குடும்பனை சுற்றிய நிகழ்வில்

 நத்தம் கணவாய் - வெள்ளலூர் நரவேட்டை

போர்ச்சுகீசியர்களின் உதவியுடன் கான்சாகிப்பை கிபி 1764 இல் வீழ்த்திய ஆற்காடு நவாப் தமிழகம் மதுரையைத் தன்னரசின் கீழ் கொண்டு வருகிறான்.

 அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெரும்பாலான தமிழகம் நவாபின் கட்டுப்பாட்டில் வந்து விடுகிறது. 

இதில் இந்த மேலூர் கள்ளர்கள் மட்டும் அரசுக்கு வரிக் கொடுக்க மாட்டோம் என நவாப் கட்டளைக்கு கட்டுப் பட மறுக்கின்றனர்.

 நவாப் சார்பாக பல ஆங்கிலேயே அதிகாரிகள் முயன்றும் வெள்ளலூர் நாட்டுக் கள்வர்கள் அடங்க மறுக்கிறார்கள். 

இவர்களுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. திருமலை நாயக்கன் காலத்தில் இருந்தே யாருக்கும் அடங்காது களவை மட்டுமே தம் தொழிலாகக் கொண்டு அரசு அலுவலர்கள் யாரையும் அப்பகுதிகளுக்குள் நுழையவிடாது அடாவடி செய்தனர். 

மற்றப்படி இப்பகுதியை இவர்கள் ஆட்சி எல்லாம் ஒரு போதும் செய்ததில்லை.

 திருமலை மன்னனும் இவர்களை அவர்கள் போக்கில் விட்டு விட்டான். இந்த அடாவடியை நவாப்பிடமும் காட்ட முயல, நவாப் தந்திரமாக வரிவசூலை வெள்ளையரிடம் வாங்கிய கடனுக்குப்பதிலாக வரியைத் தண்டிக் கொள்ள அனுமதித்தான். 

சிவகங்கை, மல்லாங்கோட்டை, சேதுபதிகள் கட்டுப்பட்டு வெள்ளையர் கேட்ட வரியைக் கொடுத்தாலும் இந்த வெள்ளலூர் கள்ளர்கள் வழக்கம் போல் தங்கள் மேதாவித் தனத்தை வெள்ளையரிடமும் காட்டினர். 

இதனால் ஆத்திரம் அடைந்த கும்பினிகள் கேப்டன் ரும்லே என்பவன் தலைமையில் கள்ளர்களை வசப்படுத்தி வரி வசூலிக்க ஒரு படையை அனுப்பினர். 

இந்த மேலூர் கள்ளர்கள் மீது கும்பினிகளுக்கு ஒரு ஆறாத சினம் இருந்தது. அதுதான் நத்தம் கணவாய் தாக்குதல். 

இதை மனதில் கொண்டே கேப்டன் ரும்லே தயாராகப் படைகளை எச்சரிக்கை செய்து மேலூரில் தங்கி வெள்ளலூர் ஊர்த்தலைவனுக்கு தகவல் அனுப்பினான். வழக்கம் போலவே அதை அலட்சியம் செய்து வெள்ளையர்களையும் அடித்து விரட்டினர். 

இதனால் ஆத்திரமடைந்த ரும்லே தனது படையை வெள்ளலூரை நோக்கி நகர்த்த வெள்ளலூரில் ஈசநாடு, மேலூர் நாடு என ஒன்பது நாட்டுக் கள்ளர்களும் திரண்டனர். ரும்லே திட்டுமிட்டே அவர்களை ஒரு முனையில் குவிய அனுமதித்து காத்து இருந்தான்.  

வழக்கம்போல் கள்ளர்கள் 5000 பேர் திரண்டு தாங்கள் எண்ணிக்கையில் அதிகம் என்ற இறுமாப்பில் கும்பினிப் படைகளை கத்தி வளரி கற்களைக் கொண்டும் தாக்கத் தொடங்கினர்.

 அவர்கள் ஒரு பக்கமாக்க் குவிந்து விட்டனர் என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட ரும்லே பதில் தாக்கதலை தொடுத்தான். 

துவக்குகள் ( gun) முன்பு கற்கள் எடுபடவில்லை . 

“வெள்ளலூர் நரவேட்டை “ என்று வரலாறு பதிவு செய்த அந்த சம்பவத்தில் ரும்லே கோரத் தாண்டவமாடினான்.

 கள்ளர்கள் பிணங்கள் மலையெனக் குவிக்கப்பட்டன. சிறுவர் பெண்கள் என ரும்லே யாரையும் விட்டு வைக்கவில்லை. 

ரும்லேயின் கோரத் தாண்டவத்தைக் கண்ட கள்ளர்கள் தங்கள் வாழ்நாளில் அதுவரை கண்டிராத பயத்தை உணர்ந்தனர். ரும்லே முன் மண்டியிட்டனர். ரும்லே மதுரை திரும்பினான். நீங்கள் என்ன வரி விதித்தாலும் கட்டுப்படுகிறோம் என கள்ளர்கள் காலில் விழுந்தனர்.  

இதன்பிறகு வரி வசூலிக்க நவாப் போகும் போது மறுபடி நவாப் ஆட்களைக் கொன்று ரும்லே படுகொலைக்கு வஞ்சம் தீர்த்தனர். இதனால் ஆத்திரமடைந்த ரும்லே மறுபடி வெள்ளலூர் நாட்டுக்குப் படைகளை அவனே நடத்திச் சென்று கள்ளர்களை வேட்டையாடினான். 

இரு போரிலும் 5000 க்கும் மேற்பட்ட கள்ளர்கள் கொல்லப்பட்டனர். அதோடு அரசை எதிர்க்கும் அவர்கள் அறியாமை என்ற திமிர்த்தனம் ஒடுங்கியது.

 மற்றப்படி எந்த நாட்டையும் கள்ளர்கள் ஆளவில்லை. 

ஊர் கட்டுப்பாட்டை அம்பலம் என்பவன் தலைமையில் நடத்தி வந்ததையே ஆட்சி என சொல்லித் திரிகின்றனர். 

சுதந்திரப் போராட்டமும் நடத்தவில்லை. இவர்களாக வரலாறைத் திரித்தும் புரட்டியும் பேசி வருகின்றனர். அவர்கள் கூற்றுல் உண்மை துளியும் இல்லை.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்