குடும்பனின் படிப்பில்

 திரு பெஞ்சமின் என்ற சிவராஜேந்திரன் அவர்களின் குடும்ப வரலாறு,அவர்கள் வாழ்ந்து வளர்ந்த கிராமங்களும்,குல தெய்வம் பற்றிய வரலாறுகளும்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழினவேந்தர் அண்ணன் திரு பெ.ஜான்பாண்டியன் அவர்களும்,

ஓய்வு பெற்ற ADSP திரு சி.ஜெயபிரகாஷ்  இருவரும் உடன் பிறந்தவர்களா?


உடன் பிறந்தவர்கள் என்றால் ஏன் இருவரும் பெயருக்கு முன்னால் இன்சியலை மாற்றிப் போட்டுக் கொள்கிறார்கள்?


இருவரின் தந்தை வேறு வேறு நபரா?


இருவரின் தந்தை வெவ்வேறு சமூகமா?


உடன்பிறந்த அண்ணன், தம்பிகளுக்கு எப்படி இரண்டு தந்தையை இருக்க முடியும்?


என்று பல மடத்தனமான கேள்விகளை கொடி திருடரின் உபிகள் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்திற்கு சம்பந்தமே இல்லாத நபர்களும் இதுபோன்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


அந்த முட்டாள்களுக்கான பதில் தான் இது.


மேலே இணைத்துள்ள நபர் ஜான்பாண்டியர் மற்றும் ஜெயபிரகாஷ் இருவரின் தந்தை பெஞ்சமின் என்ற சிவராஜேந்திரன்.


திரு பெஞ்சமின் என்ற சிவராஜேந்திரன் அவர்களின் குடும்ப வரலாறு,அவர்கள் வாழ்ந்து வளர்ந்த  கிராமங்களும்,குல தெய்வம் பற்றிய வரலாறுகளும்.


திருநெல்வேலி மாவட்டம் சிவலார்குளம் சுடலைமுத்து குடும்பன் இவர் சுடலை மாடசாமியை குடும்பதெய்வமாகவும் நீர்காத்த அய்யனாரை குலதெய்வமாகவும் கொண்ட இவர்களுக்கு இருமகன்கள்.


1,வேலாங்கி குடும்பன்,

2,மாசிலாமணி குடும்பன்.


இந்த இருவரில் வேலாங்கி குடும்பனுக்கு பிறந்தவர்தான் ஈசாக்கு குடும்பன் ஈசாகின் மனைவி ராகேல்(கீழ இலஞ்சி) இவரது தந்தை கீழ இலஞ்சி தாயார் பூர்வீகம் நெல்லை அருகே கள்ளத்திகிணறு.


வேலாங்கி குடும்பன் மகன் ஈசாக்கு குடும்பனுக்கு மூன்று குழந்தைகள் இவர்களின் சொந்தபந்தங்கள்  வாழும் கிராமங்கள் 

விஎம் சத்திரம், 

வீரவநல்லூர்,  

களக்காடு, 

அம்பை,

மேல இலஞ்சி,

கீழ இலஞ்சி, 

கடையநல்லூர், 

மங்களாபுரம், 

மீன்துள்ளி, 

கரடிகுளம்,

சங்கரன்கோவில், 

ஆவுடையாலூர்,

அழகியநாச்சிபுரம் உள்ளிட்ட 20 மேற்பட்ட கிராமத்தில் உள்ளனர்.


ஈசாக்கு மனைவி ராகேலுக்கு மூன்று குழந்தைகள்.


1,பாக்கியம் இவரது கணவர் பெயர் தானியேல் 

ஊர்:சங்கரன்கோவில் அருகே கரடிகுளம் 


2,ராசாமணி இவர் வாழ்ந்த ஊர் தென்காசி அருகே மேலாகரம் இவரது மகன் திரு.ஆறுமுகம் மற்றும் ராசாமணியின் மகள் பாக்கியம்  இன்றும் தென்காசி மேலகரத்தில் வாழ்ந்து வருகிறார்.


3,பென்சமின் (எ) சிவராஜேந்திரன்

இவர் (ஜான்பாண்டியர் மற்றும் ஜெயபிரகாஷ் இவர்களின் தந்தை)


இதில் மூத்தவர் ராசா மணியும் இளையவர் பென்சமின் (எ) சிவராஜேந்திரன் ஒரே வீட்டில் அக்கா,தங்கையை மணந்துள்ளனர்.


1,ராசாமணியின் மனைவி பெயர் கனகமணி இவருக்கு ஊர் சிவந்திபட்டி,


2,பென்சமின் மனைவி பெயர் ராஜம்மாள் இவரும் சிவந்திபட்டிதான்,


(கனகமணியும்,

ராஜாம்மாளும் உடன்பிறந்த சகோதிரிகள்)


பெஞ்சமின்(எ) சிவராஜேந்திரனுக்கு 4 பிள்ளைகள்.


1,திரு சிவஜெயபிரகாஷ் என்ற வன்னியகுடும்பன்

(ஓய்வு பெற்ற ஏ டி எஸ் பி )


2,திரு செல்லதுரை பாண்டியர்

(ராணுவ அதிகாரி)


3,திரு ஜான்பாண்டியர்

(தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்)


4,திரு விஜயகுமார்

(IOB வங்கி அதிகாரி)


இந்த நால்வரில் மூத்த களப்போராளியான செல்லதுரை பாண்டியர் படுகொலை செய்யப்பட்டு இறந்துவிட்டார்.


