குடும்பனின் பார்வையில்

 https://www.facebook.com/share/r/1Cq1RygQgr/https://www.facebook.com/share/r/1Cq1RygQgr/

[20/11, 08:44] தவறான வரலாறு பேசுகிறார்.

 கிபி 17 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இராமநாதபுரம் என்ற பெயரும் சேதுபதிகள் என்ற பெயரும் வரலாற்றில் இடம் பெறவில்லை. 

1417இல் நரச நாயக்கன் இராமேஸ்வரம் வரும் போதும், 1540 இல் சலுக்குராய திருமலை மன்னன் இராமேஸ்வரம் வருகையின் போதும் சேதுபதிகள் பற்றிய குறிப்புகள் இடம் பெறவில்லை. 

கிபி 1292 இல் வருகை தந்த மார்க்கோ போலோவின் குறிப்புகளில் இராமநாதபுரமோ , சேதுபதிகளோ இருந்தது பற்றிய தகவல்கள் இல்லை. 

அதேபோல் கிபி 1343 இல் மதுரை வந்த இபான் பதூதா என்பரின் குறிப்புகளிலும் சேதுபதிகள் பற்றிய செய்திகள் காணப்படவில்லை. 

கிபி 1590 களில் கட்டப்பட்ட சொக்கநாதசாமி கோவில் கல்வெட்டில் தும்பிச்சி நாய்க்கன் பற்றிய குறிப்புகள் மட்டுமே உள்ளன. சேதுபதிகள் இல்லை.

 எனவே சேதுபதிகள் கிபி 1600க்குப் பிறகே சேதுபதிகள் ஆட்சியாளனாக வந்திருக்க வேண்டும். 

கிபி 1678-80 களில் சூரன் கோட்டையைக் கற்கோட்டையாகக் கட்டிய இரெகுதாத கிழவன் சேதுபதி என்பவனே இராமநாதபுரம் என்ற பெயரைக் கொடுத்தவன். 

இவர் கூறும் சடைக்கத்தேவன் தும்பிச்சியை வீழ்த்தி கிபி 1604- 1621 வரை ஆட்சி செய்தவன். ஆனால் சேதுபதி என்ற பட்டம் இல்லாதவன். 

சேதுபதிகள் இராமநாதபுரம் சமஸ்தானத்தை மதுரை பாளையக்காரன் போலவே பல பாளையங்களாகப் பிரித்து ஆட்சி செய்தான். 

திருமயம், சிவகங்கை, கமுதி போன்ற பல பாளைய அமைப்புகளை வைத்து தன்னுடைய உறவுகளை ஆட்சியில் அமர்த்தினான்.

 அலுவல் மொழியாக தெலுங்கே இருந்தது. சேதுபதிகள் தெலுங்கிலேயே கையெழுத்திட்டனர். இவர்கள் தெலுங்கர்கள் என்பது மட்டும் உறுதி.

 ஆனால் இலங்கையில் இருந்து வந்தவர்களா? அல்லது ஆந்திராவில் இருந்து வந்தவர்களா என்பது வரலாற்றில் இருட்டிப்புச் செய்யப் பட்டுள்ளது. 

(நினைவில் வைத்து எழுதியதால் சில ஆண்டுகள் மாற்றத்துக்குரியது).

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்