குடும்பனின் வரலாற்றில்
'மீண்டெழும் பாண்டியர் வரலாறு'
"தென்புலத்தார் - குடும்பர்கள்"
[19/07, 07:20]
இடைக்கால சோழர்கள் காலத்தில் பாண்டியர்கள் சோழர்களுக்கு கப்பம் செலுத்தி சோழர்களின் மேலாதிக்கத்தின் கீழ் ஆட்சி செய்தனர் .
இந்த காலத்தில் சோழர்களின் பட்டம் தாங்கி கொங்கு பகுதிகளில் ஆட்சியாளர்களாக இருந்தவர்கள் குடும்பர்களே!
குடும்பர்களுக்கு பல்லவரையன் , முதலி இருங்கோவேள் போன்ற பட்டங்களும் உண்டு.
குலோத்துங்க சோழனின் மகனான விக்கிரம சோழன் காலத்தில் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தவர்கள் அனைவருமே தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள் பெயரில் குடும்பர் என்ற பெயரோடு ஆட்சி செய்ததை கல்வெட்டு செய்திகள் தெளிவாக உரைக்கிறது.
இதே காலகட்டத்தில் தெற்கே பாண்டிய நாட்டில் சோழர்களின் பட்டம் தாங்கி ஆட்சி செய்தவர்கள் துவாரபதி கண்டன் சுந்தன் கங்கைகொண்டான் மற்றும் சுந்தன் பள்ளனின் முன்னோர் ஆவார்கள்.
பாண்டியர்கள் சோழர்களை வீழ்த்தி ஆட்சியை கைக்கொண்டனர் இதன் தொடர்ச்சியாக மேற்கண்ட ஆட்சியாளர்களின் வழித்தோன்றல்களே விஜயநகர ஆட்சி பாண்டிய நாட்டில் ஏற்படும் வரை ஆட்சி செய்துள்ளனர் இவர்கள் அனைவரும் பாண்டிய வம்சாவளிகள் ஆவார்கள். இவர்களிடமிருந்தே கடைசியாக விஜயநகர ஆட்சியாளர்கள் தென்பாண்டி நாட்டை பெரும் எதிர்புக்கிடையே கைப்பற்றியுள்ளனர்.
மதுரை 14-ம் நுற்றாண்டின் முற்பகுதியில் டெல்லி சுல்தான்களின் ஆட்சியின் கீழ் வந்தது இந்த ஆட்சி ஏறத்தாழ 50 வருடங்கள் நீடித்தது 14-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விஜயநகர ஆட்சியின் கீழ் வந்தது இதனால் பாண்டியர்கள் தென் பாண்டிய நாட்டில் தங்களை பலப்படுத்திக்கொண்டு விஜயநகர ஆட்சியை எதிர்த்தனர் இவர்களிடம் ஒற்றுமையும் சரியான ஒருங்கிணைப்பும் இல்லாத காரணத்தால் ஒருவர் பின் ஒருவராக வீழ்ந்தனர் இதில் தென்காசி பாண்டியர்கள் மட்டுமே எஞ்சியவர்கள்.
குடும்பர்கள் தான் பாண்டியர்களின் வம்சாவளிகள் என்பதற்கு அரசகுடும்பன்பட்டி என்ற ஊர் பெயரே சான்று!
குடும்பர்களே ஆட்சியாளர்கள் என்பதை இந்த ஊர் பெயர் பறைசாற்றுகிறது.
14-ம் நூற்றாண்டில் மதுரை வீழ்ந்தாலும் பாண்டியர்களின் வம்சாவளிகளான குடும்பர்கள் தொடர்ந்து விஜயநகர ஆட்சியை எதிர்த்து போராடியுள்ளனர் இவற்றை வரலாற்று ஆய்வாளர்கள் முற்றிலும் மறைத்து விட்டனர்.
தமிழகம் முழுவதும் ஆட்சி செய்த நெடிய வரலாற்றையுடைய சமூகத்தின் பெயர் வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டனர் இது ஒரு வரலாற்று மோசடி .
தமிழகத்தின் உண்மையான வரலாற்றை மறைத்து வரலாற்று ஆய்வாளர்கள் தவறான வரலாற்றை புனைந்துள்ளனர் இதுவே இன்றைய வரலாறாக இருக்கிறது.
