குடும்பனின் அறிவுரை

 பாலுண்போம்; 

எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம்; 

பகலில் புணரோம்; 

பகலில் துயிலோம்; 

பயோதரமும் மூத்த ஏலஞ்சேர் குழலியரோடு இளவெயிலும் விரும்போம்;

 இரண்டு அடக்கோம்; 

ஒன்றை விடோம்; 

இடது கையிற்படுப்போம்; 

மூலஞ்சேர் கறிநுகரோம்; 

மூத்த தயிர் உண்போம்; 

முதல்நாளில் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்; 

ஞாலந்தான் வந்திடினும் பசி ஒழிய உண்ணோம்;

 நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும் மிடத்தே;


உண்பதிரு போதொழிய மூன்று பொழுதுண்ணோம்; 

உறங்குவது இரவொழிய பகலுறக்கம் கொள்ளோம்; 

பெண்ணுறவு திங்களொருக் காலன்றி மருவோம்;

 பெருந்தாக மெடுத்திடினும் பெயர்த்து நீர் அருந்தோம்;

 மண்பரவு கிழங்குகளில் கருணையன்றிப் புசியோம்;

 வாழையிளம் பிஞ்சொழிய காயருத்தல் செய்யோம்; 

நண்புபெற உண்ட பின்னர் குறுநடை பயில்வோம்;

 நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும் மிடத்தே;


ஆறுதிங்கட் கொருதடவை வமனமருந் தயில்வோம்; 

அடர்நான்கு மதிக்கொருகால் பேதியுரை நுகர்வோம்; 

கேறுமதி ஒன்றைக்கோர் தரநசியும் பெறுவோம்; 

திங்களரைக் கிரண்டுதரம் சவலிவி ருப்புறுவோம்; 

வீறுசதுர் நாட்கொருக்கால் நெய்முழுக்கைத் தவிர்ப்போம்;

விழிகளுக் கஞ்சனம் மூன்று நாட்கொருக்கா லிடுவோம்;

நாறுகாந்தம் புட்பமிவை நடுநிசியில் நுகரோம்; 

நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும் மிடத்தே;


பகத்தொழுக்கு மாதர் அசம்கரம் துடைப்பமிவை தூள்; 

படநிற்கோம்; 

தீபனமாந்தர் மரநிழலில் வசியோம்;

 சுகப்புணர்ச்சி அசனவச னத்தருணஞ் செய்யோம்;

 துஞ்சலுண விருமலஞ்செய் யோக மழுக்காடை; 

வகுப்பெருக்கிற் சிந்துகேசம் இவை மாலை விரும்போம்; 

வற்சலம்தெய் வம்பிதுர் சற்குருவை விடமாட்டோம்; 

நகச்சலமும் முடிச்சலமும் தெறிக்குமிட மசைகோம்;

 நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும் மிடத்தே.


இந்த பாடலின் பொருள்:

1. நாட்டு மாட்டின் பாலை தான் உண்ண வேண்டுமாம்.

2. எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது வெந்நீரில் தான் குளிக்க வேண்டும்.

3. தகாத உறவு கொள்ளக் கூடாது.

4. இளவெயில் உடலுக்கு நல்லது.

5. உடல் உபாதைகளை அடக்கி வைத்திருக்க கூடாது.

6. தூங்கும் பொழுது இடதுகை பக்கமாக ஒருக்களித்துதான் படுக்க வேண்டும்.

7. உணவில் புளித்த தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

8. கறி சமைத்தால் மறுநாள் வரை வைத்துக் கொள்ளக்கூடாது.

9. பசி எடுத்த பின்னரே உணவு அருந்த வேண்டும்.

10. ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவு அருந்தினால் போதும்.

11. பகல் தூக்கம் தவறானது. இரவில் நன்றாக உறங்க வேண்டும்.

12. மாதம் ஒருமுறை மனையாளோடு உறவு வைத்துக் கொள்ள வேண்டும்.

13. கிழங்கு வகைகளில் கருணை நல்லது.

14. சாப்பிடும் போது இடை இடையே நீர் அருந்தக்கூடாது.

15. முற்றிய வாழைக்காயை பயன்படுத்தக்கூடாது.பிஞ்சு வாழைக்காய் சிறந்தது.

16. சாப்பிட்ட பின் நடை பயிற்சி அவசியம்.

17. ஆறு மாதம் ஒருமுறை உடலை சுத்தம் செய்ய பேதிமாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

18. வாரம் ஒரு முறை ஆண்கள் சவரம் செய்துகொள்ளவேண்டும்.

19. இரவில் வாசமிக்க மலர்களைக் முகர்ந்து பார்க்கக்கூடாது.

20. கை நகம், தலை முடி உதறக் கூடாது. அதிலிருந்து வெளிவரும் நீர் அடுத்தவர் மீது படக்கூடாது.


இவற்றை பின்பற்றினால் எந்த நோய்களும் நெருங்காது.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்