளில் உட்கார வைத்து எங்கே உணவு தானிய கிடங்கு இருக்கிறது என்று கேட்கிறார் உணவு தானியங்கி கிடங்கை நோக்கி சைக்கிள் வேகமாக செல்கிறது உணவு தானிய கிடங்கின் பூட்டை உடைக்கிறார் தோழர் எஸ் ஜி எம் அங்கிருந்த பொருட்களை எல்லாம் அங்கிருந்து தோழர்களின் உதவியோடு டிராக்டரில் ஏற்றி உணவின்றி பரிதவித்த ஏழை எளிய மக்களுக்கு மக்களுக்கு
முதல் முதலில் உணவு தானியங்களை கொடுத்து வழங்கி பசியாற வைத்தார்
...இந்த செயல் தஞ்சை மாவட்டம் முழுமைக்கும் காட்டுத்தீயாய் பரவியது மக்கள் உணவு தானியக் கிடங்கை நோக்கி படையெடுக்க தொடங்கினர் உடனே அன்றைய முதல்வர் மாண்புமிகு எம்ஜிஆர் அவர்கள் உடனே அறிவித்தார் தஞ்சை மாவட்டத்தில் உள்ள உணவு தானிய கிடங்கில் உள்ள அனைத்து பொருட்களையும் அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என
தோழரின் செயல் முன்னுதாரணம் ஆகி தமிழ்நாடு அரசு அதைக் கவனத்தில் கொண்டு செயல்படுத்தியது
முதன் முதலில் ஆதிச்சபுரத்திலிருந்து வேதபுரம் களப்பாலுக்கு புதிய சாலையை மக்களை திரட்டி முதல் முதலில் அமைத்துக் கொடுத்த தோழர்
முதன் முதலில் ஒரத்தூர் பைங்காட்டூர் நல்லூர் மக்கள் மன்னார்குடிக்கு எளிதில் சென்று வர சாலை வசதியையும் கோரையாற்றில் பாலத்தையும் கட்டி தந்த எளிமையான தோழர்
முதன் முதலில் மேல தஞ்சையையும் தஞ்சையும் கீழ தஞ்சையும் இணைக்கின்ற பெருகவாழ்ந்தனில் பாமினி ஆற்றில் குறுக்கே பாலம் அமைக்க ஏற்பாடு செய்த தோழர்
முதன் முதலில் சிரமதான பணியைசிறப்பாக செய்ததற்காக ரஷ்யா மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கு சிறப்பு விருந்தினராக சென்று வந்த தோழருக்கு அந்நாட்டு மக்கள் அவருக்கு கொடுத்த அன்பளிப்பு பொருட்களை அனைத்தையும் கட்சியிடம் கொடுத்த மாபெரும் தோழர்
முதன் முதலில் தஞ்சை கீழ ராஜ வீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடம் வாங்க வேண்டும் என்று கட்சி தோழர்கள் முடிவு எடுத்த பொழுது தன்னுடைய மனைவியின் நகைகள் அனைத்தையும் ஒரு சுருக்கு பையில் போட்டு இதை விற்பீர்களோ அடகு வைப்பீங்களோ எனக்கு தெரியாது இதுதான் அட்வான்ஸ் தொகை இதை வைத்துக்கொண்டு இடத்தை வாங்குங்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அலுவலகம் கட்ட இடம் வாங்க முதன் முதலில் தன் மனைவியின் நகைகளை கட்சிக்கு அளித்த தோழர்
முதன் முதலில்1973 ஆம் ஆண்டு மார்க்சியத்தை படித்து வழிகாட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ரஷ்ய நாட்டுக்கு இரண்டு இளைஞர்களை அனுப்பி வைத்தது ஒன்று ஐயா ஆர் நல்லகண்ணு மற்றொருவர் தோழர் எஸ் ஜி முருகையன்
முதன் முதலில் எம்பிக்கு வழங்கிய இலவச தொலைபேசி இரண்டையும் ஒன்று தஞ்சாவூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கும் மற்றொன்றை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மன்னார்குடிக்கும் வழங்கிவிட்டார் அப்பொழுது தோழர்கள் அவரிடம் கேட்டனர் உங்களுக்கு அரசு வழங்கிய இலவச தொலைபேசியை உங்க வீட்டுக்கு வைத்துக் கொள்ளவில்லையே என்று .... அதற்கு தோழர் சொன்னார் என் பொண்டாட்டி பிள்ளைங்க பேசறதுக்கு இல்லை தொலைபேசி மக்கள் பயன்பெற வேண்டும் அதற்காகத்தான் கட்சி அலுவலகத்திற்கு வழங்கினேன் என்றார் அந்த மகத்தான தோழர்
இப்படி எல்லா பணிகளிலும் முதல் முதலாய் வந்து முத்திரை பதித்து வந்த ஒப்பற்ற தோழரை கட்சி நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடிக்கு பேருந்தில் வருகிறார் அப்பொழுது அன்று முத்துப்பேட்டைக்குச் செல்ல வேண்டிய பேருந்து வரவில்லை மார்கழிப் பனியில் நடுங்கியவாறு பொதுமக்கள் பேருந்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த நேரத்தில் எம்.பியாக இருந்த தோழர் எஸ் ஜி முருகையன் தஞ்சாவூர் பேருந்தை விட்டு இறங்கி வருகிறார் தோழரை பார்த்த சந்தோசத்தில் ஐயா நம்ம ஊருக்கு வர வேண்டிய பஸ் வர வில்லை என்று எம்பியிடம் பொதுமக்கள் முறையிடுகிறார்கள் அடுத்த ஒரு சில மணி நேரத்தில் தான் சாகப் போகிறோம் என்பதை அறியாத அந்த வெள்ளை மனம் கொண்ட அந்த எம்பி...
