குடுமபனின் பார்வையில்

 


இதுல ஏதோ பட்டியலினம்னு போட்ருக்கானுக, ஆவணமும் ஆள்வோரும் என்ன வேணா சொல்லிட்டு போகட்டும், 

அவனவன் #அடையாளம் என்ன என்பதை 

பண்டைய வரலாறு சொல்லும், நிற்க. 


இந்த பையன் நமக்கு கொஞ்சம் பக்கத்து ஊர் தான், அந்த ஊர் பள்ளர்கள் மட்டுமே வாழும் தனிக் கிராமம், பள்ளர்களின் சேவை சுமூகமாக உள்ளவர்கள் கொஞ்சபேர் உண்டு, நல்ல ஆளுமையான ஊர், ஊரில் பெரும்பாலான இளைஞர்கள் நன்றாக படித்தவர்கள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊர் அது. ஊரின் மேல்புறம் பெரிய குளம், அந்த குளத்தின் பேரே பெருங்குளம் தான், வருசம் முழுவதும் தண்ணீர் வசதி இருப்பதால் விவசாயம் செழிக்கும் ஊர், 90% #வாழை தான் பிரதான பயிர்....!


நம்ம #புரச்சியாளர்கள் சொல்வது போல் அந்த ஊர் மக்கள் ஒன்றும் சாதி ஒழிப்பு, சமூக கலப்பு என்று புரச்சி செய்கிறவர்கள் இல்லை, இன்னும் சொல்லப்போனால் தெரிந்தோ தெரியாமலோ அதெல்லாம் ஒரு புரச்சியே இல்லை என்கிற அளவுக்கு புரிதல் உள்ளவர்கள் தான் அந்த ஊர் பள்ளர்கள், அப்புறம் அந்த ஆதிக்கம் _____க்கம்னுலாம் எந்த சாதி காரணும் அந்த ஊரிடம் நெருங்க முடியாத ஆதிக்கம் மிக்க ஊர் அது....!!!


ஒரு பிரச்சினை வருகிறது என்றால் முதலில் அதை ஏதாவது ஒரு டெம்லேட்டில் பொறுத்த துடிப்பதை நிறுத்துங்களை, அப்போது தான் பிரச்சினையின் உண்மை தன்மை புரியும், உண்மை புரிந்தால் தான் தேவைப்படும் போது அதே பிரச்சினையை விவகாரம் ஆக்கவோ அல்லது சமாதானம் ஆக்கவோ முடியும், தெரியாவிட்டாம் நம்ம திராவிடார்களிடம் கற்றுக் கொள்ளுங்கள் மக்களே,

 அவர்கள் வீட்டு வாரிசுகளை அமைச்சராக்கும் போது, கட்சி தலைவராக்கும்போது செய்யாத புரச்சியை தமிழ் தலைவர்கள் யாராவது செய்யும்போது ஆரம்பித்து வைப்பார்கள், ஜனநாயக பேசுவார்கள், அதாவது விவகாரத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் என்று சொல்கிறேன், இல்லை முடியாது புரச்சி தான் செய்வேன் என்று ஏய் சாதிய ஆதிக்க வாதமேன்னு கிரவுண்ட் #ரியாலிட்டி தெரியாமல் கொந்தலித்தீர்கள் என்றால் நீங்கள் மட்டும் தலீத் ஆகாமல் ஆளுமையாக, தகுதியோடு உள்ள மக்களையும் தலீத் ஆக்கி ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பீர்கள்....!


சரி இந்த விவகாரத்திற்கு வருவோம், இதில் சொல்லப்படும் பையன் அந்த பெண்ணை காதலித்தானா இல்லையா என்பது கூட தெரியவில்லை என்கிறார்கள், இயல்பாக உருவான நட்போ காதலோ கூட இருக்கலாம், ஆனால் அதற்காக சாதியை காரணமாக வைத்து தான் கொலை நடந்திருக்கிறது என்றால் அதற்கு பின்பான உளவியலை நீங்கள் புரிந்துகொள்ள வில்லை என்றுதான் சொல்வேன், கொலை செய்யப்பட்ட பையனை விட கொலை செய்தவன் சாதி ஒன்றும் #ஒசத்தி அல்ல, வேளாண் சமுகத்தை விட ஒரு ஒசத்தியான சமூகம் உலகில் உண்டா என்ன.....??

விவகாரம் வேறு, 

இங்கே கடந்த எழுபது ஆண்டுகளாக ஒரு #உளவியல் கட்டமைக்கப் பட்டிருக்கிறது, அதை வைத்து ஒரு அரசியல் வளர்த்தெடுக்கப் பட்டிருக்கிறது, அந்த அரசியலில் செல்வாக்கான இடத்தில் இருப்பவர்கள் தனக்கிருக்கும் அதிகார பலம், நெட் ஒர்க், சமூக தூண்டுதல் காரணமாக இதுபோன்ற கொலை பாதகங்களில் ஈடுபடுகிறார்கள்,

 காத்திருந்தது போல் கம்யூனிஸ் கும்பலில் இருந்து காலாவதியான திராவிட கும்பல் வரை அதை ஆதிக்கம் என்று புரமோட் செய்கிறார்கள், பிறகு என்ன நடக்கும்.....????


மறுபடியும் சொல்கிறேன், 

இந்த சாதி ஒழிப்பு ______ ஒழிப்பு எல்லாம் இந்த மண்ணை ஒரு கூட்டம் நிரந்தரமாக ஆள போடப்பட்ட #ஸ்கெட்ச், 

அதை ஒரு சில சாதிகளுக்கு சாதகமாகவும் ஒரு சில சாதிகளுக்கு எதிராகவும் கட்டமைத்ததுவும் அந்த ஸ்கெட்சின் ஒரு பகுதி தான், திட்டமிட்டு அவர்களுக்கு பாதகமான வரலாற்றை கொண்டிறாத சாதிகளுக்கு ஆதிக்க உளவியலையும், அவர்களுக்கு பாதகமான வரலாற்றையும் மரபணுவையும் கொண்டவர்களுக்கு எதிரான ஒரு உளவியலையும் அதாவது தாழ்வுமனப்பாண்மையை வளர்த்தெடுக்கும் உளவியலையும் கட்டமைத்திருக்கிறார்கள், இந்த உளவியலை உடைக்காத வரை இங்கே இதுபோன்ற இழி செயல்களை தடுக்க முடியாது, தவிர்க்கவும் முடியாது....!!!


மேலே சொன்ன அரசியலை, உளவியல் செட்டப்பை, அதற்கு பின்னணியாக இருக்கும் காரணங்களை உணராமல், புரிந்துகொள்ளாமல் #ஒப்பாரி தான் வைப்பேன் என்றால் 

உங்களுக்கு ஒன்று தான் சொல்வேன்,

உங்கள் உளவியல் பிரச்சினைக்கு பிறரை #கிறுக்கு ஆக்காதீர்கள்.....☯️


(பையனை இழந்த பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்)

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்