குடும்பனின் வரலாற்றில்

 தென்காசி பாண்டியர் ஆட்சியும் வீழ்ச்சியும் சுருக்க வரலாறு


தென்காசி பாண்டியர் ஆட்சி 


காலம் :கிபி 1380 முதல் கிபி 1650 வரை

தலைநகர்:தென்காசி

ஆட்சி பரப்பு:

வடக்கு ஆன்மர்நாடு (சீவில்லிபுத்தூர் தெற்கு) தெற்கு களக்காடு வடக்கு,கிழக்கு (திருநல்வேலி மேற்கு),மேற்கு மேற்குதொடர்ச்சி மலை கிழக்கு 


ஆட்சி தொடக்கத்தில் இவர்களை சுற்றிய அரசியல் சூழல்:


வடக்கே மதுரை சுல்தான் ஆட்சி முடிவுக்கு வந்து மதுரை கம்பண உடையார் நேரடி ஆட்சியும் 

தெற்கே வேணாடு அரசும்,கிழக்கு கடற்கரை பகுதி கிபி 1500 முதல் டச்சு, போர்ச்சுகீசியர் கட்டுபாட்டிலும் இருந்தது 


பராக்கிரமன் தொடங்கி வரதுங்கன் வரை தென்காசி பாண்டியர் தன்னாட்சியாளர்களாக இருந்தனர்.நாணயம்,ஆட்சிமொழி,நிர்வாகம் என அனைத்தும் மதுரை பாண்டியர் வழியை பின்பற்றினர்.


வரதுங்கன் காலத்தில் பாண்டியர் தென்காசியும் இழந்து சங்கரன்கோயில் என்ற குறுகிய பகுதிக்குள் அடங்கி விட்டனர்.


மதுரை நாயக்கர் அரசு உருவான காலம் கிபி 1529 தென்காசி பாண்டியர் ஆட்சி தொடங்கி ஏறத்தாள 150 வருடங்களுக்கு பிறகே மதுரை நாயக்க மரபு உருவாக்குகிறது 


அதிலும் குறிப்பாக திருமலைநாயக்கர் (1630 -1659 ) ஆட்சி பின் மதுரை நாயக்கர் விசயநகர் ஆட்சி மேலாண்மை தள்ளிவிட்டு தன்னாட்சி பெற்றனர்.அதற்காக பிஜப்பூர் சுல்தானுக்கும் திருமலை நாயக்கருக்கும் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது.


இக்காலத்தில் தென்பாண்டியில் ஏற்பட்ட போருடன் பாண்டியர் ஆட்சி முடிவுக்குள்ளானது.இக்காலமுதல் திருநெல்வேலி திருமலைநாயக்கர் ஆட்சியின் கீழ் வந்தது குறிப்பிடத்தக்கது.


இப்போரில் ஆன்மர் நாட்டிற்குள்  பூசபாடி இருந்து  தெலுங்கு மக்கள் நிலைபடையாக குடியர்தப்பட்டனர்(முதல் செட்டில் மெண்ட்)

இக்காலத்தில் நிகழ்ந்த போருக்கும் ஆன்மர் நாட்டு வெண்கொற்றைகுடை விழாவிற்கும் நேரடி தொடர்பும் உள்ளது.


பின்னர் ஒருங்கினைந்த திருநெல்வேலிமண்டலம்(தென்காசி,தூத்துக்குடி,கன்னியாகுமரி& திருவாங்கூர் உள்பட) திருமலைநாயக்கர் பிரதிநிதியான வடமலையப்பபிள்ளை நிர்வாகிக்கப் பட்டது 


வடமலை பிள்ளையால் தென்காசி பாண்டியர் ஆட்சி பகுதிகளுக்குள் பாளைபட்டு  புகுத்தப்பட்டது.(72 பாளைபட்டு ஒரே காலத்தில் உருவானது அல்ல.ஒவ்ஒரு காலகட்டத்திலும் இது உருவாக்கப்பட்டது. பாளை பட்டு 72 என்பது விசுவநாதன் காலத்தில் பண்டய ஆட்சியர்கள் மீதான பயத்தின் காரணமாக 72 கொத்தளம் கட்டப்பட்டது.இதனை காவல் காப்பதற்கு 72 குழுக்கள் அமைக்கப்பட்டன.இவர்களுக்கு சம்பளம் திசைகாவல் வழங்கப்பட்டு அவர்களின் நடத்தை விசுவாசத்திற்கு ஏற்ப பாளைபட்டு பின்பு வழங்கப்பட்டது) வடமலை பிள்ளையால் உருவாக்கப்பட்ட திருநெல்வேலி பாளைபட்டுகள்  வடமலை வம்சாவளி கண்டால்  சாஷ்டாங்கமாக காலில் விழுந்து வணங்கும் மரபும் ஏற்பட்டது.


