குடும்பனின் புரிதலில்

 கெர்போட்டம் தமிழனின் வானிலை அறிவியல்


அதாவது "கரு ஓட்டம்" என்பதே கர்ப்ப ஓட்டம் என்று மாறி கர்ப்போட்டம் என்றாகி இன்று காலண்டர்களில் கெர்ப்போட்டம் என்று காண்கிறது


நம்முடைய தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக கொண்ட சூரியவழி மாதங்கள் பின்பற்ற படுகிறது


இது தவிர வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்


அவ்வகையில் தனூர் மாதம் எனப்படும் மார்கழியில் சூரியன் தனூர் ராசி மண்டலத்தை கடக்கும் போது பூராட நட்சித்திரத்தை கடக்க பதினான்கு நாட்களை எடுத்து கொள்கிறது


இந்நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டுகொள்ளலாம்


இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்கள் ஆகும்


அதாவது மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள்


இதனை பெண்ணின் பத்துமாத கர்ப்பகாலத்துடன் ஒப்பிடுங்கள் மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒருவள் ஒன்பது மாதம் கழித்து புரட்டாசிக்கு பின் பிள்ளை பெறுவாள்


அவ்வகையில் இந்த கர்போட்ட நாட்களில் மழை முறையாக சூல் கொண்டால் ,ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி கார்த்திகையில் மழைபொழிவு அளவும் முறையாக இருக்கும்


இந்த கர்போட்ட நாட்கள் தோராயமாக டிசம்பர் 28 முதல் ஐனவரி 11ஆந் தேதி வரை அமைகிறது 


 


ஒரு எளிய விவசாயிக்கு தனூர் மாதம் பூராடம் நட்சத்திரம்லாம் தெரியாது இல்லையா??


எனவே மார்கழி மாதம் அமவாசையில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் "கர்போட்ட நாட்கள்" என்று நினைவில் வைத்து கொள்வார்கள்.இந்நாட்களில் லேசான தூறல் மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால் மேகம் சரியாக கரு கட்டி இருக்கிறது என்று பொருள்


எனவே வரும் அடுத்த ஆண்டு நல்ல மழையை எதிர்பார்க்கலாம்


மாறாக கர்ப்போட்ட நாட்களில் கனமழை பெய்து சூறைக்காற்று வீசினாலோ கடும்வெயில் இருந்தாலோ மேகத்தின் கருக்கலைந்து விட்டது என்று பொருள்


எனவே மார்கழியில் கன மழை பெய்தால் அடுத்த ஆண்டு பருவமழை பொய்க்கும் என அர்த்தம்


இன்றய வாழ்க்கையின் மாறுபட்ட சூழலியல் கேடுகளும் பருவநிலை மாற்றமும் மேகத்தின் கருக்கலைக்கும் வில்லன்களாக உருவெடுப்பதால்தான் ஒவ்வொரு வருடமும் மழையளவு குறைகிறது


இந்த கர்போட்ட நாட்களை கணித்து இன்றும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மானாவாரி( வானம் பார்த்த பயிர் ) பயிர்களை விதைக்கிறார்கள் விவசாயிகள்...


வருகின்ற 2026 ஆண்டிற்கான மழையை கணிக்கும் "கர்ப்போட்டம்". நீங்களே கணியுங்கள்.


(1).மார்கழி என்றழைக்கப்படும் சிலை மாதம் 14 ஆம் நாள் (ஆங்கில தேதி 29.12.2025) முன்பகல் 11:37 மணியிலிருந்து மார்கழி 15 ஆம் நாள் (ஆங்கில தேதி 30.12.2025) மாலை 05.37 மணிவரை இந்த 30 மணி நேர கர்ப்போட்டத்தின் தன்மையை பொருத்து அடுத்து வரும் “அருட்டோற்றம் [பிராபவ]" ஆண்டின் ஆனி [2026] மாத மழை அளவு இருக்கும்!


(2).மார்கழி என்றழைக்கப்படும் சிலை மாதம் 15 ஆம் நாள் (ஆங்கில தேதி 30.12.2025) மாலை 5:37 மணி முதல் மார்கழி 17 ஆம் நாள் (ஆங்கில தேதி 01.01.2026) மாலை 05:37 மணி வரை உள்ள 48 மணி நேர கர்ப்போட்டத்தை கொண்டு அடுத்து வரும் “அருட்டோற்றம் [பிராபவ]" ஆண்டின் ஆடி [2026]” மாத மழையளவு இருக்கும்


(3).மார்கழி என்றழைக்கப்படும் சிலை மாதம் 17 ஆம் நாள் (ஆங்கில தேதி 01.01.2026) மாலை 05:37 மணியிலிருந்து மார்கழி 19 ஆம் நாள் (ஆங்கில தேதி 03.01.2026) மாலை 05:37 மணி வரையுள்ள 48 மணி நேர கர்ப்போட்டத்தை கண்டு அடுத்து வரும் “அருட்டோற்றம் [பிராபவ]"ஆண்டின் ஆவணி [2026] மாத மழையளவு இருக்கும்!