சோழன் போக்குவரத்து கழக மேலாளரை அணுகி முத்துப்பேட்டை செல்ல ஒரு பேருந்தை ஏற்பாடு செய்து பேருந்து வருகிறது அப்பாடா தெய்வம் போல வந்து நமக்குப் பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்த புண்ணியவானே என்று மார்கழிபனியிலும் கடும் குளிரிலும் நடுங்கிக் கொண்டிருந்த மக்கள் புகழ மக்களை ஏற்றிக்கொண்டு தானும் அதே பேருந்தில் தான் வைத்திருந்த சிவப்புத் துண்டை எடுத்து போத்திக்கொண்டு அதே பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டு மன்னார்குடியில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி செல்கிறது அந்த பேருந்து நள்ளிரவு பன்னிரண்டு முப்பது மணி அளவில் சித்தமல்லி சென்றடைகிறது அந்த பேருந்து.....
சித்தமல்லியில் எந்த மின்விளக்கையும் எரிய விடாமல் அனைத்து விட்டார்கள் பாவிகள் சித்தமல்லியில் அவர் வீட்டு அருகே பேருந்து நிற்கிறது நடத்துனர் கேட்கிறார் ஐயா நான் உங்களை வீடு வரை கொண்டாந்து விட்டுட்டு வரட்டுமா என்று கேட்கிறார் அதற்குப் பரவாயில்லை தம்பி நான் சென்று விடுகிறேன் அவர் பேசிய கடைசி வார்த்தை அது தான் என்று பிரியாவிடை சொல்லிவிட்டு கீழே இறங்குகிறார் தோழர்
பேருந்து நகர்ந்து செல்கிறது காத்திருந்த கயவர் கூட்டம் எந்த சிவப்பு சித்தாந்தம் உலகத்திற்கு வெளிச்சத்தை தரும் என்று நம்பி போர்த்தியிருந்தாரோ அந்த சிவப்பு துண்டால் கழுத்தை இறுக்கி முதுகுக்கு பின்னால் 8 கத்திக்குத்துகளும் நெஞ்சிலே 25 கத்தி குத்துகளும் மொத்தம் 33 கத்தி குத்து காயங்களுடன் அந்த மாவீரனை சூழ்ச்சி செய்து பொய்யான காரணங்களை சொல்லி பழி தீர்த்துக் கொண்ட பண்ணையார்களும் நில உடமையாளர்களும் ஆளும் வர்க்கத்தின் துணையோடு ஏழை எளிய மக்களை ஒன்று திரட்டி அணி திரட்டி போராடி வந்த தோழரை ரத்த வெள்ளத்தில் சாலை ஓரத்தில் உடலை வீசி எறிந்து விட்டு போனார்கள் ..
அகில இந்திய அளவில் முதல் முதலில் 6-01-1979 ஒரு மக்களவை உறுப்பினரை இதற்கு முன் படுகொலை செய்த வரலாறு கிடையாது அதிலும் நீங்கள் தான் ஐயா மு.த..ன்.. மு.த.லி.ல் .....
கண்ணீருடன் .....
Sgm Lenin
எஸ் ஜி எம் லெனின்


Comments
Post a Comment