குடும்பனின் அறிவுரை
தமிழர் தேசியர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களும் நெறிமுறைகளும்:
---
தமிழே உயிர்; தமிழரே உறவு.
குடும்பமாம் நுந்தாவிளக்கு குலைதல் கூடாது.
ஆண்பால் பெண்பால் எனும் இருபால்
அஃதன்றி வேறில்லை பால்.
பிள்ளைப் பேறு பெரும் பேறு.
பெற்றோரையும் பெரியோரை மதித்திடு!
அறமும் மறமும் தமிழர்க்கு வேண்டுவன.
அன்பும் பண்பும் தமிழர்க்கு அழகு.
அன்பும் பாசமும் நல்ல பிணைப்பு!
முற்றிய நெற்கதிர் தாழும் அதுபோல்
அடக்கம் உயர்வு தரும்.
தொழில் வேறாயினும்,
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’.
சாதியையும் மதத்தையும் பின்னால் வை!
தேசிய இனத்தை முன்னாள் வை!
மனத்தில் உறுதி; வாக்கினில் இனிமை.
வன்சொல் விடுத்து இன்சொல் பழகு!
பழமையை அளந்து, புதுமையை ஆக்கு!
இயற்கையும் செயற்கையுமே ஊழும் வினையும்.
இயங்கியல் பழகு!
ஒப்புரவும் பொதுவுடைமையுமே எதிர்காலம்.
இந்தி’யமும் திராவிட'மும் புறப்பகை
சாதியும் மதமும் அகப்பகை.
பகையை பகையாக பார்!
அகப்பகையை எட்டித் தள்!
நட்பாயினும் அயலார் அயலாரே!
தமிழரினத்தின் தளைகளை அறுத்தெறி!
தேசிய விடுதலையை ஏற்றிப் போற்று!
கெட்ட போரிடும் உலகை ஒழிக்க,
தேசிய விடுதலைப் போரை ஆற்று!
வேண்டாச் சாங்கியமும் சடங்கும் வேண்டாம்.
சாங்கியம் சடங்குக்குக் கடன் பட்டால்
நிழலாய் வரும் தீங்கு..
கணியமாம் கரவு அறிவியல் வானியலாகா
நம்பி மனமயர்தல் வேண்டாம்.
கற்பதே சிறப்பு, அறிவதே பெருமை.
பெண்மையைப் போற்று!
குழந்தை நலன் கருதி,
வேண்டா மணமுறிவைத் தவிர்!
நாக்கைக் கட்டு, செயலைக் கூட்டு!
புறங்கூறல் அறமன்று.
வெட்டிப்பேச்சு கறிக்குதவாது.
நம்புவதும் நம்பாததும் உம் பாடு,
நம்பாதவனை வம்புக் கிழுக்காதவரை.
ஊழ் வேறு, வினை வேறு அறிவியலில்;
சமயத்தால் வந்த குழப்பமே 'ஊழ்வினை'.
‘ஊழ்’ என்பது தன்வினை
‘வினை’யென்பது பிறவினை.
ஓரணுவின் ஓயாப் பெயர்ச்சியே ‘ஊழ்’
பருப்பொருளின் இயக்கமே ‘வினை’
உலகம் மெய்யென நம்பு;
உலகு மாயையெனல் பொய்.
எதிர்மறைகளின் ஒற்றுமையும் முரணுமே
முரண்பாட்டின் உலகளவு ஊழ்ப்பாடு.
ஊழின் உட்பக்கமே தன்னுரிமை
(Freedom is understanding the Necessity)
பொருள்தான் கருத்திற்கு முதல்.
பொருளும் கருத்தும் ஒன்றுமற்றொன்றாகும்.
அறமிலா அறிவியல் பெருங்கேடு பயக்கும்
அறத்தொடு அறிவியலே நன்று.
அன்பும் அறமும் இயைதல் வேண்டும்.
முற்றுமை முற்றிச் சார்புமையாகும்
சார்புமைக்குள்ளும் முற்றுமை இருக்கும்.
பொருளும் ஆற்றலும் ஒன்றுமற்றொன்றாகும்.
தலைக்கட்டும் குடியும் குலமும்
கோத்திரமும் சாதியும் வண்ணமும்
ஒருநடுவ வட்டத்தின் வெவ்வேறு வரம்புகள்;
அளவாலும் இயல்பாலும் வெவ்வேறானவை.
கருத்தியல் இல்லாச் செயலும்
செயலில்லாக் கருத்தியலும் கவைக்குதவா.
பொருளியல் விடுதலை உடம்பாயின்,
விடுதலை அரசியல் உயிராகும்.
வீட்டுக்கும் எல்லை நாட்டுக்கும் எல்லை
நாட்டின் எல்லைக் காத்துநில்.
நல்ல வரலாற்றியல் - நல்ல கருத்தியல் -
நல்ல அமைப்பியல்;
அதுவே படிமுறை வளர்ச்சி.
இந்தி(ய) வரலாற்றியல் பொய்;
ஆரிய-திராவிட வரலாற்றியலும் பொய்;
தமிழிய வரலாற்றியலே மெய்.
கட்டமைப்பின்றிக் களம் காணல்
கானல்நீரைத் தேடி அயர்வதேயாம்.
தன்னாய்வும் திறனாய்வும் கட்டமைப்பின்
நலம் பேண உதவுவன.
கைம்பெண் மறுமணம் நன்று.
பெண்மகவுக்குக் கள்ளிப்பால் ஊட்டல்
கொலையிலும் கொடுங் கொலை.
பெண்ணுக்கு மாதவிடாய் இயற்கை யாயின்
தீட்டுத் துடக்கு வேண்டாம்.
அவ்வுலகு பொன்னுலகு செத்தப் பிறகாம்
இவ்வுலகு பொன்னுலகென நயந்திடு.
நல்லதமிழ்ப் பெயர் சூட்டல் நன்று
வாழும் சூழல் அறிந்து.
செரித்தால் உணவு; செரியாதது நஞ்சு.
‘நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்’
என்றும் உடல்நலம் பேணுக.
உணவே மருந்து மருந்தே உணவு
என்பது இயங்கியல் என்றறிக!
#தமிழா இனஉணர்வு கொள்
#விழிப்பாய்தமிழா
#தமிழ்வெல்க
பதிவு: ஐயா குணா
Comments
Post a Comment