குடும்பனின் வரலாற்றில்

 மூவேந்தர்கள் தமிழகத்தை ஆட்சி செய்த காலத்தில் யாரும் தமிழ்நாட்டின் மீது படையெடுக்கும் எண்ணமே இல்லாமல் பயந்து வாழ்ந்த காலம் சங்ககாலமாகும்.

 மோரியர், ஆரியர், கோசர், வடுகர் என யாரும் வடவேங்கடத்திற்குத் தெற்கே காலடி வைத்தது கிடையாது . 

எல்லையிலேயே அடித்து விரட்டப் பட்டனர். அதாவது மிகப் பெரிய மோரியர் படை சிற்றரசர்களிடம் தோற்றுப் பின்வாங்கி ஓடியது. கோசர்களை மோகூர்ப் பழையன் மாறன் ஒடுக்கி விரட்டினான். ஆரியர்களை மலையமான் திருமுடிக்காரி விரட்டி அடித்தான். 

“ இளம்பல் கோசர் விளங்கு படை”- புறம்-169,

“ ஒன்று மொழிக் கோசர்”- குறுந்- 73,

“ கடந்தடு வாய்வா ளிளம்பல் கோசர்”- மதுரைக்- 773

“ விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்

திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த”- புறம்- 175- 6-7

ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையார் என்ற புலவர் பாடியது. இந்த ஆதனுங்கனை மல்லன் என்றும் , கிழவன் என்றும் வேங்கட மலையை ஆட்சி செய்தவன் என்றும் புறம் 389 வது பாடல் கூறுகிறது. எனவே மூவேந்தர்கள் போரிடாமலேயே சிற்றரசர்களே மோரியர்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் மூவேந்தர்களும் குறுநில மன்னர்களும் கள்வர்களுடன் போரிட்டது இல்லை. அவர்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பதே வரலாறு. அதனால் தான் கள்வர்களை “ ஆறலைக்கும் கள்வர்கள்” எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. 

அதாவது வழிப்பறி செய்து விட்டு ஓடிவிடும் பண்பு கொண்டவர்கள் இக் கள்வர்கள். தமிழகத்தின் மேற்கு வாயிலில் அதியமான், மோகூர் பழையனும், நடுநாட்டில் மலையமான் திருமுடிக்காரியும், வேங்கடத்தில் தொண்டைமான், ஆதனுங்கன் , கரும்பனூரான் போன்ற குறுநில மன்னர்களும் எல்லையைக் காத்துள்ளனர். 

திருக்கோவிலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவன் மலையமான். இவன் வடக்கே இருந்து வந்த ஆரியர்களை தோற்கடித்து விரட்டியதாக நற்றிணை 170 வது பாடல் குறிப்பிடுகிறது.

“ எழுமினோ எழுமின்எங் கொழுநற்கு ஆக்கம்

ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப்

பலருடன் கழிந்த ஒள்வாள் மலையனது

ஒருவேற்கு ஓடி யாங்குநம்

பன்மையது எவனோஇவள் நன்மைதலைப் படினே”- நற்றிணை- 170- 5-9

பாடல் வரிகள் மலையமானது ஒளிரும் வேல்கம்பைப் பார்த்த உடன் ஓடிவிட்டதாக புலவர் கூறுகிறார். 

மூவேந்தர்களுக்கும் படையுதவி செய்தவன் இத் திருமுடிக்காரி. இவனை இன்று ந்த்தமான்கள் மலையமான்கள் என்ற சாதியினர் தங்களுடைய அரசன் எனப் பொய்யான வரலாற்றைக் கூறி மக்களைத் திசைதிருப்புகின்றனர். 

மூவேந்தர்கள் மரபில் வந்தவன் இவனென புறம் 126 வது பாடல் இதைத் தெளிவு படுத்தும். 

“ ஒன்னார் யானை யோடைப்பொன் கொண்டு

பாணர் சென்னி பொலியத் தைஇ

வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்

ஓடாப் பூட்கை வுரவோன் மருக”- புறம்-126-1-4

யோடை- ஓடை- முகப்படாம்

வாடாத் தாமரை- பொற்றாமரை

பூட்கை- வலிமை, யானை

என்ற பாடல் வரிகள் மூவேந்தர் வழி வந்தவன் என்பதை விளக்கும்.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்