குடும்பனின் பார்வையில்

 தியாகி இமானுவேல் சேகரனார் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைவோம்..

✒️பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் ஒரு ஜனநாயக அமைப்பாக உருவெடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு

அதன் புதிய தலைவராக இன்னும் திருமணம் ஆகாத ஓர் இளைஞர் ஐயா இமானுவேல் சேகரனாரின் பேரன் திரு. Er. சக்கர வர்த்தி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது நமக்கெல்லாம் பெருமிதம் தான்.

எந்த அரசியல் கட்சியின் சார்புமின்றி ஆளும் மத்திய மாநில அரசாங்கங்களை அனுசரித்து பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை முன்னெடுக்க வேண்டும்..

தமிழகம் முழுக்க தேவேந்திரர்கள் வாழ்கிற பகுதிகளை ஒன்றிணைத்து சமூக ஒற்றுமையை ஏற்படுத்தி அரசியலாக ஒருங்கிணைப்பது தான் நல்லது.

தமிழக கிராமங்கள் தோறும் தொடர்பாளர்களை உருவாக்கி அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு சமூக அமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் தான் தேவேந்திரர்களை ஓரணியில் ஒன்று சேர்க்க முடியும் எனக் நம்புகிறேன்..

இதற்காக மாவட்டம் தோறும் தன்னார்வ குழுக்களை ஏற்படுத்துங்கள்.

தன்னார்வலர்கள் அரசியல் கட்சிகளைச் சாராத இளைஞர்களாக இருப்பது நல்லது..

தேவேந்திரர்களில் இந்து கிறிஸ்தவர் என்கிற மத பாகுபாட்டை ஒருபோதும் அனுமதிக்காதீர்.

முடிந்தவரை தேவேந்திரர்களுக்குள் சமயங்களைக் கடந்து திருமண உறவு முறைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இன்றைக்குப் பல இளைஞர்களும் இளம் பெண்களும் "அவர்களும் எஸ்ஸி தானே " என்று தத்துவம் பேசி சிக்கிச் சீரழிவதை இது ஓரளவுக்குத் தடுக்கும் என்பது என் அபிப்ராயம்.

தலைவர் சக்கரவர்த்தி அவர்கள் முன்பாக ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும் சவால்களும் நிற்கின்றன.

இனி உங்களுக்கு உண்ணவும் உறங்கவும் கூட நேரமிருக்காது.

சமூக விடுதலைக்காக, கல்வி பொருளாதார மேம்பாட்டிற்காக ஒரு தவ வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் பொறுப்பாளர்கள் அனைவரும் இருக்கிறீர்கள்..

பொறுப்புக்கு வருகிற ஒவ்வொருவருக்கும் பொது வாழ்வில்

சுய கட்டுப்பாடு மிக முக்கியம்..

நம்பும்படியான விமர்சனங்களுக்கு ஆட்பட்டு விடாதீர்.

தமிழகம் முழுக்க தேவேந்திரர் உறவுமுறைச் சங்கங்கள் இருக்கின்றன.

அவர்களையெல்லாம் பரமக்குடிக்கு அழைத்தோ அல்லது அவர்கள் இருப்பிடங்களுக்குச் சென்றோ சந்தியுங்கள், கலந்துரையாடுங்கள்

இதன் மூலம் இளந்தலைமுறையினரிடம் ஒரு விழிப்புணர்வு ஏற்படும்..

நாம் ஒரு பண்பாட்டுச் சமூகம் என்கிற கருத்தியல் இளைய சமூகத்திடம் பற்றிப் படற வேண்டும்..

அதை பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத் தேர்தல் அதை நமக்குச் சொல்லித் தந்துள்ளது..

முடிந்தவரை யாரும் எதிர்மறைக் கருத்துக்களைப் பதிவிடாதீர்.

 முரண்பட்டால் நேரடியாகப் பேசி சமாதானம் அடையுங்கள்.

தேவேந்திரனாய்ப் பிறந்ததில் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்வோம்.

தியாகி இமானுவேல் சேகரனார் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைவோம்..

பண்பாட்டைப் பாதுகாப்போம்.

அதிகாரத்தை வென்றெடுப்போம்..

வாழ்க தேவேந்திரனியம்.

©️✒️ சாத்தியடி மிக்கேல் ஜெயராஜ் குடும்பன் @ யாழி

22.07.2025.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்