குடும்பனின் பார்வையில்

 வரலாற்று துரோகத்தையும் அரசியல் துரோகத்தையும் வரிவரியாக அடிபிறழாமல் படிப்போம்... 

திராவிடத் தீங்குவாத திமுகவையும் விசிகவையும் 

விரட்டுவோம்...  வீழ்த்துவோம்... 


அருந்ததியருக்கு 18% முழு இட ஒதுக்கீடு பங்கு உரிமையை வழங்கியதாக திமுக சொல்லி பெருமை பீற்றிக்கொள்கிறது

 .... அப்படி என்றால்  மறுபுறம்  பறையர்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை பறித்த கட்சி திமுக  அதற்கு துணை போன விசிக ஆகிய இரண்டு கட்சிகளையும்  பறையர் பள்ளர் புதிரைவண்ணார் குறவர் உட்பட அருந்ததியர் அல்லாத 69 பட்டியல் சாதிகளும் புறக்கணித்தே  ஆக வேண்டும்...


 அப்படித்தானே பறையர்கள் தனது தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்...  இவற்றை பறையர்கள்  சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது... மாறாக திமுகவும் விசிகவும் பறையர் சமூகத்திற்கு செய்த மிகப்பெரிய வரலாற்று துரோகமும் அரசியல் துரோகமும்  ஆகும்...

 அருந்ததியர்களுக்கு 3% முன்னுரிமை வழங்கிவிட்டு மீதமுள்ள 15%-திலும் பொதுப்  பங்கீடாக மொத்தமாக 18%திலும் இட ஒதுக்கீட்டு உரிமை வழங்கி அருந்ததியர்களுக்கு தாரை வார்த்துள்ளார்கள்... 


திமுக முஸ்லிம்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு வழங்கியபோது மீதமுள்ள 26.5% இட ஓதுக்கீட்டில் வரவிடாமல் தடுத்து உள்ளது... மேலும் roster வரிசை எண் 15 ல் வைத்தது... முஸ்லிம்களுக்கு  முன் இதர இந்து மற்றும்  கிறிஸ்த்தவ BC மக்களுக்கு முஸ்லிம்களுக்கு முன்பாக roster வரிசை எண் 4 .8.10.14  ஐ வழங்கி உள்ளது... மேலும் MBC க்கு வரிசை எண் 3...7....13 வழங்கி உள்ளது... 


ST வகுப்புக்கு வரிசை எண் 50 க்கு தள்ளி உள்ளது... 

ஆனால் SC இட ஒதுக்கீட்டில்  அருந்ததியர்க்கு SC க்கான முதல் வரிசை எண் 2 ஜ திமுக ஒதுக்கி உள்ளது... மேலும் அடுத்து வருகிற SC க்கான இரண்டாவது சுற்று எண் 6 லும் அருந்ததியர் வரும் வாய்ப்பை 

திமுக ஒதுக்கி பறையர்களை இட ஒதுக்கீட்டில் இருந்து வெளியேற்றி விட்டு கல்வி அரசு வேலை வாய்ப்பை நயவஞ்சகமாக பறித்து உள்ளது... 

இந்த இட ஒதுக்கீட்டு வரிசை முறைப்பற்றி (Roster System) பற்றி விசிக திருமா அவர்கள் எதிர்த்து குரல் கொடுக்கவில்லை... 


இந்த பாதிப்புக்களை உருவாக்கியது பிஜேபியா?... திமுகவா?... 

1995 ல்  இந்திய மத்திய அரசு உருவாக்கிய சட்டப்பிரிவு 16(4)A வை கடந்த 30 ஆண்டுகளாக நடைமுறை படுத்தாத திமுக 2009 ல் அருந்ததியர் இட ஒதுக்கீடை உருவாக்கி பெரும்பான்மையாக உள்ள பறையர் பள்ளர் சாதிகளின் இட ஒதுக்கீடை பறித்தது...  அந்த சமூகத்தின் வளர்ச்சியானது BC MBC மக்களின் வளர்ச்சிக்கு அருகே வந்து விடக்கூடாது என்ற சாதிய நோக்கமே...

 உண்மையிலேயே SC  மக்கள் முன்னேற  வேண்டும் என தி்முக  விசிக நினைத்து இருந்தால் கர்நாடகாவில் 2000 ம் ஆண்டு சட்டப்பிரிவு 16(4) A வை அமல் படுத்தியதை போல  தமிழ்நாட்டிலும்  நடைமுறை படுத்தி இருப்பார்கள்...

 தமிழ்நாடு பறையர் பேரவையின் தலைவர் சாமுவேல் பறையர் அவர்களைத் தவிர  பேச வேண்டிய பறையர் சமுதாயத் தலைவர்கள் எவரும் இந்த 30 ஆண்டுகளாக பேசவில்லை... 


பறையர் சமுதாய கட்சிகளின் 1999 to 2024 வரையிலான தேர்தல் அறிக்கைகளில் சட்டப்பிரிவு 16(4) A பற்றி பேசவில்லை... பஞ்சமி நில மீட்பு பற்றி பேசவில்லை...  பறையர்கள் சினிமா போன்று உணர்ச்சிகர மாயை அரசியலில் சிக்கி விசிலடிச்சான் குஞ்சுகளாக  உள்ளனர்...

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்