இதில் தென்காசி தாலூகா சிவலார்குளம் கிராமத்திலிருக்கும் ஈசாக் குடும்பன் மகன்,கிருஸ்தவர் விவசாயம் ராசாமணி மற்றும்  மேற்படியாரின் தம்பி பென்சமின் ஆகிய  இருவருக்கும் சுடலைமுத்து குடும்பன் மகன் வேலாங்கி குடும்பன் மற்றும் மாசிலாமணி குடும்பன் ஆகிய இருவரும் எழுதி கொடுத்த கிரய பத்திரம் என குறிப்பிட்டுள்ளது.

இன்றும் தென்காசி பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவுகள் உள்ளது.இவர்களும் தென்காசி கடைகோடி பாண்டிய வம்சத்தோடு தொடர்புடையவர்கள்.


மேலும் சிலதகவல்...

திரு ஜெயபிரகாஷ் வன்னிய குடும்பனின் (ஏ டி எஸ் பி ஓய்வு )

மனைவி

சந்திரமாலா இவருக்கு சொந்தஊர் கயத்தாறு அருகேயுள்ள தெற்கு மயிலோடை


சந்திரமாலாவின் தாயுடன் பிறந்த அண்ணன் அதாவது தாய்மாமன் பெயர் விக்டர்.


இந்த விக்டரும், தேக்கம்பட்டி பாலசுந்தரராசும் ஒரே குடும்பத்தில் சகோரிகளை எஸ்தர் மற்றும் செல்லம்மாள் மணந்துள்ளனர்.


விக்டரின் மனைவி பெயர் எஸ்தர்


இந்த எஸ்தரின் உடன்பிறந்த அக்காதான் பாலசுந்தரராசுவின் கடைசி மனைவி செல்லம்மாள்.


திரு.பெஞ்சமின் (எ)சிவராஜேந்திரன் அவர்களின் மனைவி திருமதி ராசம்மாள் அவர்களின் பெற்றோர் சிவந்திபட்டி கந்தன் குடும்பன் அவர்கள் மாசான கோயில் வகையறாக்கள், மற்றும் மனைவி  அனந்தம்மாள். 


அனந்தம்மாள் பெற்றோர் கடம்பூர் சக்கமாபுரத்தை சேர்ந்த திருமதி வெள்ளையம்மாள்,

இவரது கணவர் பாஞ்சாலங்குறிச்சி கவர்ணகிரி  சேர்ந்தவர்,

இவர்களது உறவுகள் தூத்துக்குடி அருகே உள்ள  எப்போதும்வென்றான் கிராமத்தைச் சுற்றி இடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.


மற்றும்


இவர்களில் திரு.செல்லத்துரை பாண்டியன் மனைவி ஆனந்தி இவர் தென்காசி ஆயக்குடி காசிதர்மம் சேர்ந்த ஆறுமுகம் மனைவி தபசியம்மாள்,

ஆறுமுகத்தின் அக்காள் பாக்கியம் கணவர் முத்தையாகுடும்பனின் மகள் ஆனந்தி ஆவார். செல்லத்துரையின்   மகள் திருமதி ரேனுகா மற்றும் திரு.ஜெயபிரகாஷ் மற்றும் சந்திரமாலா  மகள் மல்லல் கணவர் ஶ்ரீ்வைகுண்டம் சேர்ந்த சின்னத்துரை,இவரது தந்தை சண்முகசுந்தரகுடும்பன் மனைவி ராசம்மாள்,ராசம்மாள் அவர்களின் தங்கை பத்மாவதி என்பவர்.இவர்தான் ஜெயபிரகாஷ் மகன் வர்மனின் மனைவி தீபிகாவின் தாயார் மற்றும் மகன் வர்மன் மனைவி தீபிகா கோவில்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்த செல்லையாகுடும்பன் மற்றும் பத்மாவதியின் மகள் ஆகியோர் பேரக்குழந்தைகளை கொண்டு இருப்பதால் இன்றுவரை 5,6 தலைமுறைக்கான இவர்களின்  வரலாற்று பதிவு  தொடர்கிறது.


தமிழினவேந்தர் அண்ணன் ஜான்பாண்டியர் அவர்கள் தன்னுடைய பெயருக்கு முன்னால் பெ.ஜான்பாண்டியன் அதாவது நான் பெஞ்சமின் மகன் என்று போட்டுக்கொள்கிறார்.


அண்ணன் ஜெயபிரகாஷ் அவர்கள் தன்னுடைய பெயருக்கு முன்னால் சி.ஜெயபிரகாஷ் என்று போட்டுக்கொள்கிறார், அதாவது நான் சிவராஜேந்திரன் மகன் என்று போட்டுக்கொள்கிறார்.


மொத்தத்தில் பெஞ்சமினும், சிவராஜேந்திரனும் ஒரே நபர்கள் தான்,சிவராஜேந்திரன் என்பவர் இந்துவாக இருந்தபோது உள்ள பெயர்,பின்பு கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதால் பெஞ்சமின்,


அதனால் பெஞ்சமின் என்ற சிவராஜேந்திரன் என்று போட்டுக் கொள்கின்றனர்.


வரலாறுகளையும் கால சுவடுகளையும் ஒருபோதும் அழிக்க முடியாது.


✍️ Pandiyar vision

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்