குடும்பனின் பார்வையில்

 ✒️ தேட நாதியற்ற "தேவேந்திரத் தேக்கு மரங்கள்" ...⁉️


 பட்டியல் வெளியேற்றம் தான் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் இலக்கு..


ஒரு சில கிறிஸ்தவ தேவேந்திரர்கள் தாம் BC பட்டியலில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

அது ஒரு மாயை அவ்வளவுதான்.


BC பட்டியலில் இருந்தாலும் தலித் என்று தான் உங்களை திருச்சபையும், ஊடகங்களும், பொதுச்சமூகமும் அடையாளப்படுத்துகின்றன.


எம்மை மற்றவர்கள் SC என்கிறார்கள், திருச்சபை தலித் என்கிறது என்ன வேறுபாடு?


இந்த தந்திர நுட்பத்தை நாம் புரிந்து கொள்ளத் தவறுகிறோம்..


எந்தப் பட்டியலில் இருந்தாலும் கள்ளர் மறவர் அகமுடையார் சமூகங்கள் தம்மை முக்குலத்தோர் என்று தான் தொடர்ந்து அடையாளப்படுத்துகின்றன.

தமது இளைய தலைமுறைக்கு Superiority சிந்தனையை விதைக்கிறார்கள்..


ஆனால் மள்ளங்குடியிருப்புகள் அந்தோணியார் புரங்களாகிப் போயின.

குடும்பர்கள் தலித்துகளாக மாற்றப்படுகிறார்கள்.

இந்த அடையாள மாற்றத்தின் பின்னணியை நாம் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை..


ஆகவே இளம் சிறார்களிடமாவது பட்டியல் மாற்றத்தின் அவசியத்தைப் பேசுங்கள்.


அவர்களாவது விடுதலை பெறப் போராடட்டும்..


இப்போதைய தலைமுறை பட்டியல் வெளியேற்றத்தின் அவசியத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை.


அதற்கு ஆதரவு கொடுப்பதாகவும் தெரியவில்லை..


தேர்தல் நெருங்குகிறது..


நாம் வேடிக்கை தான் பார்க்கிறோம்..


ஒன்றுக்கும் உதவாத முருங்கை மரங்கள் எல்லாம் உத்திரமாகப் போவதாகப் பேசித்திரிகின்றன.


ஆனால் "தேவேந்திரத் தேக்குமரங்கள்" தேட நாதியற்றுக் கிடப்பது அவலம் அல்லவா..


முன்பெல்லாம் எம் சமூகத்தில் கற்றவர்கள் இருந்தார்கள்..


அடையாளத்தோடும் வீரியத்தோடும் வாழ்ந்தார்கள்.


இப்போது படித்தவர்கள் இருக்கிறார்கள்...


பண்பாடுகளும் போச்சு அடையாளங்களும் போச்சு..


மடை மாற்றுகிற வேலைகளைத்தான் படித்தவர்களில் பலர் செய்கிறார்கள்..


கூலிக்கு மாரடிக்கிற அரசியலில் உக்கார்ந்து ஒப்பாரி வைக்க ஆள் தேடாதீர்...


நீங்கள் குடிசைகளில் வாழ்ந்தாலும் மாடி வீடு கட்ட வேண்டும் என்று பிள்ளைகளிடம் பேசுங்கள்..


ஒருபோதும் பிள்ளைகளிடம் தாழ்வு மனப்பான்மையை விதைக்காதீர்...


அரசியலும், மதங்களும் அதைத்தான் செய்கின்றன..



பேசுங்கள் விவாதங்களாக மாறட்டும் ..


©️✒️ யாழி வாசகர் தளம்.

27.11.2025.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்