(4).மார்கழி என்றழைக்கப்படும் சிலை மாதம் 19 ஆம் நாள் (ஆங்கில தேதி 03.01.2026) மாலை 05:37 மணியிலிருந்து மார்கழி 21 ஆம் நாள் (ஆங்கில தேதி 05.01.2026) மாலை 05:37 மணி வரையுள்ள 48 மணி நேர கர்ப்போட்டத்தை கண்டு அடுத்து வரும் “அருட்டோற்றம் [பிராபவ]" ஆண்டின் புரட்டாசி [2026] மாத மழையளவு இருக்கும். (தமிழர் வேளாண் நாட்காட்டி பிரபாகரன்-8190971323)


(5).மார்கழி என்றழைக்கப்படும் சிலை மாதம் 21 ஆம் நாள் (ஆங்கில தேதி 05.01.2026) மாலை 05:37 மணியிலிருந்து மார்கழி 23 ஆம் நாள் (ஆங்கில தேதி 07.01.2026) மாலை 05:37 மணி வரை உள்ள 48 மணி நேர கர்ப்போட்டத்தை கண்டு அடுத்து வரும் “அருட்டோற்றம் [பிராபவ]" ஆண்டின் ஐப்பசி [2026] மாத மழையளவு இருக்கும்


(6).மார்கழி என்றழைக்கப்படும் சிலை மாதம் 23 ஆம் நாள் (ஆங்கில தேதி 07.01.2026) மாலை 05:37 மணியிலிருந்து மார்கழி 25 ஆம் நாள் (ஆங்கில தேதி 09.01.2026) மாலை 05:37 மணி வரை உள்ள 48 மணி நேர கர்ப்போட்டத்தை கண்டு அடுத்து வரும் “அருட்டோற்றம் [பிராபவ]" ஆண்டின் கார்த்திகை [2026] மாத மழையளவு இருக்கும்!


(7).மார்கழி என்றழைக்கப்படும் சிலை மாதம் 25 ஆம் நாள் (ஆங்கில தேதி 09.01.2026) மாலை 05:37 மணியிலிருந்து மார்கழி 26 ஆம் நாள் (ஆங்கில தேதி 10.01.2026) மாலை 05:37 மணி வரையுள்ள 24 மணி நேர கர்ப்போட்டத்தை கணித்து அடுத்து வரவுள்ள “அருட்டோற்றம் [பிராபவ]" ஆண்டின் மார்கழி [2026] மாத மழையை கணிக்க வேண்டும்,


(8).மார்கழி என்றழைக்கப்படும் சிலை மாதம் 26 ஆம் நாள் (ஆங்கில தேதி 10.01.2026) மாலை 05:37 மணியிலிருந்து மார்கழி 26 ஆம் நாள் (ஆங்கில தேதி 10.01.2026) இரவு 09:52 மணி வரையுள்ள 4:15 மணி நேர கர்ப்போட்டத்தை கணித்து அடுத்து வரும் “அருட்டோற்றம் [பிராபவ]" ஆண்டின் தை [2027]” மாதத்தின் மழையை கணிக்க வேண்டும்!


(9).மார்கழி என்றழைக்கப்படும் சிலை மாதம் 26 ஆம் நாள் (ஆங்கில தேதி 10.01.2026) மாலை 09:52 மணியிலிருந்து மார்கழி 26 ஆம் நாள் (ஆங்கில தேதி 11.01.2026) 01:52 மணி வரையுள்ள 16 மணி நேர கர்ப்போட்டத்தை கணித்து அடுத்து வரும் அருட்டோற்றம் [பிராபவ]" ஆண்டின் [2027] மாசி , பங்குனி , நச்சுப்புழை [பிலவங்க] ஆண்டின் சித்திரை , வைகாசி ஆகிய 4 மாதத்தின் மழையை கணிக்க வேண்டும்!


கணிக்கும் முறைகள் :

௧(1). வானம் தெளிவாக இருந்தாலோ, ஆங்காங்கே வெண் மேகங்கள் மட்டுமே இருந்தாலோ, மழையோ, தூறலோ இருந்தால், வரும் காலத்தில் மழை இராது அல்லது மிகவும் குறைந்த மழையோ பொழியும்,


௨(2). மழைமேகம் குழல் குழலாக நகர்ந்துகொண்டே இருந்தால் வருங்காலத்தில் நல்ல மழை இருக்கும் . மழை மேகம் கருமையாக இருந்தால் மிக நல்ல மழை இருக்கும் ..


பலன்: நீங்கள் வானத்தை பார்க்கும் இடத்தை சுற்றி 5 கி.மீ சுற்றளவிற்கு மட்டுமே பொருந்தும்.


குறிப்பு : மேலே குறிப்பிட்ட நேரம் , மதுரைக்கும் , ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் இடைப்பட்ட பகுதிகளுக்கும் பொருந்தும் , மதுரைக்கு தெற்கே உள்ளவர்கள் , குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் 15 நிமிடங்களை கழித்துக்கொள்ளவும் .


Data - prabhakar 


#arunkumarweather #தமிழகவானிலை

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்