குடும்பனின் கணிப்பில்/மதிப்பீட்டில்

 நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள் 



 ஏற்கெனவே பலமுறை சொல்லியதையே இப்போதும் சொல்லுகிறோம், 

காவல்துறை அத்துமீறல் விவகாரத்தில் அத்துமீறிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாலோ, புகார் கொடுத்த நபர்களை வசைபாடுவதாலோ இங்கே இன்னோரு கொலையை உங்களால் தடுக்கவே முடியாது, 


அப்படி நீங்கள் அதை தடுக்க விரும்பினால் இதுபோன்ற அத்துமீறல்கள், கொலைகள் எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது என்பதை உங்கள் தனிமனித விருப்பு வெறுப்பை விலக்கி வைத்துவிட்டு இந்த அமைப்பையும் அது இயங்கும் முறையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்....!


இங்கே ஊழல் செய்யும் அரசியல்வாதிகளோ அல்லது  குற்ற பின்னணி கொண்ட பெரும் பணக்காரர்களோ மட்டும் இந்த காவல்துறை அத்துமீறலில் இருந்து தப்பிப்பதில்லை, குற்றச் செயலில் ஈடுபடுவதை #வழக்கமாக கொண்ட தொழில் முறை கூலிப்படைகளும், ஆடு திருடர்களும், களவாணிகளும் கூட 

ஒருபோதும் இதுபோன்ற காவல்துறையின் அத்துமீறலையோ அல்லது வன்முறையையோ எதிர்கொள்வதில்லை என்பது தான் முகத்தில் அறையும் உண்மை, 

எதோ ஒரு நேர்வில் காவல்துறையை எதிர்கொள்ளும் ஒருமுறை கூட கைதோ, தண்டனையோ அனுபவிக்காத நபர்கள் இது போன்ற மரணங்களை எதிர்கொள்ளும்போது சிறைச்சாலையே எங்களுக்காக தான் கட்டி வைத்திருக்கிறார்கள் என்று உதார் விட்டபடி நாள்தோறும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மட்டும் எப்படி இதிலிருந்து தப்பிக்க முடிகிறது....???


நீங்கள் ஆயிரம் வாதங்கள் வைத்தாலும் இந்த அமைப்பு முறையும் அதை நிர்வகிக்கும் நபர்களும் ஏதோ வகையில் இந்த குற்றப் பின்னணி கொண்டவர்களை பாதுகாத்தாலேயொழிய இதுபோன்ற மேற்சொன்ன #முரண் நிகழ வாய்ப்பு இருக்கிறதா....???


இந்த அமைப்பு முறையால் ஏதோ வகையில் தப்புவிக்கப்பட மட்டுமல்ல, பாதுகாக்கவும் படுகிறார்கள் என்றால் இந்த அமைப்புக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் ????????????, 


இந்த அமைப்பு முறையால் பாதுகாக்கப்படும் அவர்களுக்கும் இந்த அமைப்பு முறையை நிர்வகிக்கும் கூட்டத்திற்கும் என்ன சம்பந்தம் ?, என்ன #உறவு முறை என்று என்றாவது சிந்தித்திருக்கிறீர்களா.....???!?


உங்களை காவு வாங்கும் ஒரு #ஆயுதம் இன்னொருவரை காப்பாற்றுகிறது என்றால் அது யாருக்கான ஆயுதம் ?,

 அதை உபயோகிப்பவர்கள் உங்களை ஏன் தாக்க வேண்டும்?, 

அவர்களை ஏன் காக்க வேண்டும்.....???


மேலே சொன்ன கேள்விகளுக்கு விடை தேடாமல் வெறுமனே காவலர்களை மட்டும் தண்டிப்பதாலோ அல்லது சாதி பார்த்து சாகடிக்கிறார்கள் என்று தலீத்திய ஒப்பாரியை வைப்பதாலோ இந்த விவகாரத்திற்கு தீர்வு கிடைக்க போவதில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.....!?!!


இந்த அமைப்பு முறை என்பது,  அதாவது காவல்துறை மற்றும் அதை இயக்கும் அமைச்சகம் இவை எல்லாம்  இந்த #நிலத்தை யாரோ ஒரு கூட்டம் அவர்களின் பாதுகாப்புடன் ஆள்வதற்காக அமைக்கப் பட்டிருக்கிறதே ஒழிய உங்கள் ஒவ்வொருவரையும் பாதுகாக்க அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள்....!!?!


இங்கே யாரை அடிக்க வேண்டும், அதையும் யாரை வைத்து அடிக்க வேண்டும், யாரை வளர்க்க வேண்டும், அதுவும் எவ்வளவு தூரம் வளர அனுமதிக்க வேண்டும் என்பன உட்பட எல்லாமே இதுபோன்ற அமைப்பு முறைகளால் முறைப்படுத்தபடுவதோடு அது உங்கள் நலனுக்காகத்தான் என்றும் உங்களுக்கு கற்பிக்கப் பட்டிருக்கிறது என்பது தான் உண்மை, 

இந்த சூழ்ச்சியை புரிந்துகொள்ளாமல் நீங்கள் எதை மாற்ற நினைத்தாலும் உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுமேயொழிய உலகப் போராளிகளே உங்களால் ஒரு _______ கூட செய்ய முடியாது, 

காலத்திற்கும் அவர்கள் தான் உங்களுக்கு #ஆண்டைகள், நீங்கள் தான் அவர்களின் நிரந்தர அடிமைகள்.....!

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்