குடும்பனின் வழிகாட்டுதலில்
அப்பா எனக்கு எப்படி வருண் பாண்டியன்னு பேர் வச்சே...?
அதுவா தங்கோ, நாம தாமிரபரணி நதி கரையில் இருக்கோமா, அந்த நதியை இலக்கியத்தில் தாமிர வருணின்னு தான் சொல்லுவாங்க, அப்பாக்கு அந்த நதி ரொம்ப பிடிக்கும்ங்கிறதால அப்பாக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச செல்லக்குட்டி உனக்கு வருண்னு பேர் வச்சிட்டேன்...?
அப்பா நீயா எனக்கு பேர் வச்சே...?
ஆமா தங்கோ....!
அப்போ பாண்டியன்....?
அது நம்ம பாட்டன் வச்சது தங்கோ, அது தானா நமக்கு வந்திரும்....!
அப்பா பாண்டியன்னா என்னா....??
பாண்டியன்னா ராஜான்னு அர்த்தம் தங்கோ, நாம்ம தாத்தா தான் முதன்முதலில் நதியோரம் குடியேறி, வேளாண்மை செஞ்சி, அதிகமா விளைவிச்சி, சேமிப்பை வைத்து உபரியை பாதுகாக்க மாட மாளிகைகள் கட்டி, அதை காவல் காக்க குடும்ப பாரம்பரியத்தை உருவாக்கி அந்த குடும்பங்களை நிர்வாகம் பண்ணவும் நாடு நகரங்களை மேலாண்மை செய்யவும் ஊர் #குடும்பு முறையையும், நாட்டு குடும்பு முறையையும் கட்டமைத்து எல்லாத்தையும் அதிகாரம் செய்யுற #குடுமி யா இருந்திருக்கார் தங்கோ, அதனால அவரு தான் முதல் #ராஜா, அவரு தான் முதல் ராஜாங்கத்தை உருவாக்கினவரு, அதனால அவரோட அடையாளம் #பாண்டியன் ஆச்சு, நீ அவரோட வம்சம்ங்கிறதால பாண்டியன் ங்கிறது உனக்கு தானாவே வந்திரும்....?
ஹோ... அப்பா, நான் பெரியவனா ஆனா எல்லோரும் எங்கிட்டேயே ரிப்போர்ட் பண்ணுவா....??
ஆங்.... ஆமா, ஆனால் அதுக்கு ஒரு கண்டிசன் இருக்கு, நீ உன்னை தகுதியோடு வச்சிகிட்டா எல்லோரும் உன்கிட்டே ரிப்போர்ட் பண்ண தயாரா இருப்பா, இல்லேன்னா போட்டிக்கு வருவா...?
ஹோ... அப்பியா, அப்பா தாத்தா எதுக்கு பேம்லி செஞ்சா, எல்லோரையும் காப்பாத்துறதுக்கா...?
ஆமா தங்கோ...??
யாருகிட்டே இருந்து...? யார் தாத்தாகிட்டே சண்டைக்கு வந்தா...??
ம்... அதுவா தங்கோ... அது நம்ம தாத்தா வேளாண்மை செஞ்சி, விளைச்சலை #அறுவடை செஞ்சு பத்திரமா வச்சிருப்பாரா, அப்போ உழைக்க தயாரா இல்லாத, அடுத்தவங்க உழைப்புக்கும் பொருளுக்கும் ஆசை படுற கீழான ஆட்கள் இருக்காங்கல்ல அவங்க எல்லோரும் கூட்டம் சேர்ந்து ஆயுதங்களோட வந்து களவாண்டு போக ட்ரை பண்ணுவா, அதனால அவர்கள்கிட்டேருந்து பத்திரமா இருக்கிறதுக்காக குடும்பம், அதில் அதிகமா பிள்ளைகள், அவர்களை வைத்து சேமிப்பையும் விளைச்சலையும் காப்பாற்றுறதுன்னு ஒரு சிஸ்டத்தை உருவாக்கினார், அதனால தான் மற்ற மக்கள் கொஞ்சமாவது நிம்மதியா இருக்க முடிஞ்சது, இல்லேன்னா களவாணி கூட்டம் வந்து இரவோட இரவா மொத்தத்தையும் திருடி தூக்கிட்டு ஓடிரும்....!
அப்பா அவங்க ஏன் திருடுறா...??
அதுவா தங்கோ, அது அவங்க வேலை செய்ய விரும்பாமல் இருக்கலாம், கொஞ்சம் மெனக்கிட்டால் அசந்த நேரம் பார்த்து அடுத்தவன் பொருளை ஈஸியா ஆட்டைய போட்றலாம்னு நெனச்ச குறுக்கு புத்தியா இருக்களாம், மேன்மையான எந்த ஒழுக்கமும் இல்லாத கீழான மனிதர்களா இருக்கலாம், ஒழுங்குக்கு கட்டுபடாத காட்டுமிராண்டி தனம் அவர்களுக்கு பிடித்து போயிருக்கலாம், ஊர் ஒழுங்குக்கு கட்டு படாததால தண்டிக்கப்பட்டு துரத்தி விடப் பட்டவர்களாக இருக்கலாம், சாப்பாட்டுக்கு வழியில்லாமல், இல்லேன்னா ஏதாவது மன நோயா கூட இருக்கலாம் தங்கோ, அப்போ நாம அவங்ககிட்டே நியாய தர்மம்னு எதையும் எதிர்பார்க்க முடியாதுல்ல, அதான் நமக்கான ஊர் நாடு கட்டமைப்பை நாமே உருவாக்கி அதை நிர்வாகம் பண்ணுற முறையையும் உருவாக்கிகிட்டோம்....!
ஹோ.... அப்பா அப்போ எனக்கு சாமி பேர் வைக்கலயா....??
யார் சொன்னது, நாம என்னதான் செஞ்சாலும் என்ன பேர் வச்சாலும் அதுக்கு நம்மை உந்துவது சாமி தான் தங்கோ, அப்பா உனக்கு வருண் பாண்டியன்னு பேர் வச்சேன், ஆனால் அது சாமி ஆசிர்வதிச்சதால தான் அப்படி பேர் வைக்கனும்னு அப்பாவுக்கு தோணியிருக்கும்...!
அப்பா எனக்கு புரியல....??
நீ பெரியவனா ஆனா இதெல்லாம் புரியும் தங்கோ....??
அப்பா இப்போ புரியும், நீ அப்படி மறுபடியும் சொல்லு....??
ம்... அது வந்து தங்கோ, நீ மழை வேணும்னு நெனச்சா சாமியா இருக்கிற நம்ம தாத்தா மழையை அனுப்பி விட்ருவார்னு சொல்லியிருக்கேனா அப்பா....??
ஆமா....!
நீ அப்படி நெனச்சி பார்த்து மழை வந்திருக்கா....???
ஆமா, அது குட்டியா இருக்கும் போது....??
அதான் சாமியோட ஆசீர்வாதம், இப்போதைக்கு இது போதும்....!!
Comments
Post a Comment