மீண்டும்,
மீண்டெழும் பாண்டியர்கள் வரலாறு!
[19/07, 08:16]
அருமையான வரலாற்றுச் சான்றுகள்
இதில் கல்வெட்டாய்வாளர் “ தென் குடும்பர்” என்ற சொல்லுக்குப் புதுக்கோட்டைப் பகுதியிலிருந்து இங்கு குடி வந்திருக்கலாம் என்ற பொருந்தாத விளக்கத்தை முன் வைக்கிறார். உண்மை அதுவல்ல.
“ தென் குடும்பர்” என்ற சொல்லுக்குப் பின்னால் ஒரு ஆழமான வரலாற்றுச் செய்தி புதைந்துள்ளது. பாண்டியனுக்குத் தென்னன், தென்னவன் என்ற பட்டங்கள் உண்டு.
“ பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரியொடும் கொடுங்கடல் கொள்ள” என்ற சிலம்பின் வரிகளில் தென் குடும்பர் என்ற சொல்லுக்கான விடை உள்ளது.
“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய குடி” என்ற புறப்பொருள் வெண்பா மாலையின் பொருளும் இதுதான். குமரி நாடு தென் குமரி நாடு என அழைக்கப்பட்டது. கடல் கோளால் உருவான ஆழிப் பேரலையில் தென்குமரி நாடு அழிந்து பட்டது. அப்போது அங்கு வாழ்ந்த மக்கள் குடும்பர்களே. பின்னர் நிலந்தருதிருவிற் பாண்டிய நெடுஞ்செழியன் இன்றுள்ள மதுரைப்பகுதியைக் கைப்பற்றிக் தன் வழித்தோன்றல்களும் உரிமை மக்களுமான குடும்பர்களை அங்கே குடியேற்றி அரசுரிமை செய்தான்.
அன்று முதல் குடும்பர்களைத் “ தென்குடும்பர்” என வரலாறை பதிந்து அழைக்கத் தொடங்கியது . பேச்சு வழக்கில் வடநாட்டான், காஞ்சிபுரத்தான் என்பது போல் தென்குமரியில் இருந்து வந்த குடும்பர்களை தென் குடும்பர் என அழைக்கப்பட்டு அதுவே காலப்போக்கில் குடும்பர்களை அழைக்கும் பொதுச் சொல்லாக மாற்றமடைந்தது. தென் குடும்பர் என்ற சொல்லின் உண்மையான பொருள் “ மூத்த பழைய குடி” என்பதே ஆகும்.
வள்ளுவர் கூறும் “ தென்புலத்தார்” குடும்பர்களின் மூதாதையர்களே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பாண்டிய நாட்டில் உள்ளவர் புலம் பெயர்ந்தவர்கள் என்பதை மறைமுகமாகக் குறிப்பிட இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில், புகார் நகர மக்களை ( சோழ தேச குடும்பர்கள்) , “பதிகெழு யறியா பழங்குடி” என அழைக்கிறார்.
இதன் பொருள் புகார் நகரில் நிரந்தரமாகக் குடியிருக்கும் குடும்பர்கள் என்பதும், பாண்டிய நாட்டுக் குடும்பர்களே கடல்கோளால் குடி பெயர்ந்தவர்கள் என்பதை இளங்கோவடிகள் சுட்டிக் காட்டுகிறார்.
“ மன்பதை காக்கும் “தென்புலம்” காவல் என்முதல் பிழைத்தது " எனப் பாண்டியன் பதறுகிறானே?
அதன் பொருளும்
"குடும்பர்களே" தமிழ் நாட்டின் பழமையான ஒரே ஒரு குடி என்பதும் மற்றவர்கள் சங்க காலம் சங்கம் மருவிய காலங்களில் வந்து குடியேறியவர்கள் என்பதும் , ஆதிச்சநல்லூர், சிவகளை போன்ற நாடுகளில் இருந்தவர்கள் குடும்பர்கள் என்பதும் தமிழகத்தின் மூவேந்த மரபினர் என்பதும் உறுதியாகிறது.
குடும்பர்களின் பட்டங்கள் கிபி 16 ஆம் நூற்றாண்டில் திருடப்பட்டு குடும்பர்கள் பள்ளராக்கப் பட்டு அரசுரிமையை முற்றிலும் இழந்து விட்டனர்.
Comments
Post a Comment