அதற்கு சான்றாக வடகரை பாளையக்காரன் முதல் கல்வெட்டு கிபி 1660 தொடங்கியது.அதற்கு முன்பு அவர்கள் அந்த பகுதியை சார்ந்தவர்கள் அல்ல.இராமநாதபுரத்தில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள்.(அதற்கு முன்பு அங்கு சிற்றறசாகவோ/ஆட்சியாளராகவோ இருந்தால் நேரடி சான்று காட்டலாம்.)


திருமலைநாயக்கர் காலத்தில் தென்காசி பாண்டியர்  ஆட்சிபகுதிகள்  முழுமையாக திருமலை பிரதானி வடமலை பிள்ளை கட்டுபாட்டில் வந்தது.


கிபி 1650 இக்காலகட்டத்தில் பள்ளர்-வாணாதிராயர்  மரபு இடையே தொடர்ந்த முரன்பாட்டின்  வெளிப்பாடாக,அவர்களது காவல்குடியான பறையரை பள்ளருக்கு எதிராக திருப்பினர்.


(இதற்கு முன்பு கிபி 1378 களில் கம்பணன் காலத்தில் வாணாதிராயன்-பள்ளர் இடையே நடந்த போரில்,வாணாதிராயரும் அவர்களது காவல்குடியான பறையரும் இனைத்து பள்ளரை தாக்கினர்.இதற்காக 

#பள்ளர்களின்_தலைவனான_பாண்டியன் இந்த வாணாதிராயனை கொன்று பழிதீர்க்கிறான் )


கிபி 17 களின் தொடக்கம் தென்காசி பாண்டியர்ஆட்சி முடிவுக்கு  பிறகு ஒருங்கினைந்த திருநெல்வேலியானது வடமலை தொடங்கி ஆறைஅழகப்ப முதலி வரை மதுரை நாயக்கர் ஆட்சியின் பிரதியாக நிர்வாகம் செய்துவந்தனர்.


கிபி 17 நடுப்பகுதி பின் ஆறைஅழகப்ப முதலி காலத்தில் மிக முக்கிய வரலாற்று விசயங்கள் நடந்தேறின.

1.ஆறைஅழகப்ப முதலி கொலை

2.மதுரை நாயக்கர் ஆட்சி முடிவு 

3.நாயக்க கடைசி ஆட்சியாளர் மீனாட்சி -பங்காரு நடந்த பூசல் முதலி தலையீடு

4.பள்ளர் மீது பள்ளேசல் (கிபி 14 நவநீதபாட்டியல் படி உழவர்கள் பெருமைப்பட உழத்திபாடல் அழிக்கப்பட்டு அவர்களை இழிவுசெய்பவர் புதிய இலக்கிய வகை ஆறைஅழகப்ப உறவினர்களால் எழுதப்பட்டது.)


பாண்டியர் ஆட்சி இழக்கப்பட்டு  50 ஆண்டுகளுக்குள் மதுரை ஆட்சி கர்நாடக நவாப் வசமானது.அப்போதும் திருநெல்வேலி ஆறைஅழகப்ப மருமகனால் நவாப் பிரதிநிதியாக செயல்படதுவங்கினான்.


இதற்கு பின்னர் நவாப் சார்பாக கும்பணி ஆட்சி.அதற்கு பின் ஆங்கிலேயர் நேரடி ஆட்சி இக்காலகட்டத்தில் ஜமீன் உருவாக்கம்.


பாண்டியர் வீழ்ச்சிகான அடிப்படைகள்:


பாண்டியர் ஆட்சி இழப்பு பின்னர் தொடர்ச்சியான ஆட்சிமாற்றம்.புதிய நிர்வாகமுறை& கிபி 17 ஊர் அளவிலான ஆட்சி,நிலை படை இல்லாதது,செல்வம் (பொருள்கள்) குறைவு 

வரிகட்டாததால் எந்த நிவந்தம்/சேவை இறைபணியயோ,படைதிரட்டபொருள்செல்வமோஇல்லாதது, மக்கள் பிரச்சனை  சரிசெய்ய முடியாததும் புதிய ஆட்சிமுறையாலுமே அவர்களால் தங்களை மீண்டும் கட்டமைக்க இயலவில்லை.


குறிப்பு:

வரதுங்கனுக்கு பிறகு  பாண்டிய புனைபெயரில் (தீட்சிதர்,சோமட்சியார்பட்டங்களுடன்.)ஆட்சி செய்தது வடமலையின் வாரிசுகளே


பாண்டிய குலோதயம் கூறும் இறுதி பாண்டியன் கொல்லங்கொண்டான் என்பவரது மரபு வழிவந்தவனே நல்லமாடன்.


#துள்ளும்_கயல்


வீரநாட்டார் பாண்டியர் குலம்

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்