குடும்பனின் பார்வையில்

 ஈரோடு, திருப்பூர் பகுதிகள் 1960கள் வரையில் மிக வறட்சியான நிலப்பகுதி ஆகும். பேராயக் கட்சியின் ஆட்சியில் அப்போது அமைச்சராக இருந்த சுப்ரமணியன் தான் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தைக் கொண்டு வந்து வளமான பூமியாக்கினார். 

இவர் கூறும் 1633 காலக் கட்டத்தில் அங்கு விவசாயம் புன்செய் விவசாயம் தான். நெசவுத் தொழில் அப்போது அங்கு இல்லை. அதே போன்று கல்வி வளர்ச்சியும் இல்லை.

 இவர் கூறும் கைக்கோளர்கள் அரசனின் ஆபத்துதவிகள். அவர்கள் எங்கள் பரம்பரையில் வந்தவர்கள் தான் எனகிறார். அதோடு வீரபாகு என்ற கற்பனைப் படைத்தலைவனை முதலியார் இனம் என்று கூறி கைக்கோளப் படைகள் முருகனின் பாதுகாப்புப் படைகள் முதலியார் இனம் தான் என்று கொண்டு போகிறார். 

முதலியார்கள் வடுகப் படைகளுக்கு மிக அணுக்கமானவர்கள். அரியநாத முதலி காலத்தில் இருந்து நாயக்கப் படைகளுக்கு விசுவாசமாக இருந்து கள்ளர்களைத் திறமையாகப் பயன்படுத்திப் பாண்டியர்களை வீழ்த்தியது இந்த அரியநாத முதலிதான். இவன் தான் பாளையங்களாகப் பாண்டிய நாட்டைப் பிரித்துக் கூறுபோடும் ஆலோசனையைத் தந்தவன்.  


சந்திரமதிமுதலியார் ஒரு வட்டாரத் தலைவனாக இருக்கலாம்( local chieftain) . அதற்கு மேல் இவர்கள் கதைகளைக் கட்டமைக்கின்றனர். ஒரிசாவில் இருந்த வந்தவர்கள் தான் இந்தக் கைக்கோளமுதலிகள். இன்றுள்ள வளமையை அன்று இருந்தது போல் கட்டமைக்கிறார்கள்.  


இன்று ஒ(18.11.2025) உயர்கல்வி அமைச்சர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 1633 முதல் அரசிடம் பதிவு செய்யப் பட்ட ஆவணங்கள் இருக்கின்றன. அவற்றைப் படித்து ஆய்வு வரலாறு எழுதும் ஆய்வாளர்களுக்கு ₹ 50000 உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது ஒரு மோசடியாகத் தெரிகிறது. தமிழர்களின் வரலாறு மீமிகத் தொன்மை நோக்கி நம்மைச் செலுத்தும் போது 17 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆவணங்களை ஆய்வு செய்வது என்பது தமிழர்கள் வரலாறை கள்ளர் வடுகர் வரலாறோடு முடித்து விடும் எண்ணமும், கைபீதுகளை அழிக்கவும், அல்லது புரட்டிப் பேசுவதற்கும், 17 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு உள்ள வரலாறு ஆவணங்கள் ஏதுமற்ற கற்கனை வரலாறு என்று கட்டமைக்கவுமான கெடுநோக்கம் கொண்டதே மேற்சொன்ன அரசின் அறிவிப்பு.  


இன்னும்சொல்லப் போனால், இன்று அரசியல் பலத்திலும் பண பலத்திலும் செல்வாக்குச் செலுத்தும் சாதிகளையே மண்ணின் மக்களாகவும் வரலாற்றுத் தொல்குடிகளான மண்ணின் மக்களான மள்ளர்களை இருட்டிப்புச் செய்வதற்குமான முயற்சியே இந்த ஆய்வின் நோக்கம். 

ஏனெனில் 1633க்குப் பிறகு நமக்கு வரலாறு இல்லை. வடுகர்களால் மடிபறிக்கப் பட்டு ஒடுக்கப் பட்ட சாதியாக மாறிய குடும்பர்களின் வரலாறு ஆவணங்களில் ஒடுக்கப் பட்டதாகவே இருக்கும். 

கள்ளர்களையும், வடுகர்களையும் ஆட்சியாளர்களாகக் காட்டவே இது நடத்தப்படுகிறது. இவர்களின் கெடுநோக்கத்தை தோலுரித்து அம்பலப்படுத்த வேண்டும். 

இதன் பின்னுள்ள அரசியலை முறியடிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்