குடும்பனின் வரலாற்று பார்வையில்

 சங்க நூல்களில் யாளி 

என்ற விலங்கு குறிப்புகள் இடம்பெறவில்லை.

தொல் காப்பியமும் யாளி பற்றிக் குறிப்பிடவில்லை.

 ஆளி எனில் சிங்கம் , சிங்கவிராசியைக் குறிக்கும் சொல் . பௌத்த/ ஜைன/ வைதீக சமயங்கள் தமிழ்நாட்டில் ஊடுருவிய பிறகு சமயப் பூசல்கள் மிகக் கடுமையாக எழுந்தன. 

குறிப்பாக களப்பிரர் காலத்தில் காலத்தில் இது தோற்றம் கண்டது. பக்தி காலமான பல்லவர்கள் காலத்தில் இது பெரிய போராக மாறியது.

 இவர்களின் அனைவரின் குறி மள்ளர்களின் அறிவியல் மதமான ஆசீவகத்தை அழிப்பதும் தமிழ்ர்களின் மெய்யியல் நூல்களைக் கைப்பற்றுவதுமே யாகும். 

அதனால் தமிழ் ஏடுகளை ஆற்று வெள்ளத்தில. எறிவதும் , தீயில் எரிப்பதும் , ஆசீவகர்களை கழுவில் ஏற்றி கொல்வதும், யானைக் காலால் இடறி தலையை எடுப்பதும் போன்ற மனிதர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஆசீவகர்களை, காபாலிகம், காளாமுகம், பாசுபதம், பைராகம், மாவிரதிகள் எனப் பிரிந்து தமிழர்களை வேட்டையாடினர்.

 இவர்கள் வடுக கன்னடர் என்பதை நீங்கள் மறக்கக் கூடாது.


 ஆசீவகர்களாகக் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் 100 விழுக்காடு மள்ளர்களே என்பது வரலாற்றுத் துயரம்.


 இதன் ஒரு பகுதியாக ஆசீவகச் செங்கல் தளிகளை சைவமும் வைணவமும் கைப்பற்றி அவற்றைப் பல்லவர்களின் உதவியோடு கற்றளிகளாக மாற்றியது. 


பின்பு சோழர்கள் இதைப் பெரிய அளவில் வளர்த்தனர்.


 தமிழ்நாட்டில் சிங்கம் கிடையாது. அதனால் கல் ஆசாரிகள் சிங்கத்தைப் பார்க்காததால் யாளி போன்று செதுக்கினர்.


 தமிழில் சிங்கம் என்ற சொல் இல்லை. சகரக்கிளவி மொழி முதலில் வராது என்பதால் அரி என்றனர். 


அரசின் இருக்கையை சங்க இலக்கியங்கள் அரியாசனம் என அழைக்கவே இல்லை. அரசவை அல்லது நாளிருக்கை என அழைத்தனர். 


நிற்க. ஆசீவகக் கோவில்களைக் கைப்பற்றியதை நினைவு கூறவே யானையை யாளி/ சிங்கம் தாக்குவதாக ஏறத்தாழ அனைத்துக் கோவில்களிலும் நீங்கள் பார்க்கலாம்.


 புகழ்பெற்ற ஶ்ரீரெங்கம் கோவில் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறந்த இடம். அதை ஆசீவகர்களிடம் இருந்து வைணவம் கைப்பற்றியது.


 திருமாலிருஞ்சோலை இவ்வாறே கைப்பற்றப் பட்டதாக பேரா. நெடுஞ்செழியன் ஆய்ந்து நிறுவியுள்ளார்.


 எனவே யாளி என்பது ஒரு விலங்கே இல்லை. 

அது பக்திக் காலத்தில் மள்ளர்களை அழித்த வேற்று மொழியாளரின் அடையாளச் சின்னம் என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.


 இந்திரன் என்றுமே மள்ளரின வழித்தோன்றல் தான் .


 அவன் படைத்த வானியல் நூலான மறையை ஆரியம் திருடி அதற்கு ரிக் வேதம் எனப்பெயரிட்டனர்.


 இந்திரன் படைத்த மெய்யியல் “ ஐந்திரம்” ஆகும்.


 அந்த இந்திரனை பௌத்தம் கைப்பற்றியவுடன் ஆரியர்கள் இந்திரனை இழிவு படுத்தும் புராணங்களைக் கட்டவிழ்த்து விட்டனர்.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்